Monday, December 1, 2014

பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகல்?

பிரதமர் நரேந்திர மோடி சார்க் மாநாட்டில் கலந்து கொண்டபோது  இலங்கை அதிபர் ராஜ பக்சேயை அதிப்[அர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.


பிரதமர் மோடி, ராஜ பக்சேக்கு வாழ்த்து தெரி வித்ததற்கு .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு  தெரிவித்தார். கடந்த 27-ந்தேதி மாவீரர்கள் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, ’பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார். தமிழ் இன அழிப்பைச் செய்யும் சிங்கள அதிபர்   ராஜபக்சேயை வாழ்த்திய தோடு, அவர்  மீண்டும் அதிபராக வர  வேண்டும் என்று சொல்வது தவறுஎன்று கூறினார்.

இதற்கு பா... தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வைகோ நாவை அடக்காவிட்டால், தமிழ் நாட்டில் அவர் நடமாட முடி யாது. அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பா... தொண்டனுக்கும் தெரியும் என்று கூறினார்.

 வைகோவை மிரட்டும் வகை யில் ராஜா பேசியதற்கு தமிழக அரசையல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்பா... தலைவர்களில் ஒருவரான  சுப்பிரமணிய சாமி வைகோவை பா... கூட்டணியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அடிக்கடி டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். இந்த நிலையில் பா...வில் உள்ள மற்ற தலைவர்களின் பேச்சும் வைகோவுக்கு எதிராகவே உள்ளது. இதன் காரணமாக பா... .தி.மு.. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் பாராளு மன்றத் தேர்தல் நடந்த போது, பா... தலைமையிலான கூட்டணியில், தமிழ்நாட்டில் இருந்து முதன் முதலாக சென்று அந்த அணியில் சேர்ந்தது வைகோவின் .தி.மு..தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் முடிந்து, மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜ பக்சே அழைக்கப்பட்ட நாள் முதலே பா... & .தி.மு.. இடையிலான  மோதல் தொடங்கி விட்டது.

இதையடுத்து இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைகளில் பா..., .தி.மு.. இடையே கருத்து வேறுபாடு  அதிகரித்தது. குறிப்பாக சிங்கள தலைவர் களுடனும், சிங்கள அரசு டனும் பா... மூத்த தலை வர்கள் அன்னியோன்யமாக பழகுவதை .தி.மு..வின ரால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுக் கொடுக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது போலவே பா... அரசும் நடந்து கொள்வது .தி.மு..வினரை ஏமாற்றம் அடைய  செய்துள்ளது. மேலும்   ராஜபக்சேவே மீண்டும் அதிபராக வர வேண்டும் என்று பிரதமர் மோடியே விரும்புவது .தி. மு..வினரிடம் உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்தி இருக் கிறது. எனவே பா... கூட் டணியில் இருந்து விலகி, எதிர்போராட்டங்களில் ஈடுபட .தி.மு..வினர் தயாராகி உள்ளனர்.

பா... கூட்டணியில் இருந்து வைகோ விலக வேண்டும்என்று தமிழருவி மணியன் கோரிக்கை  விடுத் துள்ளார். எனவே 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா... கூட் டணியில் வைகோ இடம் பெற மாட்டார் என்ற எண் ணம் வலுத்து வருகிறது. டாக்டர் ராமதாசின் பா... ஏற்கனவே 2016 தேர்தலில் தங்கள் தலைமை யில் புதிய அணி உருவாக்கப் போவதாக கூறியுள்ளது. எனவே தற்போது தமிழக பா... அணியில் விஜயகாந்தின் தே.மு.தி.. மட்டுமே உள்ளது.


நேற்று நாகர் கோவிலில் பேட்டில் அளித்த வைகோ பா.ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மிகப்பெரிய தலைவர்கள். அவர்களுடன் கூட்டணியில் க்கும்போதும், இல்லாதபோதும் நான் பழகியிருக்கிறேன். அவர்களது கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம்கூட மோடியிடம் இல்லை.என கூறி யது குறிப்பிட தக்கது.
இன்றைய சூடான செய்திகள்...

காமடி நடிகரை கல்யாணம் செய்ய ஓகே சொன்ன சமந்தா


சைக்கிள் பம்ப் மூலம் நடத்தப்படும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை!.(வீடியோ)


சூர்யாவின் மாஸ்டர் பிளான்


மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே நகர்ந்து செல்வதால் அச்சமடையும் மக்கள்(வீடியோ)


இதுவரை இல்லாத நெருக்கடியில் அஜித்தின் 'என்னை அறிந்தால்' !

No comments:

Post a Comment