விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, April 11, 2013

    நடிகை அஞ்சலியின் மறுபக்கம் - ஒரு மினி சினி தொடர்


    திடீர் சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு திகில் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது நடிகை அஞ்சலியின் சமீபத்திய நாட்கள். அஞ்சலி எங்கேயோ ரக‌சிய இடத்தில் பதுங்கி விட்டதால் அவரது ரகசியங்கள் ஊர்சுற்றக் கிளம்பிவிட்டன!

    இணைய தளங்கள், தினசரிகள், சேனல்கள் எதைத் திருப்பினாலும் அஞ்சலி புராணம் தான் பாடுகின்றன. அஞ்சலி தலை மறைவு, ரகசிய காதலனுடன் ஓட்டம், இயக்குனர் களஞ்சியம் மற்றும் சித்தி பாரதிதேவி மீது சராமாரி புகார் என அஞ்சலியைப பற்றிய செய்திகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

    அஞ்சலியின் கடந்த காலமும் க‌ரடுமுரடானதுதான். ஆந்திராவில் உள்ள ஜகன்னபேட்டா என்ற குக்கிராமத்தில் பிறந்த அஞ்சலிக்கு பெற்றோர் வைத்த பெயர் பாலா திரிபுர சுந்தரி. அம்மா பார்வதி தேவி. இதுமட்டும் தான் இப்போதைக்கு தெரிகிறது. பெரிய பின்னணி எதுவும் இல்லாததால் ஏழ்மையை சுமந்தே இருந்தது அஞ்சலியின் குடும்பம்

    பார்வதிதேவிக்கு இரண்டுமே பெண் குழந்தைகள். தங்கையான‌ பாரதிதேவிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். பாரதிதேவிக்கோ பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். அதனால், தனது அக்கா மகள் திரிபுர சுந்தரியை ( முழு பெயரையும் சொன்னா மூச்சு வாங்குதுங்க) முறைப்படி தத்து எடுத்து வளர்த்திருக்கிறார்.

    சிறுவயதிலேயே திரிபுர சுந்தரிக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். எப்படியும் சினிமா நடிகை ஆகியே தீருவேன் என்று சொல்லி வாய்ப்புகளை தேடி அலைய ஆரம்பித்தார். ' நீயெல்லாம் நடிக்கப் போறியாக்கும்' என்று ஏளனம் செய்தது சுற்றமும் நட்பும். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாய்ப்புக்காக காத்திருந்தார் திரிபுர சுந்தரி. அப்போது தான் டைரக்டர் களஞ்சியத்தின் கலைக் கண்ணில் சிக்கினார். 'மிட்டாமிராசு' படத்தை முடித்திருந்த களஞ்சியம், அடுத்ததாக அரசியல் பின்னணி கொண்ட ஒரு காதல் கதையை  திரைச்சித்திரமாக்கும் முயற்சியில் இறங்கினார்.

    புதுப்படத்திற்கு, 'சத்தமின்றி முத்தமிடு' என்று தலைப்பும் வைத்தார். தேவயானியின் மூத்த தம்பி மயூர் தான் கதைக்கு நாயகன். இவருக்கு பொருத்தமான ஜோடியாக  18 வயது இளம் பெண்ணை  தேடினார் களஞ்சியம். எத்தனையோ பேர் வந்தார்கள். அத்தனை பேரையும்  சுட்டுவிரலில் தள்ளிவிட்ட களஞ்சியம், 'தமிழ் பொண்ணு சாயல் இருந்தா நல்லா இருக்குமே" என்று தனது விருப்பத்தை அழுத்தமாக சொன்னார். அதன் பிறகும்  நிறைய பெண்களை வரவழைத்து மேக்கப் டெஸ்ட், ஆடியேச‌ன் என சல்லடை போட்டு அலசினார்கள். அப்போது சிக்கிய மின்மினி தான் திரிபுர சுந்தரி.

    பாரதிராஜா தனது படங்களுக்கு கிராமத்து குயில்களை தேடும்போது எல்லாம், அவருக்கு துணையாக இருந்தவர் அவரது ஆஸ்தான போட்டோகிராபர் ஒளிப்பதிவாளர் கே.வி. மணி. பாரதிராஜாவிடம் இருந்தவர் என்பதால், களஞ்சியம் தமது படத்தின் நாயகி தேர்வுகளிலும் கே.வி.மணியை பக்கத்தில் வைத்துக் கொண்டார். கே.வி.மணிதான் 'சத்தமின்றி முத்தமிடு படத்தின் நாயகி தேர்வில் திரிபுர சுந்தரியை களஞ்சியத்திற்கு க்ளிக் செய்து கொடுத்தவர்.'இந்தப் பெண்ணுக்குள் ஒரு சோகம் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு பெண்ணைத் தான் பாரதிராஜா ரொம்ப காலமா தேடிக்கிட்டு இருக்காரு. இவ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினா வருவா. இவள மிஸ் பண்ணாதீங்க சார்" என்று அஞ்சலிக்கு இன்ட்ரோ  கொடுத்தவர், 'இவளுக்கு சின்னதா ஒரு குறையும் இருக்கு.. லேசா மாறுகண்ணு. கேமிரா ஆங்கிள் மூலமா அதை சரி பண்ணிக்கலாம் " என்றும் சொன்னார்.

    அவர் இப்படிச் சொன்னதால், தான் ஏற்கெனவே செலக்ட் செய்து வைத்திருந்த பெண்ணை ரிஜக்ட் சொல்லிவிட்டு. திரிபுர சுந்தரியை  'சத்தமின்றி முத்தமிடு' படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார் களஞ்சியம். அரை கிலோ மீட்டருக்கு பெயர் வைத்திருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியாதே! அதனால், பாலா திரிபுர சுந்தரியை சுருக்கி, திரிபுரா அல்லது சுந்தரி என பெயரை மாற்றிவிடலாம் என படக்குழு தீர்மானித்தது.
    இதுபற்றி வளர்ப்புத்தாய் என்று சொல்லப்படும் பாரதி தேவியிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், ரெண்டு பெயர்களையுமே களஞ்சியம் ரசிக்கவில்லை. 'ஆங்கிலத்தில் முதல் எழுத்தான 'ஏ" யில் பெயரின் முதல் எழுத்து இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொன்னார் களஞ்சியம். அப்படி பிறந்தவர் தான் அஞ்சலி.

    பெயர் மாற்றம் திரிபுர சுந்தரிக்கும் பிடித்திருந்தது. உற்சாகமாய் படத்தில் நடித்தார். களஞ்சியத்திற்கு பிடித்த கதாநாயகியாக கலக்கினார். ஆனாலும் , சில சிக்கல்கள் வந்தன. 'சத்தமின்றி முத்தமிடு" படத்திற்காக அஞ்சலி பட்ட கஷ்டங்கள் என்ன... அப்படி கஷ்டப்பட்டும் அந்தப் படம் ஏன் வெளிவரவில்லை?  

    நாளை வரை காத்திருங்கள்... பாஸ்!

    நன்றி - விகடன் 


    Posted by விழியே பேசு... at 2:50 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா, தொடர்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ▼  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ▼  April (14)
      • பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி
      • கோச்சடையான்' First Look!
      • அரவிந்தசாமி கலந்து கொண்ட 'நீங்களும் வெல்லலாம் கோடி...
      • அரவிந்தசாமி கலந்து கொண்ட 'நீங்களும் வெல்லலாம் கோடி...
      • அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 6
      • அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 5
      • கமல் ஹாசன் கலந்து கொண்ட 'நீங்களும் வெல்லலாம் கோடி ...
      • 'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்!
      • அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4
      • கமல் ஹாசன் கலந்து கொண்ட 'நீங்களும் வெல்லலாம் கோடி ...
      • கமல் ஹாசன் கலந்து கொண்ட 'நீங்களும் வெல்லலாம் கோடி ...
      • அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3
      • அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2
      • நடிகை அஞ்சலியின் மறுபக்கம் - ஒரு மினி சினி தொடர்
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.