வேட்பாளரை அடிப்பதுதான் ஒரு தலைவருக்கு அழகா? என்று, விஜயகாந்துக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். சிவகாசி பஸ் நிலையம், சிவன்கோவில் அருகில், சிவகாசி தேவர்சிலை ஆகிய இடங்களில் அவர் பேசினார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
ஒரு அரசியல் தலைவர் தனது கட்சியின் வேட்பாளர் பெயரை தவறுதலாக மாற்றிச் சொல்வதும் மற்றவர்கள் அதை திருத்திக் கூறும்போது சரியாக மாற்றிக் கொள்வது என்பதும் ஒரு சாதாரண விசயம் தான். அப்படி ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டிய தனது கட்சியின் வேட்பாளரை பொது மக்கள் மத்தியில், ஒரு பொது இடத்தில் அடித்து உதைப்பவர் எப்படி ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இனி அந்த முன்னாள் நடிகரோடு செல்லுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவசியம் ஹெல்மெட் போட்டுத் தான் செல்ல வேண்டும். இந்த அளவிற்கு நிதானம் இழந்து செயல்படுகின்ற மார்க்கெட் இழந்து போன அந்த நடிகரும், 10 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து தமிழ் நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத ஜெயலலிதாவும் சேர்ந்து எப்படி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்வார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment