விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, June 1, 2011

    அரசு விழாக்கள் எளிமையாக நடக்கும்: மின் கட்டணம் உயராது; ஜெயலலிதா பேட்டி


    முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
     
    கே:- தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக புகார் கூறப்படுகிறதே?
     
    ப:- அரசு இதில் தானாக தலையிட முடியாது. புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
     
    கே:- தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உயர்த்தி விட்டதாக சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்களே?
     
    ப:- போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை. பெற்றோர் ஆதாரத்துடன் புகார் செய்தாலோ, பள்ளி நிர்வாகம் முறையிட்டாலோ அரசு நிர்வாகம் தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கும்.
     
    கே:- இலவச அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று எளிமையாக நடந்தது. மற்ற அரசு விழாக்களும் இதுபோல் நடக்குமா?
     
     ப:- அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும். வீண்-ஆடம்பரமாக செலவு செய்து அரசு விழாக்களை நடத்தக்கூடாது என்பது இந்த அரசின் கொள்கை. அடுத்து தொடரும் திட்டங்களுக்கான விழாவும் இதுபோல் எளிமையாக நடைபெறும்.
     
    கே:- புதுச்சேரியில் உள்ள ரேசன் கடைகளில் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை எந்த ரேசன் பொருட்களையும் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டிலும் அந்த நிலை வருமா?
     
     ப:- தமிழ்நாட்டிலும் இனி எல்லா பொருட்களையும், ரேசன் கடைகளில் எப்போதும் வாங்கலாம். பொருட்களை பதுக்கி வைக்கும் நிலை இனி இருக்காது.
     
    கே:- டி.ஜி.பி. நடராஜிக்கு பதவி வழங்கவேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளதே?
     
    ப:- நேற்றுதான் தீர்ப்பு வந்துள்ளது. அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
     
    கே:- முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி தனது செம்மொழி கவிதை பாடத்தில் இடம் பெற்றதால் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியதாக கூறி இருக்கிறாரே?
     
     ப:- அவரது கருத்து குழந்தை தனமானது. சமச்சீர் கல்வியை தரமானதாக உயர்த்தவேண்டும் என்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
     
    கே:- மின் வாரியத்துக்கு கடன் சுமை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மின்சார கட்டணம் உயருமா?
     
     ப:- அப்படி எந்த எண்ணமும் இல்லை. தமிழக மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காது. 2001-ல் அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது மின் தடை இல்லை. எல்லா நேரமும் மின்சாரம் இருந்தது. அப்போது 10,111 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. பின்னர் வந்த தி.மு.க. அரசின் தவறான நிர்வாகத்தாலும், மின் உற்பத்தி மையங்களை சரியாக பராமரிக்காததாலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
     
    தரமற்ற நிலக்கரிகளை அனல்மின் நிலையங்களுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததும் மின் உற்பத்தி பாதிப்புக்கு காரணம். இந்த நிலைமையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். விரைவான நடவடிக்கையால் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி கூடுதலாக 5000 மெகாவாட் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
     
    கே:- கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச டி.வி., இலவச வீடு திட்டம் தொடருமா?
     
     ப:- கவர்னர் உரையில் தெரிந்து கொள்ளலாம்.
     
    கே:- அரசு கஜானா திருப்தியாக இருக்கிறதா?
     
     ப:- அதை இப்போது சொல்ல இயலாது. அது பற்றிய விவரத்தை கவர்னர் உரையிலும், மீதியை பட்ஜெட்டிலும் சொல்லுவோம்.
     
     கே:- அண்ணா பல்கலைக் கழகங்கள் ஒன்றாக இணைக்கப்படுமா?
     
     ப:- கவர்னர் உரையில் அதற்கான பதில் தெரியும்.
     
    கேள்வி:- மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே?
     
    பதில்:- பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்.
     
    இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.       



    Posted by விழியே பேசு... at 3:25 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    கம்மல் அணிவது ஏன்? ஜெயலலிதா விளக்கம்

    கம்மல் அணிவது பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். இன்று கோட்டையில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
     
     
    கே:- நீண்ட நாட்களாக நீங்கள் நகைகள் எதுவும் அணிவதில்லை. இப்போது காதில் தோடு அணிந்து இருக்கிறீர்களே?
     
     ப:- 1997-க்கு பிறகு நகைகளை அணிவதை விட்டு விட்டேன். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை சந்திக்கும் போதெல்லாம் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் தொண்டர்கள் என் வீட்டு முன்பு குவிந்தார்கள். அப்போது உடன்பிறப்புகள் நான் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
     
    பல்வேறு தவறுகளை செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள். நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறினார்கள். எங்கள் கட்சி தொண்டர்கள் சொன்னதை செய்து விடுவார்கள். ஒரு பெண் தொண்டர் நாக்கை அறுத்துக் கொண்டார். இன்னொருவர் கை விரலை துண்டித்துக் கொண்டார். எனவே தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்று காதில் தோடு அணிந்து இருக்கிறேன்.
     
    நாக்கை அறுத் துக்கொண்ட பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து இருக்கிறேன். சில பத்திரிகைகளில் இது போன்ற செயல்களை நான் ஊக்கப்படுத்துவதாக எழுதுகிறார்கள். அது உண்மை இல்லை. அந்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர். 2 குழந்தைகள் உள்ளன. அவருக்கு வருமானம் எதுவும் இல்லை. எனவே அரசு வேலை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
     
    இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.



    Posted by விழியே பேசு... at 3:20 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா

     2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை பிரதமர் மன்மோகன் சி்ங் பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, தயாநிதி மாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாநிதி மாறன் தன் மீதுள்ள குற்றச்சாடுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் அவரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

    மாறன் குறித்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்; தற்போது விசாரணை சரியான திசையில் செல்கிறது என்றார்.

    நீங்கள் டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது, தயாநிதி மாறன் குறித்து பேசுவீர்களா என்று கேட்டதற்கு, 2ஜி விவகாரம் நீதிமன்றத்தில் விவகாரம் உள்ளதால் நாம் மேற்கொண்டு இதுபற்றி விவாதிக்கவோ சொல்லவோ அவசியம் இல்லை. எனவே, இதுபற்றி பிரதமரிடம் பேச வாய்ப்பு இல்லை என்றார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், தனியார் பள்ளிகள் கட்டண விவகாரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தால், உடனடியாக தொடர்புடைய பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிபி நட்ராஜ் விஷயத்தில் ஆணை பெறப்பட்டவுடன் தகுந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்றார்.

    ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு:
    இந் நிலையில் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று நேரில் சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

    முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்:
    முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவையின் 3வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.




    Posted by விழியே பேசு... at 3:15 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    “நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேருவேன்” -நடிகை சோனா பேட்டி


    நடிகை சோனா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகர் விஜய் ரசிகர்களின் குழந்தைகளை வரவழைத்தார். அவர்கள் மத்தியில் கேக் வெட்டினார். அக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கினார். 
    பின்னர் சோனா அளித்த பேட்டி வருமாறு:-
     
    நான் விஜய்யின் ரசிகை. எனவேதான் விஜய் ரசிகர்கள் குழந்தைகளை அழைத்து பிறந்த நாள் கொண்டாடினேன். விரைவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேருவேன்.
     
    விஜய்யின் அரசியல் நட வடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பேன். எனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
     
    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகிறது. படத்தின் கதை மூன்று கட்டங்களாக இருக்கும். நானும் இதில் நடிக்கிறேன். எனது சிறு வயது கேரக்டர்களில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது.
     
    “கோ” படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. நிறைய பேர் எனது நடிப்பை பாராட்டினார்கள். மலையாளத்தில் மிலி என்ற படத்தில் நடிக்கிறேன். பாக்யராஜ் 2010 என்ற படத்தை தயாரித்து வருகிறேன்.
     
    இவ்வாறு சோனா கூறினார்.



    Posted by விழியே பேசு... at 2:59 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    ராசாவின் 'பிரம்மாஸ்திரம்': 2ஜி சிக்கலில் காங்கிரசை மாட்டிவிட போகும் திமுக


    ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரமதருக்கும் தனக்கும் நிகழ்ந்த 18 கடித பரிமாற்றங்களை முன் வைத்து வாதாட உள்ளதால், ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை வளையத்தில் மன்மோகன் சிங்கும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராசாவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களாகும்.

    2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் ராசா முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

    இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த கடிதங்களை ஆதாரமாக வைத்து ராசா வாதாடும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.

    ராசாவின் வாதத்தை வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சிபிஐ தனது விசாரணைக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

    ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.


    Posted by விழியே பேசு... at 1:01 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    10 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார்; ராணா படத்தில் நடிக்கிறார் - தனுஷ்



    உடல்நிலை பாதிக்கப்பட்டது காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த்,  மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார்.   அங்கே தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்திருப்பதால் தனி வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.




    சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினியின் மருமகன் தனுஷ் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும்,    விடுமுறைக்கு சென்றதுபோல் ரஜினி குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார் என்றும்,  10 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.



    அவருக்கு உடல்நிலை குணமடைந்து வருவதால் சிறுநீரக மாற்று சிகிச்சை தேவை இல்லை என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.


    ரஜினி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும்,   சென்னை திரும்பியதும் ரஜினி ராணா படத்தில் நடிப்பது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.




    Posted by விழியே பேசு... at 12:50 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்தைத் தாக்க முயற்சி


    ரிஷிவந்தியம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல சென்றபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதும், அவர் சென்ற வேன் மீதும் சிலர் தாக்குதல் நடத்த முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த இரு நாட்களாக தேமுதிக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரிடம் தங்களது பகுதி குறைபாடுகள் குறித்த மனுவை கொடுக்க பொதுமக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துச் சென்றனர்.

    அப்போது மனுக்களை யாராவது ஒருவர் சேகரித்து கொடுங்கள் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். பின்பு அங்கு சில நிமிடங்கள் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் விஜயகாந்த் வேனுக்கு பின்னால் வந்த இரு கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

    இந்த நிலையில் திருக்கோவிலூர் செல்ல மீண்டும் அவ்வழியே வந்த விஜயகாந்த் வேனை மறித்த மக்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்தை ரிஷிவந்தியத்தில் கட்ட உறுதியளித்தால் தான் வழிவிடுவோம் என்று கூறினர்.

    பின்பு தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விஜயகாந்த் வேன் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

    ஆனாலும் மக்கள் ஆவேசத்தால் விஜயகாந்த் வந்த வேனை கைகளால் அடித்தனர். அந்த வேன் பின்பு வந்த கார்கள் மீது கற்களையும், மண்ணையும் வாரி இறைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர். சில இளைஞர்கள் விஜயகாந்த்தையும் தாக்க முயன்றனர். ஆனால் வேன் அந்த இடத்தில் இருந்து சீறிப்பாய்ந்தது.

    இந்த சம்பவத்தால் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


    Posted by விழியே பேசு... at 12:38 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.