Saturday, April 13, 2013

அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3


ஹைதராபாத் ஓட்டலில் தங்கி இருந்த போது சித்தப்பா சூரிபாபு என்னை தலைமுடியை இழுத்து செருப்பால் அடித் தார். அதனால் தான் நான் ஓட்டலைவிட்டு வெளியேறினேன். எனது சகோதரர் உறுதுணையாக இருந்தால் நான் நேரில் வரத் தயார்எங்கேயோ பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கும் அஞ்சலி அலைபேசி வழியாகஅள்ளித் தெளித் திருக்கும் இந்த அக்னி வார்த்தைகள் சினிமா உலகத்தை உலுக்கி இருக்கிறது.
இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தப்பா சூரிபாபு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சித்திக்கும் இதனால் மன உளைச்சலாம். இதற்கிடையில், இன்னும் இரண்டு வாரத் திற்குள் அஞ்சலியை ஆஜர்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுக்கு ஆர்டர் போட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தன்னைப் பற்றி அஞ்சலி தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்காக மானநஷ்ட வழக்கு தொடர்ந் திருக்கிறார் இயக்குனர் களஞ்சியம். இத்தனைக்கும் நடுவில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி 'அஞ்சலி சீசன் டூ" விற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு தயாராகி வருகிறார் அஞ்சலி.

இனி, அஞ்சலியின் மறுபக்கம்...

மாடலிங் போட்டோ ஷுட் செய்த ஆல்பத்தை தூக்கிக் கொண்டு சித்தியும் மகளும் பிரபல தயாரிப்பு  நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அஞ்சலி எப்படியாவது சினிமா பிரபலமாகிவிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அஞ்சலியைவிட  பாரதி தேவிக்கு இருந்தது. அதற்காக லட்சங்களை கடனாக வாங்கிச் செலவு செய்தார். முயற்சி வீண் போகவில்லை.போட்டோ, பிரேமலேக ராசா என்ற இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் அஞ்சலி வீட்டுக் கதவை தட்டின.

ஆனால், பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல இந்தஇரண்டுமே பெரும் தோல்வியை சந்தித்தன‌. ஆனாலும், இரண்டு படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு சூப்பர் என்று திரை உலகம் பாராட்டியது. அந்த பாராட்டுப் பத்திரம் தான்  'கற்றது தமிழ்'' படத்தில் நடிக்கும் வாயப்பை அஞ்சலிக்கு தந்தது. 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் நடிப்புககு அனைத்து தரப்பிலும் இருந்து பாரட்டுக்கள் குவிந்தன‌. 'நிஜமாத்தான் சொல்றியா?' என்று சோகத்தை அப்பியமுகத்துடன் அஞ்சலி பேசிய வசனம் அனைவரது மனதையும் கரைத்தது. அந்தப் பெண்ணுக்குள் இயல்பாகவே குடிகொண்டிருந்த சோகச் சுமை இந்த வசனத்திற்கு கூடுதல் மார்க் போட்டது.
ஆனாலும் என்ன செய்ய? வியாபார ரீதியாக 'கற்றது தமிழ்' தோற்றது தமிழாகிப் போனது. ஒரே ஒரு ஆறுதல், அஞ்சலி என்ற நடிகை வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தார். 2008 ஆம் ஆண்டு, இயக்குனர்  சுந்தர்.சிக்கு ஜோடியாக 'ஆயுதம் செய்வோம்' படத்தில் நடித்தார். அதுவும் காகிதம் செய்வோம் என்றாகிப் போனது. ஆனாலும், தோல்விகளை பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டே இருந்தார் அஞ்சலி. வெளிப்படையாக சொல்வதனால், குடும்பத்தில் அவருக்கு இருந்த நெருக்கடிகள் அவரை தூங்கவிடாமல் துரத்தின‌. இனி என்ன செய்யஎன்று ஒரு இக்கட்டான சூழலில் இருந்த போது தான்  'அங்காடித்தெரு'.வுக்காக அஞ்சலியை அழைத்தார் இயக்குனர் வசந்தபாலன்.

அங்காடித்தெரு படத்திற்கு சேர்மக்கனி பாத்திரத்தில் நடிக்க நாயகியை தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர் வசந்த பாலன். கதையின் நாயகன் புதுமுகம் என்பதால், நாயகி பழகிய முகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார் வசந்தபாலன். அப்போது அவரது நினைவில் உதித்தவர் அஞ்சலி. தொட்டதிற்கெல்லாம் சென்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகம், இத்தனை சறுக்கலுக்குப் பிறகும் அஞ்சலிக்கு வாய்ப்புத் தந்திருக்கிறது என்றால் அதிசயமான ஆச்சரியம் தான்!

வசந்தபாலனை அஞ்சலியும் பாரதிதேவியும் சேர்ந்தே சென்று சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே, அங்காடித் தெருவிற்காக செலக்ட் பண்ணி வைத்திருந்த காஸ்ட்யூம்களை அஞ்சலிக்கு கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னார் வசந்தபாலன. கலக்கினார் அஞ்சலி. பிறகு, கதாநாயகன் மகேஷையும்  அஞ்சலியையும் ஒன்றாக வைத்து சில காட்சிகளை சொல்லிக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். அதிலும் அஞ்சலி அசத்தினார். கூச்சத்தால் மகேஷ் தயங்கினார். 'சார்.. இப்புடி கூச்சப்பட்ட சினிமாவில் பெரிய ஆளாகுறது எப்படி? இது வெறும் நடிப்புங்கிறத மொதல்ல மனசுல ஏத்திக்குங்க அப்பத்தான் நடிப்பு வரும்" என்று தள்ளி நின்ற மகேஷை தன்னருகே நிற்க வைத்து நடிப்புச் சொல்லிக் கொடுத்த அஞ்சலியை வியப்புடன் பார்த்தார் வசந்த பாலன்.

'அங்காடித்தெரு' ரியல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். முதல் மூன்று நாட்கள் படத்தின் முக்கிய காட்சியை படமாக் கினார்கள். அக்காட்சிகளில் அஞ்சலியின் நடிப்பை பார்த்து மெச்சிய வசந்தபாலன், 'கதைக்கு இப்பத்தாம்பா உயிர் வந்திருக்கு" என்று பாராட்டினார். மகேஷின் நடிப்பு சுமாராக இருந்த இடங்களை எல்லாம் அஞ்சலியின் நடிப்பு ஈடு செய்தது. மகேஷ் நடிக்க தயங்கிய நெருக்கமான காதல் காட்சிகளில் அவரது கூச்சத்தை போக்கியவர் அஞ்சலிதான். படப்பிடிப்பு இடைவெளியில் மகேஷிடம் பேசி பேசி கூச்சத்தை போக்கிய அஞ்சலி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
படப்பிடிப்புகள் முடிந்தபோது, 'ஓர் இயக்குனரின் கதாநாயகி' என்று வசந்தபாலனிடம் பாராட்டை பெற்றார் அஞ்சலி. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தனது அபார நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் அஞ்சலி. 'கற்றது தமிழ்' படத்துக்கு, ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் டிவியின் சிறந்த புதுமுக நடிகை விரு தையும், 'அங்காடி தெரு' படத்துக்காக சிறந்த நடிகை விருதையும் வென்றார். ரசிகர்களை தனது நடிப்பாற்றலால் வசீகரித்திருக்கிறார் என்பதற்கு இந்த விருதுகளே சான்று. அதனைத் தொடர்ந்து அஞ்சலி நடித்த படங்களான 'ரெட்டை சுழி', 'மகிழ்ச்சி', 'தூங்கா நகரம்', 'கருங்காலி', 'மகராஜா', 'வத்திக்குசி', ஆகிய படங்கள் தோல்வியை சுமந்தன. இப்போது வெளிவந்திருக்கும் சேட்டையும் செயலிழந்து நிற்கிறது.

இடையே சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்தார் அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு' போன்று அஞ் சலிக்கு பெரிய அளவில் பாராட்டு குவித்த படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்தப் படத்தில் தனது எதார்த்தமான நடிப் பால் திரையுலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தார். 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கும் விருது கிடைத்தது. பல படங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது பாரதிதேவி, களஞ்சியத்தை சந்தித்து "அஞ்சலி அடுத்ததாக ஜீவாவுடன் நடிக்கிறார், இந்தக் கதையில் நடிக்க இருக்கிறார், அந்தக் கதை அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்குமா?" என்று எல்லாம் தனி ரூட்டில் போய் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டே இருந்தார்.
தமிழில் பிஸியாக இருந்தசமயத்தில், தெலுங்கிலும் அஞ்சலிக்கு அடித்தது ஒரு லக். மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தாவுடன் இணைந்து 'சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்துஎன்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'பலுப்பு', மீண்டும் வெங்கடேஷுடன் இணைந்து ஹிந்தி ரிமேக் படமான‌ 'போல் பச்சன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. லுப்பு  படப்பிடிப்பு முடிவுற்றது. போல் பச்சன் படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. இதற்காக ஹைதராபாத் சென்றபோதுதான் அஞ்சலி தலைமறைவாகி விட்டார்.

ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள நிருபர் ஒருவரை தொடர்பு கொண்டு, "பாரதிதேவி என்னுடைய அம்மா அல்ல... சித்தி. இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து கொண்டு என்னை சித்தி கொடுமைப்படுத்துகிறார். நான் சினி மாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். எனக்கென்று எதுவும் இல்லை. இனிமேல் தான் என் தேவைக்கு பணம் சம்பாதிக்க வேண்டும்" என்று அஞ்சலி சொன்னதாக சொல்கிறார்கள். அதன் பிறகுதான் அஞ்சலி தலைப்புச் செய்திகளுக்கு தீனியாய் வந்தார். இயக்குனர் களஞ்சியம், "எனக்கு இதில் எந்த சம்பந்த மும் இல்லை. இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி" என்கிறார்.

களஞ்சியம், பாரதிதேவி இருவருமே சொல்லும் இன்னொரு அதிர்ச்சி தகவல், "அஞ்சலிக்கு ஒரு நோய் இருக்கு. அதற் காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் சிக்கல் வரும். அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு மேல் விளக்கம் சொல்லமுடியாமல் இருக்கிறோம்" என்று சொல்கிறார்கள் அவர்கள். ''ஒரு சினிமா நடிகை மீது எத்தகையை வதந்தியை பரப்பினால் அவரது எதிர்காலம் பாதிக்குமோ அப்படியொரு அவதூறை பரப்பி, அந்த அப்பாவிப் பெண்ணின் எதிர்காலத்தை சீரழிக்கப் பார்க்கிறார்கள். அஞ்சலிக்கு அப்படி ஒன்றும் சீரியஸான நோய் எதுவும் இல்லை" என்று பதறுகிறார்கள் அஞ்சலியை நன்கு தெரிந்தவர்கள்.

அஞ்சலி மற்றும் அவருக்கு எதிரான நம்பத்தகுந்த தரப்பினர்களுடன் பேசியதில் இருந்து கிடைத்த தெளிவான ஒரே விஷயம், 'நட்சத்திரம்தமிழ்த் திரைப்படத்தின் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் நிஜம்தான் அஞ்சலி!
அந்த நிஜத்தை மிரட்டும் நிழல் எது?

பொறுத்திருங்கள்...

நன்றி - விகடன் 

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2



கத்தாரில் இருக்கும் தனது அம்மாவிடம் அஞ்சலி போனில் பேசினார். அதனால், அவர் பத்திரமாக இருப்பதாக சொல்லி புகாரை வாபஸ் வாங்க முயற்சித்தார் அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர். அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார் அவரது சித்தி பாரதி தேவி. ''குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் துணிச்சலுடன் வெளியில் வருவேன்" என்று போனில் பேசி இருக்கிறார் அஞ்சலி. மணிக்கு ஒரு தரம் அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது அஞ்சலியை பற்றிய செய்திகள்.

இனி அஞ்சலியின் மறுபக்கம் ...

'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் நாயகியாக அஞ்சலியை தேர்வு செய்தவுடன், படத்திற்கான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கொடுத்து நடித்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். அஞ்சலியின் முதல் நடிப்பு குறித்து கேட்டதற்கு "தொடக்கத்தில் அந்தப் பொண்ணுக்கு நடிக்கவே தெரியலைன்னு தான் சொல்வேன். ஒரு நடிகைக்கான  நளினத்தோடு நடக்கக் கூட தெரியவில்லை. அதைக் கூட நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. அவரது நடை, பாவணைகள் எல்லாமே வித்தியாசமாகஇருந்தது. சுருக்கமா சொல்லணும்னா, குக்கிராமத்துலருந்து வந்ததால கனவு தொழிற்சா லையின் அங்க அசைவுகள் எதுவுமே தெரியாமல் தான் இருந்தார் அஞ்சலி" என்கிறார்  இயக்குனர் களஞ்சியம்.

இத்தனை குறைகள் இருந்தாலும் அஞ்சலியை ஒதுக்கிவிட மனமில்லாத களஞ்சியம், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் இணை இயக்குனர் பரத்திடம் கதாநாயகன் மயூருக்கும், அஞ்சலிக்கும் நடிப்பை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தார். நடிப்பு வராத போதும் அஞ்சலி மீது அவர் காட்டிய கனிவிற்கு காரணமே அஞ்சலி முகத்தில்  நிரந்தரமாக குடியேறி இருந்த ஒரு சோகம்.
 இருவரும் தினமும் அஞ்சலிக்கு நடிப்பு பயிற்சி தந்தார்கள். காலை 10 முதல் மதியம் 1 மணிவரை டிரெயினிங் கொடுத் துக் கொடுத்து அஞ்சலியை செதுக்கினார்கள். வாரம் ஒரு காட்சியை நடிக்க வைத்து, அதை களஞ்சியத்திற்கு போட்டுக் காட்டினார் இணை இயக்குனர் பரத்.களஞ்சியத்தை மறந்தாலும் ஒளிப்பதிவாளர் கே.வி.மணியையும் இணை இயக் குனர் பரத்தையும் அஞ்சலியால் மறக்கவே முடியாது. இவர்கள் தானே அஞ்சலியை அரிதார மேடை ஏற்றுவதற்காக அரும்பாடுபட்டவர்கள்.


ஆறு மாத காலம் நடிப்பு பயிற்சி கொடுத்த  பிறகும் கூட அஞ்சலியை கேமரா முன்பாக நிற்க வைக்க தயங்கியபடக் குழு, அவரது நடிப்பில் ஒரு டெலிஃபிலிம் ஒன்றை உருவாக்கியது. அந்த ஒருமணி நேர படம் தான் அஞ்சலிக்கு முதல் படம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தோற்ற சரித்திரத்தை  டெலி ஃபிலிமாக 'ஆதி அருணாச்சலம்' என்ற பெயரில் களஞ்சியத்தின் நண்பர் எல்.சீனிவாசன் உருவாக்கினார். அதில் திலோத்தமை பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அஞ்சலிக்கு தந்தார்கள். யாரும் எதிர்பாராத விதத்தில், திலோத்தமை பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு தான், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஃபினிஷிங் சரியில்லாமல் போனது. அமர்க்களமாய் முத்தமிட கிளம்பி யவர்கள் நிதிப்பற்றாக்குறையால் பாதி வழியில் படுத்துக் கொண்டார்கள். வேறு சில நெருக்கடிகளும் தன்னைச் சுழற்றி அடித்ததால் களஞ்சியத்தால் சத்தமினிறி முத்தமிட முடியவில்லை. பாதி முடிந்த நிலையில் படம் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.

ஆனாலும், அஞ்சலிக்கு சினிமாவில் நடித்து தனது குடும்பத்தின் பொருளாதார சூழலை சமாளிக்க வேண்டிய கட் டாயம். அதனால், களஞ்சியத்திற்காக காத்திருக்காமல், சித்தியும் மகளும் நேரடியாகவே களத்தில் இறங்கி சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்கள். சினிமா வாய்ப்புகள் மட்டுமில்லாமல், மாடலிங் துறை புகைப்படக்காரர்களை வைத்து, கையில் மடியில் இருந்ததை எல்லாம் செலவு செய்து போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தார்கள். திரைத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண் சந்திக்க வேண்டிய இன்னல்களும் இடைஞ்சல்களும் அஞ்சலிக் காகவும் சேர் போட்டு காத்திருந்ததுஅத்தனையும் தாண்டி கலர்ஃபுல் கதாநாயகியாகி ஜொலித்தார் அஞ்சலி.
அது  எப்படி சாத்தியமானது?

நாளை சந்திப்போம்...