விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, April 1, 2011

    மாணவி ஜெயலலிதாவின் ''ஈ அடிச்சான் காப்பி''-ப.சிதம்பரம் கிண்டல்

    திமுக கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருப்பதால் நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.


    ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் யசோதாவுக்கு ஆதரவாக மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து சிதம்பரம் பேசுகையில்,

    கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருப்பதால் நாங்கள் தலை நிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம்.

    தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி, டிவி, இலவச காஸ், வீட்டு மனைப்பட்டா, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் என சொன்னதை செய்தது. ஆனால், அறிக்கையில் சொல்லாத கலைஞர் காப்பீடு திட்டம், 108 ஆம்புலன்ஸ், ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    கடந்த தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்தவர்கள் இந்த முறை ''ஈ அடித்தான் காப்பி'' அடிப்பதைப்போல் காப்பி அடித்துள்ளனர். இப்போது 10ம் வகுப்பு தேர்வுகள் நடந்து கொண்டுள்ளன.

    படித்துவிட்டு வந்த மாணவர்கள் அவர்களாகவே தேர்வை எழுதுவார்கள், படிக்காமல் வந்த மக்கு மாணவர்கள் என்ன செய்வார்கள். பக்கத்தில் உட்கார்ந்துள்ள நல்ல மாணவனின் விடைத்தாளைப் பார்த்துப் பார்த்து, காப்பி அடித்து தேர்வு எழுதுவார்கள். அதையே தான் ஜெயலலிதா செய்து வருகிறார்.

    தான் காப்பி அடித்தது தெரியக் கூடாது என்பதற்காக, திமுகவின் தேர்தல் அறிக்கையை கொஞ்சம் திருத்தி எழுதி, அதை தன்னுடையது போல காட்ட முயன்றுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள சில அரசியல் விமர்சகர்கள், தங்களை படித்த மேதாவியாக காட்டிக் கொள்ளும் ஒரு சிலர், 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த பின்பு தொடர்ந்து அடுத்த முறை முதல்வராக முடியாது என்கின்றனர்.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித், ஒரிஸ்ஸாவில் நவீன் பட்நாயக், அஸ்ஸாமில் தருன் கோகோய் ஆகியோர் எப்படி தொடர்ந்து முதலமைச்சராக ஆனார்களோ, அதே போல் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.




    Posted by விழியே பேசு... at 11:11 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    வேட்பாளரை அடிப்பது அழகா? ஸ்டாலின் கேள்வி


    வேட்பாளரை அடிப்பதுதான் ஒரு தலைவருக்கு அழகா? என்று, விஜயகாந்துக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


    தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். சிவகாசி பஸ் நிலையம், சிவன்கோவில் அருகில், சிவகாசி தேவர்சிலை ஆகிய இடங்களில் அவர் பேசினார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:


    ஒரு அரசியல் தலைவர் தனது கட்சியின் வேட்பாளர் பெயரை தவறுதலாக மாற்றிச் சொல்வதும் மற்றவர்கள் அதை திருத்திக் கூறும்போது சரியாக மாற்றிக் கொள்வது என்பதும் ஒரு சாதாரண விசயம் தான். அப்படி ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டிய தனது கட்சியின் வேட்பாளரை பொது மக்கள் மத்தியில், ஒரு பொது இடத்தில் அடித்து உதைப்பவர் எப்படி ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


    இனி அந்த முன்னாள் நடிகரோடு செல்லுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவசியம் ஹெல்மெட் போட்டுத் தான் செல்ல வேண்டும். இந்த அளவிற்கு நிதானம் இழந்து செயல்படுகின்ற மார்க்கெட் இழந்து போன அந்த நடிகரும், 10 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து தமிழ் நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத ஜெயலலிதாவும் சேர்ந்து எப்படி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்வார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


    Posted by விழியே பேசு... at 10:55 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    விஜயகாந்த்தை மேடையில் ஏற்றுவாரா ஜெ.? ஸ்டாலின்


    தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    சிவகாசி பஸ் நிலையம், சிவன்கோவில் அருகில், சிவகாசி தேவர்சிலை ஆகிய இடங்களில் அவர் பேசினார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:


    தி.மு.கழக தலைமையிலான கூட்டணி, மக்கள் கூட்டணி, கவுரவமான கூட்டணி. தலைவர் கலைஞர் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரக் கூட்டங்களை நடத்தி கொண்டு இருக்கிறார்.


    ஆனால், மாற்று அணியில் மிகப்பெரியக் குழப்பம் இருக்கிறது. ஜெயலலிதா எந்த கூட்டணி கட்சித் தலைவரோடும் சேர்ந்து எந்த இடத்திலும், பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. புதிதாக


    ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ள முன்னாள் கதாநாயகன், நான் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியுடன் தான் கூட்டு வைத்துள்ளேன் என்று தெரிவித்து வருகிறார்.

    ஆனால், ஜெயலலிதா அ.தி.மு.க மேடையில், அந்த முன்னாள் கதாநாயகனை ஒரு முறையாவது ஏற்றுவாரா? இப்படி அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவரிடையேயும், முரண்பாடுகள் மேலோங்கி இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்துவிடுவார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


    Posted by விழியே பேசு... at 10:49 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    தி.மு.க.வுக்கு ஆதரவு நடிகர் கார்த்திக் பேட்டி


    அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நேற்று வெளியிட்டார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சி சார்பில் 27 வேட்பாளர்களை அறிவித்தோம். இதில் 3 பேர் விலை போய்விட்டனர். 3 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவர்கள் தவிர மீதமுள்ள 21 பேர் போட்டியிடுகின்றனர்.

    எங்கள் கட்சியினர் 2 பேரை சென்னையில் அ.தி.மு.க.வினர் துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றுள்ளனர். எங்கள் கட்சியில் இருந்து விலகிவிட வேண்டும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டி இருக்கிறார்கள். பின்னர் அவர்களை விடுவித்துவிட்டனர்.

     இந்த சம்பவம் பற்றி போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம். நாகரீகமாக அரசியல் நடத்த நான் விரும்புகிறேன். மற்றவர்கள் அநாகரீக அரசியல் நடத்துகிறார்கள். எங்களை யாரும் மிரட்ட முடியாது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 21 தொகுதிகளில் நாளை (இன்று) முதல் பிரசாரம் செய்ய உள்ளேன்.

    அம்பாசமுத்திரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். ஒரு நாளைக்கு 2 தொகுதிகள் வீதம் பிரசாரம் செய்வேன். எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம். மற்ற தொகுதிகளில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியினர் அவரவர் விருப்பப்படியும் ஜனநாயகக் கடமை ஆற்றலாம்.

    என்னைக் கேட்டார்கள் என்றால் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றுதான் சொல்லுவேன். கலைஞர் அமைதியானவர். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடியவர். அதனால்தான் கூட்டணியை சிறப்பாக நடத்துகிறார். அ.தி.மு.க.வுக்குப் போகாமல் தி.மு.க.வுக்குப் போயிருந்தால் எனக்கு தனி மரியாதை கிடைத்திருக்கும்.

     தி.மு.க. ஆட்சி நன்றாக நடக்கிறது. அந்த ஆட்சி தொடர்ந்தால் மக்களுக்கு நல்லது. தன்மானமிக்க தலைவர் வைகோ, அ.தி.மு.க.விடம் சிக்காமல் தப்பிவிட்டார். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியிருப்பது தவறு. இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.


    Posted by விழியே பேசு... at 10:34 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    ராணா போட்டோ ஷூட் ! சென்னையில் துவங்கியது...



    என்னைய கேட்காம ஒரு வரி கூட எழுதக்கூடாது என்று டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் மிரட்டல் விடுத்ததையடுத்து ராணா பற்றி துணுக்கு செய்தியை எழுத கூட தயங்குகிறார்கள் நிருபர்கள். (அப்படி எழுதினால் விஜயகாந்தின், 'வேட்பாளர் ட்ரிட்மென்ட்' கிடைக்குமோ?) இந்த தயக்கத்தின் காரணமாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிற முக்கியமான விஷயத்தையும் எழுதாமல் விட்டு விட்டார்கள். (சே, இதுக்கெல்லாம் டென்ஷன் ஆக மாட்டாருப்பா...)

    ஒன்றுமில்லை... இப்படத்தின் துவக்க விழா அழைப்பிதழுக்கும், செய்தி தாள் விளம்பரங்களுக்கும் பிரத்யேகமாக போட்டோ ஷ§ட் நடத்திக் கொண்டிருக்கிறார் ரவிகுமார். இன்று காலை துவங்கிய இந்த போட்டோ செஷனில் ரஜினியும், தீபிகா படுகோனேவும் பங்கேற்று வருகிறார்கள்.

    கே.எஸ்.ரவிகுமாரை பொறுத்தவரை இந்த போட்டோ ஷ§ட் ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் இதற்கு முன்பு ரஜினியை வைத்து அவர் எடுத்த போட்டோ ஷ§ட் ஜக்குபாய் படத்திற்காக எடுக்கப்பட்டது! அப்புறம் அந்த படத்திலிருந்து ரஜினி விலகிக் கொண்டார். பின்பு சரத்குமாரை வைத்து எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார் ரவிகுமார். இந்த முறையாவது அவரது நம்பிக்கை தோற்காமல் நிறைவேறட்டும்.


    Posted by விழியே பேசு... at 10:19 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    கலைஞர் காலைத்தொட்டு வணங்கினார் EVKS


    ஈரோட்டில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.   திமுக தலைவர் கருணாநிதி இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.


    திமுக மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையான விமர்சன அம்புகளை எய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கூட்ட மேடையில் ஏறினார்.   அதுமட்டுமல்லாது முதல்வர் கருணாநிதிக்கு அருகில் அமர்ந்தார்.


    அதுமட்டுமா?   முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து தள்ளினார்.

    பின்னர் பேச வந்த முதல்வர்,  ‘’பத்திரிக்கைகளில் எல்லாம் இடம்பெறப்போகும் செய்தி இதுதான்.  அதிசயம்!


    கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒரே மேடையில்!! என்றுதான் எழுதப்போகிறார்கள்.


    இளங்கோவன் இன்று என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.  

    நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன் என் மடியில் தவழ்ந்திருக்கிறார்’’ என்று பேசியபோது,  ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் எழுந்து முதல்வர் காலைத்தொட்டு வணங்கினார்.



    Posted by விழியே பேசு... at 9:27 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    100 ரூபாய் மாத சந்தாவுக்கு வீட்டுமனை - ஒரு சினிமா சங்கத்தின் சாதனை!

    உறுப்பினர்கள் கொடுக்கும் மாத சந்தா தொகையான 100/-ரூபாயை சேமித்து வைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்னைக்கு மிக அருகில் உள்ள அச்சரப்பாக்கத்தில் தலா ஒரு கிரவுண்ட் இலவசமாக வீட்டுமனையை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் தென்னிந்திய திரைப்பட பெட்-போர்டு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர்.


    விண்ணை முட்டும் விலைவாசி நிலவும் இந்த காலகட்டத்தில் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டால் அந்த ரகசியத்தை சொல்ல ஆரம்பித்தார் பி.வெள்ளைச்சாமி. இவர் தான் இந்த சங்கத்தின் தலைவர்.

    "எங்கள் தென்னிந்திய திரைப்படத்தை சார்ந்த பெட்-போர்டு வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் சென்னை சாலிகிராமத்தில் இயங்கி வருகிறது. சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

    அதன்படி மாதாமாதம் எங்களது உறுப்பினர்கள் சந்தாவாக செலுத்தும் 100/-ரூபாய் தொகையை கடந்த பத்து வருடங்களாக குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்தோம், கூடுதலாக இதர வருவாய் மூலம் வரும் பணத்தையும் தேவையில்லாமல் செலவழிக்காமல் சேமித்து வைத்து சென்னைக்கு மிக அருகில் உள்ள அச்சரப்பக்கத்தில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் இடத்தை வாங்கி எங்களது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மொத்தம் 220 உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கிரவுண்டு வீட்டுமனையை இலவசமாக கொடுத்திருக்கிறோம். 

    எங்களது உறுப்பினர்களின் ஒற்றுமையால் மட்டுமே இது சாத்தியமானது. சினிமாவில் உள்ள தொலில்நுட்ப கலைஞர்களுக்கு பலருக்கும் சென்னையில் சொந்தமாக வீடு என்பது கனவான விஷயம்தான். ஆனால் அதை நாங்கள் நிஜமாக்கியிருக்கிறோம். இந்த நிகழ்வை பின்பற்றி தமிழ்சினிமாவாவைச் சேர்ந்த மற்ற சங்கங்களும் அந்த உறுப்பினர்களுக்கு செய்தால் உண்மையிலேயே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்" என்றார்.

    முன்னதாக இந்த வீட்டுமனை பத்திரத்தை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கும் விழா மார்ச் மாதம் 30-ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பெட்போர்டு வாகன உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் பெட்போர்டு சங்கத் தலைவர் பி.வெள்ளைச்சாமி செயலாளர் திரு.கே.பி.ராய்,மற்றும் பொருளாளர் எஸ்.முத்துராமன் முன்னிலையில் திரைப்பட ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட கார்-வேன் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மற்றும் திரைப்பட டெக்னிஷியன் சங்க நிர்வாகிகள், மற்றும் அனைத்து திரைப்பட சங்கத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.




    Posted by விழியே பேசு... at 2:14 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.