Wednesday, April 17, 2013

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 6


"அண்மையில் நான் எதிர்கொண்ட‌ பிரச்னைகள் எனக்கு புதிய திருப்பத்தை தந்திருக்கிறது.இனி என்னுடைய விஷயங்களில் நானே சுயமாக முடிவெடுத்துக் கொள்வேன்.எனக்காக கடந்த ஆறேழு நாட்களாக ஆதரவு கொடுத்த‌ எனது நலன் விரும்பிகள்,தமிழ் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்"- அஞ்சலி பேசிய ஒளிப்பதிவு நகலை நேற்று காலையில் அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்பி இருந்தார்கள்.

மீடியாக்களை நேருக்கு நேர் சந்தித்தால்,ஏடாகூட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதால் அதை அழகாய் தவிர்த்துவிட்டார் அஞ்சலி.சித்தியின் பிடியிலிருந்து விலகிவிட்டதால் தன்னுடைய சினிமா பணிகளை கவனிப்பதற்காக உதவியாளர் ஒருவரையும் அப்பாயினெட் செய்திருக்கிறார். திங்கள் கிழமையிலிருந்து போல் பச்சன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் மெல்ல சகஜநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.

இனி, அஞ்சலியின் மறு பக்கம்...

தெலுங்கு ஸ்டார் வெங்கடேஷிற்கும்,அஞ்சலிக்கும் இடையில் துளிர்த்த  நட்பு அண்மைக்காலமாக பலரும் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டது.அஞ்சலி சம்பாதித்த பணத்தை வைத்து செல்வம் கொழித்துக் கொண்டிருக்கும் அந்த இயக்குன‌ரைப் பார்த்து,"அவருக்கு வாய்த்தது போல் ஒரு கதாநாயகி எல்லாருக்கும் வாய்த்து விட்டால் எத்தனை முறை தோற்றாலும் படம் எடுத்துக் கொண்டே இருக்கலாமே" என்கிறது தமிழ சினிமா உலகம்.தெலுங்கிலோ, "அஞ்சலிக்கு வாய்த்தது போல் ஒரு கொடை வள்ளல் சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டால் எத்தனை படத்தில் தோற்றாலும் ஜெயித்துக் கொண்டே இருக்கலாம்" என்று பொறாமைப்படுகிறார்கள்.

அஞ்சலிக்கு வீட்டுக்குள் பிரச்னை இருக்கிறது,என்றைக்கு இருந்தாலும் அவர் வெளியில் வர வேண்டி இருக்கும் என் பது வெங்கடேஷிற்கு தெரியும்.அப்படியொரு சூழல் வந்தால் அந்தப் பெண் எங்குபோய் நிற்கும்? அதற்காகவே ஹைதராபாத்தில் தன்னுடைய ஏற்பாட்டில் அஞ்சலிக்கு அழகான பங்களா ஒன்றை வாங்கித் தந்தார். இத்தனையையும் ஏன் திரைமறைவில் செய்ய வேண்டும்.அதற்கு காரணம் வெங்கடேஷின் அப்பா பிரபல தயாரிப்பாளர் ராம நாயுடு என்கிறார்கள்.அஞ்சலிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் அப்பாவுக்கு தெரிந்தால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று பயந்தாராம் வெங்கடேஷ்.

அதனாலேயே இந்த நிமிடம் வரை அவர் அஞ்சலிக்கு ஆதரவாக நேரடியாக களத்திற்கு வரவில்லை. ஆனால்,அங்கிருந்தபடியே அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்கு தனது சினிமா உலக நண்பர்கள் மூலம் பிரஷர் கொடுத்தார் வெங்கடேஷ்."அஞ்சலிக்கு தொல்லை கொடுப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் உங்களைப் பற்றிய விஷயங்களை அஞ்சலி வாயால் சொல்ல வைப்போம்" என்று வெங்கடேஷ் தரப்பிலிருந்தும், தெலுங்கு சினிமா உலக பிரபலங்களிடம் இருந்தும் மிரட்டல் தொனியில் எச்சரிக்கைகள் வந்ததாம்.

இதையடுத்துத்தான்,"இனிமேல் எனக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் சம்பந்தப்பட்ட விஷ யங்களை அவளது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்" என்று அவசரமாய் வந்து அறிக்கை விட்டார் பாரதி தேவி.ஆனால், அஞ்சலிக்காக தெலுங்கு பட உலகம் மிரட்டல் தொனியில் பேசியதை களஞ்சியத்தால் தாங்கிகொள்ள முடியவில்லை."அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட இல்லாமல் தெலுங்கிலிருந்து வருகிறார்கள்.இங்கு வந்து நடித்து தமிழனின் காசில் பெரிய ஆளாய் ஆனதும் வளர்த்துவிட்ட இயக்குன‌ர்கள் மீதே அவ‌தூறு பரப்புகிறார்கள்" என்று பாய்ந்தார்.


அஞ்சலிக்கு ஆதரவாக தெலுங்கு சினிமா உலகம் வருவது போல் தனக்கு ஆதரவாக தமிழ் சினிமா உலகம் வரவேண் டும் என்று எதிர்பார்த்தார் களஞ்சியம்.இதற்காக தமிழ் இயக்குனர்கள் சிலரிடம் ஆதரவும் கேட்டார்.ஆனால், ஏனோ தெரியவில்லை களஞ்சியத்திற்கு ஆதரவாக யாரும் களத்திற்கு வரவில்ல.அஞ்சலிக்கு வீட்டிற்குள் தொடங் கிய பிரச்னை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.இப்போது,அஞ்சலிக்கு பின்னால் வெங்கடேஷ் இருக்கும் விஷயம் ராமநாயுடு தரப்பிற்கு தெரிந்து விட்டதாக சொல்கிறார்கள்.ஆக,இதுவரை அந்நிய மண்ணில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த‌ அஞ்சலி, இனி சொந்த மண்ணில் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம்.

இப்போதைக்கு அஞ்சலியிடமிருந்து விடை பெறுவோம்..


அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 5



’’அஞ்சலிக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. சினிமா கால்ஷீட் உள்ளிட்ட அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் அவரது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டேன். வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து நான், எனது அக்கா, அஞ்சலி எல்லோரும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்’’ - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி. ‘’நான் யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. இனி, என்னைப் பற்றிய விஷயங்களை நானே கவனித்துக் கொள்வேன். இனி, என்னை மையப்படுத்தி எது நடந்தாலும் அது என்னைச் சேர்ந்தது - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலி.

கடந்த வாரத்தில் இரண்டு தரப்பிலும் இருந்த கோபமும் கொந்தளிப்பும் இப் போது இல்லை. ’குடும்பப் பிரச்னையை வீதிக்கு கொண்டு வராதீர்கள் என்று இரண்டு தரப்பையுமே யாரோ பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த மாற்றம். கத்தாரில் இருக்கும் அஞ்சலியின் அம்மா பார்வதி தேவி, மிக விரைவில் சென்னைக்கு வருகிறார். இதையடுத்து, அஞ்சலிக்கும் அவரது சித்திக்குமான உரசல் முடிவுக்கு வருவதற்கான முகாந்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ’’இனி, மீடியாக்கள் மத்தியில் தோன்றினாலும், பெரிதாக யார் மீதும் பழிபோட்டு பேசமாட்டார் அஞ்சலி. ‘அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டேன் என்று மட்டும் அவர் சொல்லக் கூடும் என்கிறார்கள் விவரமறிந்த சினிமா புள்ளிகள்.

இனி அஞ்சலியின் மறுபக்கம்...

தன்னை ஸ்டாராக்கிய சித்திக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்த அஞ்சலி, பொங்கி வெடித்தது யாருடைய தைரியத்தில்? ’சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்து தெலுங்கில் அஞ்சலி நடித்து சக்கைப் போடு போட்ட படம். இந்தப் படத்தில் ரேவதி, ரோகிணி மாதிரியான குணசித்திர வேடம் தான் அஞ்சலிக்கு. இவருக்கு ஜோடி வெங்கடேஷ். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடித்தார் அஞ்சலி. சூப்பர் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த வெங்கடேஷுக்கு அண்மைக்காலமாக அடுத்தடுத்து படங்கள் ஊத்திக் கொண்டன. அதற்கு காரணம் அவரது உடல் வாகு என்கிறார்கள்.

மனுஷன் அநியாயத்துக்கு வெயிட் போட்டுவிட்டதால் இளம் ஹீரோயின்கள் தமன்னா, சமந்தா உள்ளிடவர்கள் வெங்கடேஷ் படம் என்றாலே தலைதெரிக்க ஓடுகிறார்கள். இப்படியான சூழலில், வெங்கடேஷுக்கு ஜோடியாக சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்துவில் நடிக்க சம்மதிக்கிறார் அஞ்சலி. இந்தப் படத்திற்காக அஞ்சலிக்கு பேசப்பட்ட சம்பளம் 40 லட்சம். படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி நடந்து கொண்ட விதம் வெங்கடேஷுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுவுமில்லாமல், தொடர்ந்து தோல்வி முகத்தில் போய்க்கொண்டிருந்த தன்னுடைய சினிமா வாழ்க்கையில், சீத்தாம்மா படம் ஒரு பிரேக்கை கொடுத்ததும் அஞ்சலியை வாயாற புகழ ஆரம்பித்தார் வெங் கடேஷ்.
இதனால், தன்னுடைய அடுத்த படமான ஹிந்தி ரிமேக் ‘போல் பச்சனிலும் அஞ்சலிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதில் அஞ்சலியின் சம்பளம் 60 லட்சம் என்கிறார்கள். இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த அனுபவம் அஞ்சலிக்கும் வெங்கடேஷிற்கும் இடையில் இழையோடிய நட்பை பலப் படுத்தியது. இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு தங்களது கஷ்ட நஷ் டங்களை பகிர்ந்து கொண்டார்கள். இதற்கு முன்பு, மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிப்பில் வெளிவந்த ’தூங்கா நகரம்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அஞ்சலிக்கு ஒரு பிரச்னை. அவரை தன் கட்டுப் பாட்டிலேயே வைத்திருக்க துடித்த ஒரு இயக்குநர், தொடர்ந்து பல வழிகளில் டார்ச்சர் கொடுத்தார். இதனால் மூடவுட்டாகிப் போய் உட்கார்ந்திருந்தார் அஞ்சலி.

தூங்கா நகரம் யூனிட்டில் இந்த விஷயம் காட்டுத் தீயாய் பரவியது. துரை தயாநிதியின் படக் கம்பெனியை அழகிரியின் மருமகன் வெங்கடேஷ் தான் கவனிக்கிறார். அவருக்கு இந்த விஷயம் போய், நேரடியாக அஞ்சலியை அழைத்து விசாரித்தார். அந்த இயக்குனரின் டார்ச்சரை சொல்லி புலம்பிய அஞ்சலி, ‘இது என்னுடைய பர்சனல். நானே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சீரியஸாக்கி விடாதீர்கள் என்று சொன்னாராம். ஆனாலும், வெங்கடேஷ் தரப் பிலிருந்து அந்த இயக்குனரை கூப்பிட்டு ’அன்பாக கண்டித்து விட்டார்களாம். கொஞ்ச நாட்கள் அமைதி. பிறகு, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

அஞ்சலி மீது அளவு கடந்த கவனிப்பு வைத்திருந்த அந்த இயக்குனர், தன்னை மீடியாக்காரர்கள் யாராவது சந்திக்க வந்தால், ‘அஞ்சலி தான் என்னோட படத்துல ஹீரோயின். அவங்கள பேட்டி எடுத்து ஃப்ளாஷ் பண்ணுங்க பாஸ் என்று அஞ்சலிக்கு விளம்பர வெளிச்சம் தேடினார். ஆனால், அவரின் இந்த சிபாரிசுகளை எல்லாம் அஞ்சலி சுத்தமாய் விரும்பவுமில்லை; ரசிக்கவுமில்லை. ’அந்த இயக்குனர் தான் உங்களை பேட்டி எடுக்கச் சொன்னார் மேடம் என்று யாராவது போன் போட்டால், ‘அவன் தான் சொல்லிவிட்டானா?’ என்று எரிந்து விழுந்து வேண்டா வெறுப்பாக பேட்டி கொடுத்தார் அஞ்சலி.

இந்தச் சூழலில், தெலுங்கு பட உலக அறிமுகமும் அங்கே தனக்குக் கிடைத்த ஹிட்டும் அஞ்சலிக்கு புதுத் தெம்பை தந்தது. எக்ஸ்ட்ரா போனஸாக நடிகர் வெங்கடேஷின் கரிசன பார்வையும் கிடைத்ததால் உற்சாகமானார் அஞ்சலி. ஆனால், அங்கேயும் போய் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். தனக்கு பாதுகாப்புக் கொடுப்பார் என்கிற நம்பிக்கையில், தான் தினமும் முள் படுக் கையில் படுத்துப் புரளும் ரணத்தை வெங்கடேஷிடம் சொல்லி ஆறுதல் தேடி னார் அஞ்சலி. ’’உன்னை வைத்துத்தானே அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ் கிறார்கள். பணிந்து போக வேண்டியவர்கள் அவர்கள் தான். நீ எதற்காக பயப்பட வேண்டும்? இனி இந்தப் பிரச்னைகளை நான் பார்த்துக் கொள் கிறேன் என்று தைரியம் கொடுத்தார் வெங்கடேஷ். இப்போது புரிகிறதா அஞ்சலி யாருடைய தைரியத்தில் பொங்கி வெடித்தார் என்று! அப்படியானால் வெங்கடேஷ் ஏன் இன்னும் ஸீனில் வராமல் இருக்கிறார்?

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்... எல்லாத்தையும் இன்னிக்கே சொல்லிட்டா எப்புடி!

கமல் ஹாசன் கலந்து கொண்ட 'நீங்களும் வெல்லலாம் கோடி -வீடியோ - 3


'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்!


மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91. 

1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி கே ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமன். பின்னர் ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்தி, பின்னர் எம் எஸ் விஸ்வநாதனுடன் இணைந்தார்

மெல்லிசை மன்னர்கள் 

1950 மற்றும் 60களில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் சாகா வரம் பெற்றவையாக இன்றும் தமிழர் உதடுகளில் வீற்றிருக்கின்றன. கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இந்த இருவரும் இசையமைத்தனர்

இருபது ஆண்டுகள் இணைந்து இசைக் கோலம் தீட்டிய இந்த இரட்டையர்கள் கடந்த 1965-ம் ஆண்டு பிரிந்தனர்

எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு இருவரும் தனித்தனியாக இசையமைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதில் எம்எஸ்வி அடைந்த வெற்றியை ராமமூர்த்தியால் அடைய முடியவில்லை. எம்எஸ்வியைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு ராமமூர்த்தி இசையமைத்தார். இதில் முக்கியமான படம் 'மறக்க முடியுமா?'

  கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மீண்டும் இணைந்தனர். சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படத்துக்கு இசையமைத்தனர். ஆனால் படம் ஓடவில்லை. அதனால் இவர்களின் இசைக் கூட்டணியும் பெரிதாக எடுபடவில்லை

ஆனாலும் எம்எஸ் விஸ்வநாதன் எந்த நிகழ்ச்சியில் அல்லது பாராட்டு விழாவில் கலந்து கொண்டாலும் தவறாமல் டி கே ராமமூர்த்தியையும் அழைத்துச் செலவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 2006-ம் ஆண்டு இருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது சத்யபாமா பல்கலைக் கழகம்

கடந்த ஆண்டு ஜெயா டிவி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை வெகுவாகப் பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தைக் கொடுத்து, கார் மற்றும் தங்கக் காசுகளை பரிசாக அளித்தார்

உடல் நலம் குன்றியிருந்த டி கே ராமமூர்த்தி, இன்று காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார்

அவரது மறைவுக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. இறுதி அஞ்சலி குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது.


Monday, April 15, 2013

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4


தமிழக போலீஸும் ஆந்திர போலீஸும் ஆளுக்கொரு திக்கில் தேடிக் கொண்டிருந்த நிலை யில், தாமாக வந்து ஆஜராகி இருக்கிறார் நடிகை அஞ்சலி.''என்னை யாரும் கடத்தவில்லை. தாங்கமுடியாத மன அழுத்தம் காரணமாக நானே தான் வீட்டைவிட்டு வெளியேறினேன். மும்பையில் நண்பர்கள் பாதுகாப்பில் இருந்தேன். போலீஸ் எனக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னதால் நான் இங்கு வந்திருக்கிறேன். என் தரப்பு நியாயத்தை போலீஸ் துணை கமி ஷனர் சுதிர்பாபுவிடம் முழைமையாக சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் விரைவில் மீடி யாக்களை சந்தித்து உண்மைகளைச் சொல்வேன்என்று திடமாக சொல்லிவிட்டுப் போயி ருக்கிறார். அஞ்சலியின் தலை மறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதால் இனி, அவரது திரைமறைவு வாழ்க்கை ஆரம்பமாகும்.

இனி, அஞ்சலியின் பறு பக்கம்...

இருபது வயதில் ஒரு இளம் பெண் நடிக்க வந்தால் அவருக்கு துணையாக அப்பாவோ, அம் மாவோ, அண்ணனோ வருவார்கள். அவர்கள் தான் அந்தப் பெண்ணுக்கு மெய்க்காப்பாளர் போல் இருப்பார்கள். அஞ்சலிக்கு துணையாக சித்தி, சித்தப்பா, அண்ணன் என மூன்று பேரும் வந்தார்கள். இதனால் இந்த மூன்று பேரும் எது சொன்னாலும் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானர் அஞ்சலி. தொடக்கத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் நல்லதாகவே பட்டது அஞ்சலிக்கு. ஆனால், போகப் போக கசக்க ஆரம்பித்தது.

தன்னை முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என்பதற்காக தனக்கு ஒப்பாத விஷயங்களை எல் லாம் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அந்தப் பெண்ணுக்கு. அப்படியும் எத்தனை நாளைக்குத் தான் சகித்துக் கொள்ளமுடியும்? ஒரு கட்டத்தில் எதிர்க்கவும், மறுக்கவும் ஆரம்பித்தார் அஞ்சலி. அவரை பணம் காய்ச்சி மரமாக நினைத்துக் கொண்டிருந்தவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்டிக்கிறோம் என்கிற பேரில் அஞ்சலிக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

பெற்றதாயைப் பிரிந்த ஏக்கம் அப்போதுதான் முதல் முறையாக அஞ்சலிக்கு வந்தது. எட்டா தூரத்தில் அம்மா இருந்ததால் தன்னுடைய கஷ்டங்களை உட்கார்ந்து சொல்லி அழக் கூட அவருக்கு ஆறுதலாய் ஒரு நிழல் இல்லை. இந்த ஏக்கமே அஞ்சலியை வெளிக்கிளம்ப வைத் தது. தன்மீது பரிவு காட்டிப் பேசிய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களோடு நிறையவே பொழுதை கழிக்க ஆரம்பித்தார். வீட்டிற்குள் இருந்த நெருக்கடிக்கு அது அவருக்கு ஆறுதல் தரும் மருந்தாக இருந்தது. வீட்டுக்குள்ளோ வேறு மாதிரியாய் பற்றி எரிந்தது. ’கண்டவர்களோடு சுற்றினால் இமேஜ் என்னாகும்?’ என்று தாவினார்கள்.

 ’எனக்கு சரி என பட்டதை நான் செய்கிறேன். நான் இன்னும் சின்னப் பெண் இல்லை உங் களுக்கு தேவை பணம் தானே அதற்கு எந்தக் குறையும் வராது. ஆனால், அதற்காக என்னை குத்திக் குத்தி அழ வைத்து ரசிக்காதீர்கள்என்று குரலை உயர்த்தினார் அஞ்சலி. இப்படிப் பேசியதற்காக பலமுறை அஞ்சலி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். ’’சித்தப்பா தன்னை முடியைப் பிடித்து இழுத்து அடித்ததாக இப்போது அஞ்சலி சொல்வது உண்மையாக தான் இருக்க முடியும். ஏனென்றால், அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் எங்கள் கண் எதிரி லேயே அஞ்சலியை மிரட்டியதை நாங்கள் பார்த்திருக்கிறோம்என்கிறார் ஒரு பிரபல சினிமா இயக்குனர்.

இத்தனையையும் போதாதென்று வேறுமாதிரியான சங்கடங்களையும் அஞ்சலி சந்திக்க நேர்ந் தது. நடிகர் விக்ரமின் அப்பா சினிமாவில் நடிக்க வந்து தோற்றுப் போனவர். அந்த வெறி யில்தான் அவர் தனது மகனை ஹீரோ ஆக்கினார். நடிகை மந்த்ராவின் அம்மா ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். தன்னால் ஜெயிக்க முடியாததை மகள் மந்த்ராவை வைத்து ஜெயித்துக் காட்டினார், இன்றைக்கு திரை உலகில் பிரபலமாக இருப்பவர்களில் பலரது பின்னணி இப்படித்தான் இருக் கும். அஞ்சலியின் சித்தி பாரதி தேவியும் இந்த கேரட்க்டர் தான்.

எப்படியாவது கதாநாயகியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காக பூமணி படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு இயக்குனர் களஞ்சியத்தைச் சந்தித்தார் பாரதி தேவி. களஞ்சியத்தை மடுமல்ல பல இளம் இயக்குனர்களை சந்தித்து அப்போது சான்ஸ் கேட்டடார். அத்தனை பேரும் இனிக்க இனிக்க பேசினார்கள். ஆனால், யாருமே வாய்ப்பு தரவில்லை. களஞ்சியம் மட்டும் பாரதி தேவிக்கு ஆறுதலாய் பேசினார். களஞ்சியத்தின் நம்பிக்கை வார்த்தைகள் பாரதிதேவிக்கு பிடித் திருந்தது.

அதேநேரம், தன்னால் சாதிக்க முடியாததை தன்னுடைய வளர்ப்பு மகள் அஞ்சலியை வைத்து சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியை தனக்குளே வளர்த்துக் கொண்டார் பாரதி தேவி. அந்தவெறிதான் அஞ்சலியை கதாநாயகி அளவுக்கு உயர்த்தியது. தனக்காக வாய்ப்புக் கேட்டு அலைந்த காலங்களில் கனவுத் தொழிற்சாலையின் நெளிவு சுளிவுகளை நன்றாக தெரிந்து வைத்திருந்தார் பாரதி தேவி. வளர்ப்பு மகள் அஞ்சலியை ஜெயிக்க வைக்க அது அவருக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.இத்தனையும் செய்தது எதற்காக அஞ்சலிக்காகவா? இல்லை, அஞ்சலியால் வந்து கொட்டும் பணத்துக்காக. சினிமாவில் வந்த வருமானத்தை வைத்து, தானே படம் எடுக்க நினைத்தார் பாரதி தேவி. அதற்காக தனது இயக்குனர் தோழர்களிடம் கலந்து ரையாடல் நடத்தினார். சிக்கலே இங்குதான் ஆரம்பிக்கிறது.

சித்தி படம் எடுப்பது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை.அதை வெளிப்படையாகவே சொன்னார். இது சித்திக்கு பிடிக்கவில்லை. இருவரும் இப்படி முரண்பட்டதால் வீட்டுக்குள் பிரளயம் வெடித்தது. ’உன் பணம், என் பணம்என்கிற அளவுக்கு வார்த்தைகள் தடித்தன. இதற்கு முந்தைய படங் களில் சில லகரங்கள் மட்டுமே அஞ்சலிக்கு சம்பளமாக தரப்பட்டது. அந்தப் பெண் முழுதாய் இருபது லட்சத்தை பார்த்ததே சேட்டை படத்தில் தான். ஆனால், அந்த வருமானத்தையும்  சினிமா தயாரிப்பில் போட துடித்தார் பாரதி தேவி.

அதை அறிந்து அந்தப் பூவும் புயலானதுஇதுவரை சம்பாதித்ததை எல்லாம் உங்களுக்கே கொடுத்துவிட்டேன் இனியாவது எனக்காக சம்பாதிக்க நினைக்கிறேன்” - அஞ்சலியிடம் இருந்து இப்படி வார்த்தைகள் வந்து விழும் என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்திருக்க மாட் டார்கள். இப்படிச் சொல்வதால் தன்னுடைய எதிர்காலத்தையே பாழாக்கும் விதமாக காரியங் கள் நடக்கும் என்று அஞ்சலியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அதுசரி, சித்தி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த அஞ்சலிக்கு, திடீரென இப்படிப் பேச தைரியம் கொடுத்தது யார்?

சஸ்பென்ஸ்!

அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3