விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, February 27, 2011

    தீபிகா படுகோனே அசின் மோதல்


    இந்திப் படமொன்றில் தீபிகா படுகோனேக்கு வந்த வாய்ப்பை அசின் தட்டி பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறதாம்.

    ரஜினியுடன் ஜோடி சேர தீபிகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. அதே படத்தில் அசினும் வாய்ப்பு பிடித்துள்ளார்.

    ஒருவர் மீது ஒருவர் நெருக்கமானவர்களிடம் புகார் கடிதம் வாசித்து வருகின்றனர்

    தமிழில் தபாங்

    அமீர்கான் நடித்து ரிலீசான தபாங் இந்திப் படம் மெகா ஹிட்டாகி வசூலை குவித்தது. இது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க தயாராகிறது. தமிழிலும் ரிமேக் செய்ய இதன் கதை உரிமையை வாங்க பலத்த போட்டி ஏற்பட்டது.

    இறுதியில் உத்தம புத்திரன் பட தயாரிப்பாளர்கள் பாலாஜி ஸ்டூடியோஸ் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்டா இருவரும் பெரிய விலை கொடுத்து வாங்கி விட்டனர். முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்க ஆர்வப்படுகின்றனர்.



    Posted by விழியே பேசு... at 6:57 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    மலையாளத்தை புறக்கணிக்க மனமில்லை - சீடன் நாயகி அனன்யா


    மலையாள படவிழாவை புறக்கணிக்க மனமில்லாததால் தமிழில் வெளியான சீடன் பட புர‌மோஷனுக்கு வரவில்லை என்று நடிகை அனன்யா கூறியுள்ளார். சீடன் படத்தில் குட்டி ஜோதிகா போல கொளுகொளுவென திரையை வலம் வந்து ரசிகர்களை படுத்தியெடுக்கிறார் அனன்யா. சந்தோஷம், காதல், அழுகை என சகட்டுமேனிக்கு சகலத்தையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் அனன்யாவுக்கு அடுத்தடுத்த தமிழ்ப்பட வாய்ப்புகள் கிடைப்பதென்னவோ நிச்சயம்தான்.

    சீடன் படத்தில் அம்மணியில் நடிப்பு பாராட்டுதலுக்குரிய வகையில் இருக்கிறது என்பது ஒருபுறமென்றால், அம்மணி தமிழ் மலையாள சினிமா மீது காட்டு பாச பரிவர்த்தனைகள் எல்லாம் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக் எரிச்சலூட்டும் வகையில் இருக்கிறது. தமிழ் திரையுலகின் சகலகலா வல்லவன் கமல்ஹாசனுக்கு கேரளாவில் பாராட்டு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலையாள நடிகர் சங்கத்தின் உத்தரவை ஏற்று தனது பட புரமோஷனுக்கு கூட வராமல் கேரளாவே கதியென கிடக்கிறார் அனன்யா. இதுபற்றி அவர் கூறுகையில், எனக்கு தமிழ் திரையுலகம் முக்கியம்தான்; அதேமாதிரி மலையாள திரையுலகை புறக்கணிக்கவும் மனமில்லை. கேரள திரையுலகம் சார்பா ஒரு நிகழ்ச்சியை நடத்திக்கிட்டு இருக்காங்க. அதில் கலந்துக்கணும்னு எல்லா நடிகர் நடிகைகளுக்கும் உத்தரவு. இந்த நேரத்தில் அதை புறக்கணிச்சுட்டு வர முடியாது, என்று கூறுகிறார் அனன்யா.


    Posted by விழியே பேசு... at 6:35 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    அர்ச்சகர் தேவநாதன் காட்சிக்கு சென்சார் தடை!


    ஆலயத்தில் அர்ச்சகர் தேவநாதன்‌ கோயிலுக்கு வரும் பக்தைகளை மயக்கி, உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவ சிவா என்ற பெயரில் புதிய படமொன்றை தொடங்கினார் டைரக்டர் சிவாஷ். நாயகர்களாக குமரன் கார்த்திக், சிவாஷ் ஆகியோரும், நாயகிகளாக சுஹானி, நட்சத்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில் காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் தேவநாதன் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    சூட்டிங் முடிந்து தணிக்கைக்குழு சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், தேவநாதன் தொடர்பான காட்சியில் இடம்‌பெற்றிருக்கும் வசனங்களை அனுமதிக்க மறுத்தனர்.  சர்ச்சைக்குரிய அந்த வசனத்தை நீக்கும்படி டைரக்டரிடம், ‌தணிக்கை குழுவினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அர்ச்சகர் தொடர்பான காட்சிகயில் உள்ள வசனங்களை மட்டும் நீக்க டைரக்டர் சம்மதித்தார். இதையடுத்து வசனங்களை நீக்கி விட்டு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதுபற்றி இயக்குனர் சிவாஷ் கூறுகையில், "நாம் சாமி என்று கடவுளையும் கோவில் குருக்களையும்தான் ஒப்பிடுகிறோம். அந்த குருக்களே தப்பாக நடந்து கொள்ளும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவே குருக்களுக்கு வந்தால் சமுதாயம் எப்படி பாதிக்கப்படும் என்பதைத்தான் இந்தப் படத்தில் காட்சிபடுத்தியுள்ளோம். இப்படத்தில் அர்ச்சகர் தேவநாதனின் செக்ஸ் லீலைகள் பற்றி இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்து நீக்கிவிட்டனர், என்றார்.


    Posted by விழியே பேசு... at 6:17 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    அமெரிக்காவில் 10 ஆம் தமிழ் இணைய மாநாடு ஆராய்ச்சி கட்டுரைகளை அனுப்பி பங்கேற்கலாம்


    அமெரிக்காவில் நடக்க இருக்கும் 10ஆம் தமிழ் இணைய மாநாட்டுக்கு, தமிழ்க்கணிணி ஆராய்ச்சி கட்டுரைகளை அனுப்பி பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாநாடு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
    தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில், டாக்டர்.மு.ஆனந்தகிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி கோவையில் செம்மொழி மாநாட்டோடு இணைந்து 9ஆம் தமிழ் இணைய மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
    அடுத்த மற்றும் பத்தாம் தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெறுகிறது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஜூன் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
    இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் ஆகியோர் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். இம்மாநாட்டின் மையக் கருத்தாக “கணினியினூடே செம்மொழி’’ என சூட்டப்பட்டுள்ளது. 
    இம்மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகளைப் படைக்க விரும்புவோர் கணினி வழித் தமிழ் ஆய்வுகள் குறித்து தங்களின் கட்டுரைச் சுருக்கங்களை மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் ti2011@infitt.org  என்னும் முகவரியில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 
    கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் உங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி வேண்டுகிறோம்.
    கணினி வழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு: தமிழ் இலக்கியத் தரவை அலசி ஆய்தல், தமிழ் இலக்கியங்களுக்கான தேடுபொறிகளை அமைத்தல், தமிழ் இலக்கியங்களின் காலங்களை அறுதியிடல், இலக்கிய ஆசிரியர்களின் நடையை அறிதல் போன்ற கணினி வழி இலக்கிய ஆய்வு குறித்தான கணினி நிரலிகள்.
    தமிழ்க் கணினி நிரல்கள்: சொற்பகுப்பு நிரலிகள், சொற்திருத்திகள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதிகள் அமைத்தல்.
    தரவுமென்பொருள், தமிழ் குறித்தான நிரலிகள் மற்றும் கணினி செயலாக்கிகள்.
    தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்கக் கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் தர நிர்ணயப்படுத்தல். இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள்.
    இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடு பொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், தமிழ்த் தேடுபொறிகள்.
    தமிழ் இணையம்: தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா நிரலிகள், செய்திப்பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப்பக்கங்கள், தமிழ் மின்வணிக நிரலிகள்...
    இணையம் மற்றும் கணினி வழி தமிழ்க் கற்றல் மற்றும் கற்பித்தல்
    மேற்கூறிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் தங்களது கட்டுரையைப் படைக்க விரும்புவோர் மார்ச் 15ஆம் தேதிக்குள் கட்டுரைச் சுருக்கத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களது கட்டுரைகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம். 
    தமிழில் உள்ள கட்டுரைகளைத் தமிழ் யுனிகோட்டில் மட்டும்தான் பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  தேர்வு செய்யப்பட்ட கட்டுரையாளர்களை ஏப்ரல் 15ஆம் தேதி 2011க்குள் தொடர்பு கொள்வோம். 
    ஒன்று அல்லது இரண்டு பக்கக் கட்டுரைச் சுருக்கத்தை மாநாட்டு அலுவலகத்துக்குti2011@infitt.org என்ற மின் முகவரிக்கு அனுப்புவதோடு கட்டுரைச் சுருக்கத்தின் ஒரு நகலை ti2011-cpc@infitt.org என்ற முகவரிக்கும் மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கூடுதல் தகவல்களுக்கு: http://www.infitt.org/ti2011/  http://www.tamilinternetconference.org/ ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது



    Posted by விழியே பேசு... at 5:35 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    நடுநிசி நாய்கள் கெளதம் மேனன் வீடு முற்றுகை

    நடுநிசி நாய்கள் படத்தில் தாய்-மகன் உறவை கொச்சைப்படுத்தியிருப்பதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் இயக்குநர் கெளதம் மேனன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    கெளதம் மேனன் இயக்கி வெளியாகியுள்ள படம் நடுநிசி நாய்கள். இப்படத்தில் படத்தின் நாயகன் வீரா, தனது வளர்ப்புத் தாயுடன் உறவு கொள்வது போல காட்சி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் படம் முழுக்க வக்கிரங்களும், வன்முறையும் தலைவிரித்தாடுவதாக சர்ச்சை வெடித்துள்ளது. வளர்ப்புத் தாய்-மகன் உறவுக் காட்சிகளுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதைக் கண்டித்து கெளதம் மேனன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அது அறிவித்திருந்தது.

    அதன்படி தரமணியில் உள்ள மேனன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த இன்று அக்கட்சியினர் திரண்டனர். மேனனை கடுமையாக கண்டித்துக் கோஷங்களும் எழுப்பினர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், 20 பேரைக் கைது செய்தனர்.



    Posted by விழியே பேசு... at 4:34 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் பாலிவுட்

    தபாங் பட வெற்றிக்கு பிறகு இனி காதலே வேண்டாம் என்று உறுதிமொழி ஏற்ற சல்மான் கான் மீண்டும் காதலில் விழுந்துள்ளாராம். இந்த முறை அவரது காதலியாகி இருப்பது பிரிட்டிஷ் மாடல் ஹேசல்.

    நாற்பதுகளிலும் அசத்தலாய் இளம்பெண்களை கவரும் வகையில் வலம் வந்து கொண்டிருப்பவர் பாலிவுட் ஹீரோ சல்மான் கான். சல்மான் கானுக்கும் காதலுக்கும் ஏக தூரம் போல. படத்துக்குப் படம் சல்மான் சட்டையைக் கழற்றி கடாசுவது போல அவரை விட்டு காதலிகளும் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

    அவரது சூப்பர் ஹாட் காதலிகள் அனைவரும் இறுதியில் குட்பை சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் மன்மதன் பார்வை அவரை விட்டு நீங்காது இருக்கிறது. ஒரு ஆள் போனால் அடுத்த ஆள் சட்டென்று வந்து உட்கார்ந்து கொள்கிறார். தற்போது சல்மானின் காதலிகள் பட்டியலில் சேர்ந்திருப்பவர் பிரிட்டிஷ் மாடல் ஹேசல்.

    அன்மையில் சல்மானுக்கு யாரோ புது காதலி கிடைத்துள்ளதாக கிசுகிசு வந்த வண்ணம் இருந்தன. தற்போது அது உண்மையாகிவிட்டது. அவரும், ஹேசலும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புனேவில் பைக்கில் பறந்து செல்வதை சிலர் பார்த்திருக்கின்றனர். இருவரும் கணிசமான நேரத்தை ஒன்றாக செலவழிப்பதாகதவும் தெரிகிறது.

    தற்போது சல்மான் சித்திக் இயக்கத்தில் பாடிகார்ட் (தமிழில் விஜய் நடித்த காதலன்) படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் ஹேசல் வந்து விடுகிறாராம். அங்கும் இருவரும் ஜோடியாகவே இருக்கிறார்களாம்.

    சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் என சல்மானின் காதல் வரிசையில் தற்போது ஹேசல் இணைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.


    Posted by விழியே பேசு... at 4:00 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    டிரஸ் மாறும் அமலா பால்

    இதுவரை கிராமத்து பைங்கிளியாக பவனி வந்த அமலா பால் முதல் முறையாக மாடர்ன் டிரஸ் மங்கையாக ரசிகர்களின் மனம் கவரப் போகிறாராம்.

    கேரளத்திலிருந்து வந்த இந்த அழகிய மைனா, சிந்து சமவெளி மூலம் ரசிகர்களின் கவனிப்புக்குரியவராக மாறினாலும், மைனாதான் ஏற்றம் தந்து நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

    மைனா படத்தி்ல் அவருடைய நடிப்புக்கும், எளிமையான அந்த அழகுக்கும், இன்று முன்னணி ஹீரோக்கள் ரசிகர்களாகி விட்டார்கள். முக்கிய நடிகர்களின் படங்களில் ஜோடி சேரத் தொடங்கியுள்ள அமலா பால் இதுவரை மாடர்ன் டிரஸ் போட்டு எந்தப் படத்திலும் நடித்ததில்லை.

    ஆனால் முதல் முறையாக முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் மாடர்ன் கேர்ள் ஆக, அதாவது நகரத்து நாயகியாக வரப் போகிறாராம்.

    மறைந்த முரளியின் மகன் அதர்வாதான் இப்படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலா பால்.

    இப்படத்தில் தனக்குக் கிடைத்துள்ள வேடம் அழகானது, அனைவரையும் கவரக் கூடியது என்று கூறும் அமலா, முதல் முறையாக மாடர்ன் டிரஸ் போட்டு இப்படத்தில் நடித்துள்ளேன். என்னை கிராமத்துப் பெண்ணாகவே பார்த்துப் பழகிய தமிழக ரசிகக் கண்களுக்கு இது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் சிரிப்புடன்.

    அதையும்தான் பார்த்துருவோமே...!


    Posted by விழியே பேசு... at 3:07 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.