Monday, February 9, 2015

ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஐசிசி உலக கோப்பை ‘அப்’

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் பற்றிய செய்திகள், அட்டவணை, புள்ளி விவரங்கள், லைவ் ஸ்கோர்   விவரம், பந்துக்கு பந்து வர்ணனை, ஆட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய ‘ஹை லைட்ஸ்’ வீடியோ தொகுப்பு, விநாடி வினா உள்பட பல்வேறு அம்சங்களை   அளிக்கும் மொபைல் அப்ளிகேஷனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த இலவச ‘அப்’ ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல், டேப்லட்களில் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

இந்த இலவச ‘அப்’டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்.

Friday, February 6, 2015

கொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப்ளிகேஷன்- 15 நிமிடங்களில் ”ரிசல்ட்” ரெடி!

எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் அப்ளிகேஷன் ஒன்றின் மூலமாக லட்சக்கணக்கானோர் உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோயான எச்.ஐ.வி மற்றும் சிபில்லிஸ் போன்ற நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் வேளையில், இந்த நோய் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவே பல நாட்கள் பிடிக்கிறது.

 இந்த தாமதத்தை தவிர்க்க பதினைந்தே நிமிடங்களில் இந்நோயை கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் ஆப் ஒன்றை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

அவர்கள் தயாரித்துள்ள சிறிய வடிவிலான டாங்கிளை, ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டரில் பென் டிரைவ் போல் இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் அந்த டாங்கிள் தனக்கு தேவையான மின்சாரத்தை கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனிலிருந்தே எடுத்துக்கொள்ளும். 

எனவே கிராமப்புறங்களில் கூட இந்த புதிய ஆப்பை பயன்படுத்தி நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை கண்டறிந்து அவர்களை விரைவாக காப்பாற்ற முடியும். இந்த டாங்கிள் போன்ற கருவியின் மேற்புறத்தில் கட்டை விரலை வைத்தவுடன், அது தானாகவே கட்டை விரலில் இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொள்ளும். 

பின்னர் ரத்த மாதிரியை பரிசோதித்து 15 நிமிடங்களில் நோய் இருக்கிறதா என்பதை டாங்கிள் கண்டுபிடித்து தந்துவிடும். தற்போது இந்நோய்களை கண்டுபிடிக்கும் கருவியின் விலை ஏறத்தாழ 11 லட்ச ரூபாய் என்றிருக்கும் நிலையில் இந்த புதிய கையடக்க டாங்கிளின் விலையோ வெறும் 2116 ரூபாய் மட்டுமே. இந்த டாங்கிளை எப்படி பயன்படுத்து என்பதை அறிந்து கொள்ள 30 நிமிட பயிற்சியே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 2, 2015

வாய்ஸ் கால் சேவையை தொடங்கியது வாட்ஸ்அப்

'வாட்ஸ் அப்' மூலம் படங்கள், குறுந்தகவல்கள் அனுப்புவதுடன், எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதி வந்துவிட்டது. அதிக கொள்ளளவு உள்ள படங்களையும், வீடியோக்களையும் உடனுக்குடன் மிக விரைவாக அனுப்ப, வாட்ஸ் அப் என்ற, செயலி உதவுகிறது. 

இத்துடன், பேசும் வசதியையும் இணைக்க, நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இந்தியாவில், குறிப்பிட்ட சிலரிடம், சோதனை அடிப்படையில், 'வாட்ஸ் அப்'பில் பேசும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. 

ஆயினும், பொதுவான பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. இதுகுறித்து, 'வாட்ஸ் அப்' நிறுவனம் சார்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும், நேற்று முதல் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள் பலருக்கும் 'வாட்ஸ் அப்'பில் பேசிக் கொள்ள வசதி கிடைத்துள்ளது. 

ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தில் (ஆணை தொகுப்பில்) இயங்கும், 'வாட்ஸ் அப்' செயலி வைத்துள்ள அனைவரும், அதன் மூலம் நண்பர்களிடம் பேச முடியாது. 

இதற்காக, 'வாட்ஸ் அப்' வலைதளத்தில் நுழைந்து, மேம்படுத்தப்பட்ட, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியே அதை பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேசுவதற்காக இணைய முடியாது. 

எதிர் தரப்பில் பேசுபவரிடமும், அந்த பைல் இருந்தால் மட்டுமே பேசலாம். அவ்வாறின்றி, நண்பருக்கு அந்த பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேசலாம். உள் அழைப்பு, வெளி அழைப்பு எண்களும் ஸ்மார்ட் போனைப்போலவே இதிலும் சேமிக்கப்படும். 

கம்ப்யூட்டரிலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் வாட்ஸ்அப்-வெப் சேவையை சில வாரங்கள் முன்பு வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருந்தது. வாட்ஸ்அப்பை, பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது முதல் இதுபோன்ற அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 



Thursday, January 22, 2015

விண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் "விண்டோஸ் 10" இலவசம்!! மைக்ரோசாப்ட் அறிவிப்பு..

மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

இதன் மூலம் இந்நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான புதிய மொபைல் பயணிகளை பெற திட்டமிட்டள்ளது.

அண்ட்ராய்டு உடன் போட்டி 

மேலும் மொபைல் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் களமிறங்கியுள்ளது. மொபைல் உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அண்ட்ராய்டு உடன் போட்டி போடவும், அதன் ஆதிக்கத்தை குறைக்கவே இந்த இலவச விண்டோஸ் 10 அறிமுகம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்ரோட்டிங் சிஸ்டம் பிரிவின் தலைவர் டெரி மெர்சன் கூறுகையில் விஸ்டோஸ் 7, 8, 8.1 மற்றும் விண்டோஸ் மொபைஸ் பயன்படுத்தும் அனைத்து பயனாளிகளும் அடுத்த ஒரு வருடத்திற்கு விஸ்டோஸ் 10 ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை இலவசமாக அப்கிரேடு செய்துகொள்ளலாம் என மெர்சன் தெரிவித்தார்.

ஆப்பிள் மற்றும் கூகிள் 

இத்துறையில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகிள் தங்களது மென்பொருளை அவ்வபோது அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்ல வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அப்கிரேடு வசதி அளிக்கும். இதே பார்மூலாவை தற்போது மைக்ரோசாப்ட் காப்பி அடிக்க திட்டமிட்டுள்ளது.

வாய்ஸ் சர்ச்

 விண்டோஸ் 10 அறிமுக விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம், நாம் பேசும் உச்சரிப்பை கொண்டு இணையதளத்தில் தேடும் செயல்திறன் கொண்ட வாய்ஸ் சர்ச் மென்பொருளான கார்ட்டான-வை அறிமுகம் செய்தது.

வாட்ஸ் அப்பை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்தும் வசதி அறிமுகம்


வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் பலகோடி வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் என்ற தகவல் பரிமாறிக்கொள்ளும் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த அப்ளிகேஷனை தற்போது இணையத் தளத்திலும் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நேற்று வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மொபைலில் பயன்படுத்தப்படுத்தி வரப்பட்ட வாட்ஸ் அப் சேவையை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த புதிய சேவையை உங்கள் கணினியில் நிறுவிய பின்னர், க்யூ ஆர் கோட்-ஐ (QR Code) ஸ்கேன் செய்து பயண்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (IOS) அப்ளிகேஷன் பயன்படுத்தும் தொலைபேசி வாடிக்கையாளர்கள், இந்த வசதியை தற்போது பயன்படுத்த முடியாது. இதனால் வாட்ஸ் அப்-இல் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 13, 2015

Projector உடன் கூடிய டேப்லட் அறிமுகம் (வீடியோ)..

Aiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.


Aiptek ProjectPad P70 எனப்படும் இந்த டேப்லட்டானது 7 அங்குல அளவூ, 1024 x 600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 16GB சேமிப்பு நினைவகம் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையூம் உள்ளடக்கியூள்ளது.

369 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட்டில் தொடர்ச்சியாக 2 மணித்தியாலங்கள் வரை மின்னை வழங்கக்கூடிய மின்கலம் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

Sunday, December 28, 2014

'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் !'

எந்நேரமும் மொபைல் சார்ஜ் ஃபுல்லாக இருக்க வேண்டும் என இன்றைய மொபைல் பயனாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது இப்பிரச்னை.

இன்றைய இளையதலைமுறைக்கு பெரும் பயமாகவும் அலறலாகவும் இருப்பது "பேட்டரி லோ" என்னும் பிரச்னைதான்  ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள் கூறும் பெரும் பிரச்னையே பேட்டரி பேக்-அப் தான்.

ஆம், காலேஜ் செல்லும் முன் போடப்படும் சார்ஜ் மாலை வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும் என இளசுகள் மட்டுமின்றி அனைவரும் எதிர் பார்க்கும் விஷயம்.




இன்றைய யுகத்தில் அனைவரும் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகச் சேட் செய்வதாலும், 3ஜி இணைப்பை பயன்படுத்துவதாலும் அனைவரது போன்களும் மாலை வேளையில் 'பேட்டரி லோ' எனக் கதற ஆரம்பித்து விடுகிறது.

"அதிக நேரம் சார்ஜ் நிக்கணும்" -ஸ்மார்ட் போன்களில் நாம் எதிர்பார்க்கக் கூடிய  ஒரு முக்கிய அம்சம் இதுதான். இனிமேல் அந்தப் பயமோ கஷ்டமோ தேவையில்லை.

இனிமேல் இந்த கருவி இருந்தாலே போதும் எப்போது வேண்டுமானாலும் எங்கேயும் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். பார்ப்பதற்குக் கீ செயின் போலவே இருக்கும் இந்த "ஃபெயில் சேஃப் சார்ஜர்".




இந்தக் கருவியை சுலபமாக  எங்கும் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த ஃபெயில் சேஃப் சார்ஜர் 4.5 செ.மீ மட்டுமே நீளம் கொண்டது. அதனால் எடுத்து செல்வது மிகவும் எளிது. கீ செய்ன் ஆகக்
கூட  இதனை கோர்த்துக் கொள்ளலாம்.

உடனே பவர் பேங்க் என நினைத்து விட வேண்டாம். பவர் பேங்க் மிகவும் பெரிதாகவும் விலையுயர்ந்தாகவும் இருக்கும். ஆனால், இந்த ஃபெயில் சேஃப் சார்ஜர் அப்படியல்ல!

இந்த ஃபெயில் சேஃப் சார்ஜருடன் ஒரு சாதாரண ஒன்பது வோல்ட் பேட்டரியைப் பொருத்தி, செல்போனைப் யூஎஸ்பி கேபிள் மூலம் இணைத்தால் போதும். இதன் மூலம் போனை எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

பிளான் வி சார்ஜர் என்றும் இது செல்லமாக அழைக்கப்படுகிறது.

பிளிண்ட்டூ என்ற நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு: இங்கே செல்லவும் 

இதன் இயக்க வீடியோவை பார்க்க: இங்கே செல்லவும் 


Wednesday, December 17, 2014

எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்: இனி உங்கள் கையும் டச் ஸ்கிரீன் (வீடியோ)

சிக்ரெட்(CICRET) என்ற பேரிஸை சேர்ந்த நிறுவனம் மொபைல் போன் மற்றும் லேப்டாப்புடன் இணைத்து பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பிரேஸ்லெட்டை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் உங்கள் கைகளை டச் ஸ்கிரீனாக மாற்றலாம். அடுத்த வருடம் ஜீன் மாதம் இந்த பிரேஸ்லெட் சந்தைக்கு வரவுள்ளது. அதன் வீடியோவை பார்த்து மகிழுங்கள்.



Saturday, December 13, 2014

புதிய வசதி அறிமுகம் : இன்டர்நெட் இல்லாமல் யு டியூப் வீடியோ பார்க்கலாம்

கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளித்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் இணைய தள பயன்பாடு அதிகம் இருக்கிறது. எனவே யு டியூப் அப் மூலம் வீடியோக்களை ஆன்லைன் பார்க்கும்போது அது 48 மணி நேரத்துக் சேமித்து வைக்கப்படும். 

ஒருமுறை இவ்வாறு பார்த்தபிறகு 48 மணி நேரத்துக்குள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோவை பார்க்கலாம். மொபைல் அப் மூலம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. இதே வசதி பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவில் தற்போது உள்ளது. அதையடுத்து இந்தியாவிலும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ‘‘இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது. 

இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் இதன்பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்’’ என்றார். இதற்கென சரிகமா டிசீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யு டியூப் ஒப்பந்தம் செய்துள்ளது. 

அதுபோல் இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் யு டியூபுக்கு இந்தியா 5வது பெரிய சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Saturday, December 6, 2014

இணையவாசிகளுக்காக கூகுள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை!

இணையத்தை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகுள், இணையவாசிகளுக்கான புதிய பரிசோதனை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம், இணையவாசிகள் தாங்கள் மனிதர்கள் தான் என்பது, முன்போல எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்காது என கூகுள் கருதுகிறது.

கூகுள் அறிமுகம் செய்துள்ள இந்த பரிசோதனையின் பெயர் ரி-கேப்ட்சா. ( No-CAPTCHA ) . இந்த சோதனையின் முந்தைய வடிவமான கேப்ட்சாவை நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். புதிய இணைய சேவைக்காக பதிவு செய்யப்படும் போது அல்லது இணைய ஷாப்பிங் போன்றவற்றில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு நிலையில் சின்ன கட்டத்தில் , ஜாங்கிரி போன்ற எழுத்துக்கள் தோன்றும். அந்த எழுத்துக்களை நீங்கள் சரியாக கண்டுபிடித்து டைப் செய்தால் உள்ளே நுழையும் அனுமதியை பெறலாம்.

இந்த சோதனைதான் கேப்ட்சா என்று சொல்லப்படுகிறது. இந்த சோதனையின் நோக்கம் இணையத்தை பயன்படுத்த முயற்சிப்பவர்கள் மனிதர்கள்தான் என்பதை உறுதி செய்வதுதான் . அதாவது இந்த சோதனையை முன்வைக்கும் ஒவ்வொரு இணையதளமும் நீங்கள் மனிதர்தானா? என்ற கேள்வியை முன்வைத்து அதை உறுதி செய்து கொள்கின்றன.

இது அபத்தமாக தோன்றலாம்.



ஆனால், இந்த சோதனையை இணையவாசிகள் எதிர்கொள்ள நேர்ந்தாலும் உண்மையில் இது அவர்களுக்கான அல்ல; இணையத்தில் உலாவும் அல்லது உலாவவிடப்படும் பாட் என்பபடும் சாப்ட்வேர் படைப்புகள் அல்லது எந்திரங்களை தடுப்பதற்காகதான்.

ஸ்பேம் மெயில் அனுப்ப, பாஸ்வேர்டு திருட என்று பலவிதமான பாட்கள் உருவாக்கப்பட்டு உலாவ விடப்பட்டுள்ளன. இவற்றை தடுக்கும் பொருட்டே, இணையவாசிகளுக்கு கேப்ட்சா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கிளிக் செய்து உள்ளே உழைய மட்டுமே தயார் செய்யப்பட்ட ஸ்பேம் பாட்களால், இந்த சோதனையில் வெற்றிபெற முடியாது என்பதால் அவை திருதிருவென்று முழித்து நிற்கும். அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
இப்படிதான் கேப்ட்சா முறை இணையத்துக்கான பூட்டு சாவியாக செயல்படுகிறது. அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கிய முறை இது.

ஆனால், இந்த சோதனையை எதிர்கொள்வது எரிச்சலாக இருக்கும். சில நேரங்களில் மீண்டும் மீண்டும் எழுத்துக்களை டைப் செய்ய வேண்டியிருக்கும் போது எரிச்சல் பலமடங்கு அதிகமாகும்.

அதோடு, இப்போதெல்லாம் இந்த கேப்ட்சா சோதனைக்காக பதிலை அளிக்ககூடிய புத்திசாலித்தனமான பாட்களை உருவாக்கத்துவங்கிவிட்டனர். விளைவு பாட்கள் கேப்ட்சா சோதனையை கூடு உடைத்து உள்ளே நுழைந்துவிடுகின்றன.
இதற்கு மாற்று மருந்தாக தேடியந்திர நிறுவனமாக கூகுள் ,ரி-கேப்ட்சா எனும் புதிய முறையை முன்வைத்துள்ளது. இணைய பாட்களுக்கு கடுமையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய முறை, இணையவாசிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என கூகுள் சொல்கிறதுஇணையவாசிகள் , நான் ரோபோ இல்லை எனும் கட்டத்தை கிளிக் செய்தால் மட்டும் போதுமானது. இந்த கிளிக்கை வைத்தே ரி-கேப்ட்சா சேவையை பயன்படுத்த இருப்பது இணையவாசியா அல்லது ரோபாவா என தீர்மானித்துவிடும்.

ரோபோக்களுக்கு சிக்கலானது, மனிதர்களுக்கு எளிதானது எனும் வர்ணணையோடு கூகுள் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையை மற்ற இணையதளங்களுக்கும் கூகுள் வழங்க இருக்கிறது. ஏற்கனவே வலைப்பதிவு சேவையான வேர்டுபிரஸ் போன்றவை இதை பயன்படுத்த முன்வந்துள்ளன.

இந்த சேவை எளிதாக தோன்றினாலும் இதன் பின் பெரிய அளவிலான ஆய்வு மற்றும் சிக்கலான செயல்முறைகள் இருக்கின்றன என்று கூகுள் சொல்கிறது.

கடந்த காலங்களில் இணையவாசிகள் கேப்ட்சா சோதனையை எதிர்கொள்ளும் விதம் மற்றும் பாட்கள் அணுகும் விதத்தை ஆழமாக கவனித்து, அதன் அடிப்படையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அட்வான்ஸ்ட் ரிஸ் அனாலசிஸ் என்று கூகுள் இதை சொல்கிறது.

ரி-கேப்ட்சா சோதனையின் போது, அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இணையவாசியின் செயல்பாட்டை கவனித்து செயல்படும் ஆற்றல் இந்த முறையில் இருப்பதாக கூகுள் குழு சொல்கிறது. சில நேரங்களில், புகைப்படம் போன்றவை காண்பிக்கப்பட்டு அடையாளம் காட்ட கேட்கப்படலாம். இந்த சோதனை மனிதர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதோடு , புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வசதி, வரைபட சேவை மேம்பாடு ஆகியவற்றுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரி கேப்ட்சா என்றால் என்ன என்று குழப்பமாக இருந்தால் , அதற்கான விரிவாக்கம் :Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart. கம்ப்யூட்டர் மற்றும் ரோபோக்களை வேறுபடுத்துவதற்கான தானியங்கி டியுரிங் டெஸ்ட் என்று பொருள்.

கம்ப்யூட்டர் மேதையான ஆலன் டியூரிங் செயற்கை அறிவிற்காக முன்வைத்த சோதனை, டியூரிங் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ரிகேப்ட்சா பற்றி கூகுள் விளக்கம்: இங்கே 

Tuesday, December 2, 2014

இந்தியாவில் இணைய அடிமைகள் அதிகம்: ஆய்வில் தகவல்

இணைய அடிமைகள் என்று யாரைச்சொல்லலாம்? விழித்திருக்கும் நேரத்தில் ஒவ்வொரு மணி நேரத்திலும் இணைய தொடர்பு கொண்டிருப்பவர்கள் என எடுத்துக்கொண்டால் இத்தகைய இணைய அபிமானிகள் (அடிமைகள்) இந்தியாவில் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

53 சதவீத இந்தியர்கள் விழித்திருக்கும் நேரங்களில் அநேகமாக இணையத்துடன் தொடர்பு கொண்டு இருக்கின்றனர் என சர்வதேச அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி இணைய தொடர்பு கொண்டவர்களின் சர்வதேச சராசரி 51 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய பயன்பாட்டில் இந்திய முன்னேறிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம் தான். குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகைக்கும் பிறகு இணைய பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.



இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஏடி கியார்னே குலோபல் ரிசர்ச் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இணைய பயன்பாடு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

கனெடெட் கஸ்டமர்ஸ் ஆர் நாட் கிரியேடட் ஈக்வல் ( Connected Consumers Are Not Created Equal: A Global Perspective.) எனும் இந்த ஆய்வு இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது. வாரம் ஒருமுறையேனும் இணையத்தை பயன்படுத்துபவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் 1,000 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் விழித்திருக்கும் நேரத்தில் ஒவ்வொரு மணிக்கும் இணையத்தில் தொடர்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். சர்வதேச அளவில் இது 51 சதவீதம். அமெரிக்காவில் 51 சதவீதம். சீனாவில் 36 சதவீதம். ஜப்பானில் 39 சதவீதம். ஆனால் பிரேசிலில் 71 சதவீதம். நைஜிரியாலும் இது அதிகம் என்பது தான் ஆச்சர்யம். இணைய தொடர்பு என்றால், ஒவ்வொரு மணிக்கும் ஒரு முறையேனும் இணையத்தை பயன்படுத்துபவர்கள் என்று பொருள். (அடிக்கடி இணையத்தை பயன்படுத்துபவர்கள் தான் இந்த ஆய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்).

இணைய பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும் 9 நாடுகள் மற்றும் 25வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்க பிரதிநிதித்துவத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டதுஇணைய பயன்பாட்டிற்கு மூன்று விஷயங்கள் முக்கியமாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, சுய வெளிப்பாடு மற்றும் மின்வணிகம் போன்ற இணைய சேவைகளை பயன்படுத்துவது ஆகியவற்றுக்காக இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் சுயவெளிப்பாட்டிற்காக இணையத்தை பயன்படுத்துவது அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

பேஸ்புக் பயன்பாட்டிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 97 சதவீதம் பேர் பேஸ்புக்கில் இருப்பதாக கூறியுள்ளனர்.


இதனிடையே மாணவர்களின் இணைய பயன்பாடு பற்றிய ஆய்வு ஒன்று 93 சதவீத இந்திய மாணவர்கள் தினமும் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 73 சதவீத மாணவர்கள் கல்விக்காக இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தான். இணையத்தை கல்வி சார்ந்த தகவல்களை பெற நம்பகமான இடமாக கருதுவதும் அதிகமாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் பற்றி மற்ற இடங்களில் தெரிந்து கொண்டாலும் இணையம் மூலம் அதை சரிபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவின் சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.




இன்றைய சூடான செய்திகள்...

காமடி நடிகரை கல்யாணம் செய்ய ஓகே சொன்ன சமந்தா


சைக்கிள் பம்ப் மூலம் நடத்தப்படும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை!.(வீடியோ)


சூர்யாவின் மாஸ்டர் பிளான்


மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே நகர்ந்து செல்வதால் அச்சமடையும் மக்கள்(வீடியோ)


இதுவரை இல்லாத நெருக்கடியில் அஜித்தின் 'என்னை அறிந்தால்' !





Monday, December 1, 2014

ஃபேஸ்புக்கிற்கு ஆப்பு வைக்கும் மெசேஜ் 'ஆப்'கள்

ஃபேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை அனுப்பவது கடந்த மாதம் உலக அளவில் வெகுவாக குறைந்துள்ளது. மக்களிடையே ஃபேஸ்புக் மீதான மோகம் குறைந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஃபேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது 20 சதவீதம் குறைந்துள்ளது என்று லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குளோபல்வெப்இன்டெக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் மீதன மோகம் குறைய செல்போன்களில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன்கள் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக்

 ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு கடந்த மாதம் மெசேஜ் அனுப்பியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் வெகுவாக குறைந்துள்ளது.

 இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் 28 சதவீதம் பேர் என்ன நடக்கிறது என்பதை பார்க்க மட்டுமே ஃபேஸ்புக் செல்வதாகவும், எதையும் போஸ்ட் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அப்ளிகேஷன்கள்

இளம் வயதினர் செல்போன்களில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன்கள் மூலம் மெசேஜ் அனுப்பவும், புகைப்படங்களை பகிரவும் விரும்புகிறார்கள்.

 ஃபேஸ்புக் பயன்பாடு குறைவதற்கு அது போர் அடிப்பது, விருப்பம் இல்லாமை, தனிமை(பிரைவசி) இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது.

இந்தியாவில் நெட் பயன்படுத்துவோரில் 68 சதவீதம் பேர் 2013ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வீசாட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். வாட்ஸ் ஆப்பில் 62 சதவீதம் பேரும், ஃபேஸ்புக்கில் 63 சதவீதம் பேரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

 மெசேஜ் அப்ளிகேஷன்கள் துரிதமாக உள்ளதாக ஆய்வில் கலந்து கொண்ட 1 லட்சத்து 70 ஆயிரம் பேரில் 41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.