உறுப்பினர்கள் கொடுக்கும் மாத சந்தா தொகையான 100/-ரூபாயை சேமித்து வைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்னைக்கு மிக அருகில் உள்ள அச்சரப்பாக்கத்தில் தலா ஒரு கிரவுண்ட் இலவசமாக வீட்டுமனையை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் தென்னிந்திய திரைப்பட பெட்-போர்டு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர்.
விண்ணை முட்டும் விலைவாசி நிலவும் இந்த காலகட்டத்தில் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டால் அந்த ரகசியத்தை சொல்ல ஆரம்பித்தார் பி.வெள்ளைச்சாமி. இவர் தான் இந்த சங்கத்தின் தலைவர்.
"எங்கள் தென்னிந்திய திரைப்படத்தை சார்ந்த பெட்-போர்டு வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் சென்னை சாலிகிராமத்தில் இயங்கி வருகிறது. சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
அதன்படி மாதாமாதம் எங்களது உறுப்பினர்கள் சந்தாவாக செலுத்தும் 100/-ரூபாய் தொகையை கடந்த பத்து வருடங்களாக குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்தோம், கூடுதலாக இதர வருவாய் மூலம் வரும் பணத்தையும் தேவையில்லாமல் செலவழிக்காமல் சேமித்து வைத்து சென்னைக்கு மிக அருகில் உள்ள அச்சரப்பக்கத்தில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் இடத்தை வாங்கி எங்களது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மொத்தம் 220 உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கிரவுண்டு வீட்டுமனையை இலவசமாக கொடுத்திருக்கிறோம்.
எங்களது உறுப்பினர்களின் ஒற்றுமையால் மட்டுமே இது சாத்தியமானது. சினிமாவில் உள்ள தொலில்நுட்ப கலைஞர்களுக்கு பலருக்கும் சென்னையில் சொந்தமாக வீடு என்பது கனவான விஷயம்தான். ஆனால் அதை நாங்கள் நிஜமாக்கியிருக்கிறோம். இந்த நிகழ்வை பின்பற்றி தமிழ்சினிமாவாவைச் சேர்ந்த மற்ற சங்கங்களும் அந்த உறுப்பினர்களுக்கு செய்தால் உண்மையிலேயே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்" என்றார்.
முன்னதாக இந்த வீட்டுமனை பத்திரத்தை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கும் விழா மார்ச் மாதம் 30-ஆம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பெட்போர்டு வாகன உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெட்போர்டு சங்கத் தலைவர் பி.வெள்ளைச்சாமி செயலாளர் திரு.கே.பி.ராய்,மற்றும் பொருளாளர் எஸ்.முத்துராமன் முன்னிலையில் திரைப்பட ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட கார்-வேன் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மற்றும் திரைப்பட டெக்னிஷியன் சங்க நிர்வாகிகள், மற்றும் அனைத்து திரைப்பட சங்கத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment