காமெடி
நடிகர்கள் ஹீரோவாகிவிட்டதால் அந்த இடத்துக்கு பஞ்சம்
வந்திருக்கிறது. படத்துக்கு படம் புதுப்புது காமெடி
நடிகர்கள் அறிமுகமாகின்றனர். இப்படி வருபவர்களில் ஒன்றிரண்டுபேர்
கிளிக் ஆகின்றனர். சில நடிகர்கள் தங்களை
அடையாளம் காட்டிக்கொள்வதற்காக ஹீரோயின்களிடம் வழியத் தொடங்கிவிடுகின்றனர்.
இப்படித்தான் ‘கத்தி‘ படத்தில் காமெடியனாக
நடித்த காமெடி நடிகர் சதீஷ்,
‘எனக்கு உங்கள மாதிரிதாங்க பொண்ணு
வேணும். அப்பத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்‘ என்று சமந்தாவிடம் சொல்லி
ஐஸ் வைத்தார். ஜலதோஷம் பிடிக்காத குறையாக
பதில் சொன்ன சமந்தா,‘கவலைப்படாதீங்க
உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்‘
என பட்டுனு சொன்னதும் திடுக்கிட்டுப்போனார்
சதீஷ்.
அருகில்
இருந்தவரோ நீங்க இவர கல்யாணம்
பண்ணிகிட்டா சித்தார்த் யாரை கட்டிக்குவார்' என்றதும்
இடமே குபீர் ஆனது. இதே
காமெடியன் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்‘
படத்தில் நடிக்கிறார். அதில் ஹீரோயினாக நடிக்கும்
பிந்து மாதவியிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தவர் 'நீங்க சிலுக்கு
ஸ்மிதா மாதிரியே இருக்கீங்க.
பாத்துக்கிட்டே
இருக்கலாம்போலிருக்கு‘னு சொன்னாராம். ஏற்கனவே
பலபேரு இவர்கிட்ட இப்படி வந்து பிட்
போட்டு பாத்துட்டாங்களாம். அதனால் காமெடி நடிகர்
சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம் பிந்து. சூரி உள்பட
பல காமெடியன்கள் ஹீரோயின்களிடம் கடலை போடுவதில் கில்லாடிகள்
என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
இன்றைய சூடான செய்திகள்...
No comments:
Post a Comment