விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, March 1, 2011

    மங்காத்தாவில் அஜீத்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் நடிகை


    அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. மங்காத்தா படத்தில் ஒரு குத்தாட்டம் பாடல் ஒன்று இருக்கிறது. இதில் அஜீத்துடன் இணைந்து பாலிவுட் நடிகை கைநாட் அரோரா நடனமாகிறார்.

    க்ளவுடு நயன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இதில் அஜீத்துடன் திரிஷா ஜோடிபோடுகிறார். இவர்களுடன் அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு இப்படத்தை இயக்குகிறார். படத்தில் ஒரு குத்தாட்ட ‌பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இதற்காக பாலிவுட்டில் இருந்து கைநாட் அரோரா என்ற நடிகை இறங்குமதியாகியுள்ளார். இவர் பாலிவுட்டில் வெளியான கட்டா மிட்ட படத்தில் அயிலா ரி அயிலா என்ற பாடலில் நடனமாடி பிரபலமானவர்.

    இந்நிலையில் மங்காத்தா படத்திற்காக, கடந்த நான்கு நாட்களாக அஜீத்துடன் இணைந்து ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார் கைநாட் அரோரா. அஜீத்துடன் இணைந்து நடித்தது குறித்த கைநாட் அரோராவிடம் கேட்டபோது, அஜீத் சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதரும் கூட என்று பாராட்டியுள்ளார்.

    இதனிடையே கைநாட் அரோராவிற்காக கோழி சூப், சிக்கன், தோசை என்று விதவிதமான உணவுகளை சமைத்து கொடுத்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அஜீத்.

    எதுஎப்படியோ கைநாட் அரோராவிற்கு, அஜீத் படைத்த விருந்தை காட்டிலும், மங்காத்தா படத்தில் இவர்கள் ஆடிய குத்தாட்டம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்குமா? என்று பார்ப்போம்.


    Posted by விழியே பேசு... at 4:53 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    தாத்தா இறப்பிலும் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்


    சற்று லேட்டாகதான் வெளியிட்டிருக்கிறோம் இந்த செய்தியை! ஏனென்றால் அவராகவே உணர்ந்து அந்த போஸ்டர்களை கிழித்திருப்பார் என்று நம்பியதால் வந்த தாமதம் இது. பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன்தான் நடிகர் ஷக்தி. சமீபத்தில் இவரது தாத்தாவும் மிகப்பெரிய சாதனையாளருமான பீதாம்பரம் அமரர் ஆனார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மற்றும் ஆந்திராவின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார் என்டி.ராமராவ் இருவரது மேக்கப் மேனாக பல வருடங்கள் பணியாற்றியவர் இவர்.

    இவரது வாரிசுகளாக கலையுலகில் நுழைந்தவர்கள்தான் டைரக்டர் பி.வாசுவும், நடிகர் ஷக்தியும். கடந்த 21 ந் தேதி இறந்த பீதாம்பரத்தின் கண்ணீர் போஸ்டர்கள் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் பக்கத்திலேயே ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது ஷக்தியின் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்!

    கள்ளச்சிரிப்பழகா... என்று ரசிகர்கள் ஆசையோடு அவரை வர்ணித்திருந்தார்கள் அந்த போஸ்டரில். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தலைப்பும் அதுதான். 23 ந் தேதி இவரது பிறந்த நாளாம். அதற்காக முன்பே அடித்து வைத்திருந்த போஸ்டர்களைதான் ஒட்டி மகிழ்ந்திருக்கிறார் ஷக்தி. (இது என் வேலையல்ல, ரசிகர்களின் வேலை என்று அவர் சொன்னாலும் சினிமாவில் புழங்குகிறவர்களுக்கு தெரியும்... நிஜம் என்னவென்று!)

    ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா தவிர ஒருவருக்கும் ரசிகர்கள் போஸ்டர் அடிப்பதில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களே ரசிகர் மன்றம் என்ற பெயரில் அடித்துக் கொள்பவைதான் அவையெல்லாம். தாத்தா இறந்த துக்கம் மறைவதற்குள் பிறந்த நாள் கொண்டாடுகிற இவரைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம்!



    Posted by விழியே பேசு... at 4:34 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    மீரா ஜாஸ்மின், நயன்தாரா மீது 'அம்மா' கோபம்!

    மலையாள நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள விழாவுக்கு வர மறுத்ததால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் அம்மாநில நடிகர் சங்கமான அம்மா-வின் நிர்வாகிகள்.

    மலையாள நடிகர் சங்கத்தினர் கோழிக்கோட்டில் நாளை பிரமாண்ட கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பங்கேற்குமாறு அனைத்து நடிகர், நடிகைகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மம்முட்டி, மோகன்லால் உள்பட முன்னணி நடிகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஆனால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    நயன்தாரா-பிரபுதேவா திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. எனவே தனியாக இந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாரா விரும்பவில்லையாம். ஹைதராபாத்தில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    மீராஜாஸ்மினும் விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம். இதற்கு முன் நடந்த நடிகர் சங்க கூட்டங்களிலும் மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மீரா ஜாஸ்மின் மீது இந்த சங்கம் நடவடிக்கையும் எடுத்துள்ளது.

    இப்போது கோழிக்கோடு விழாவுக்கு வர மறுத்ததால் இருவர் மீதும் நடிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.



    Posted by விழியே பேசு... at 4:13 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    சின்ன வயசு கதாநாயகிக்கா ரஜினியோடு போட்டி போடும் கமல்


    ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கிற நட்பு குறித்து ஒரு புராணமே எழுதலாம். ஆனால் போட்டியென்று வந்துவிட்டால் சுற்றிவிட்ட பம்பரம் மாதிரிதான் ஆகிறார்கள் இருவருமே! இந்த போட்டியின் உச்சம்தான் சோனாக்ஷி சின்ஹாவை தமிழ் பேச வைத்திருக்கிறது. (டப்பிங் உதவியோடுதான்)

    கமல் அடுத்து நடிக்கும் படத்தில் பிரபல இந்தி நடிகை சோனாக்ஷியைதான் ஹீரோயினாக புக் பண்ணியிருக்கிறார்கள். இதில் எங்கேயிருந்தது வந்தது ரஜினி-கமல் போட்டி? கொஞ்சம் பழசை கிளறினால் பளிச்சென்று புரியும். கமல் படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவிடம்தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவருக்கும் கமலுடன் நடிப்பதில் அலாதி ஆசை இருந்தது. வெண்ணெய் திரண்டு வருகிற நேரத்தில், பானையை உடைத்தார் ரஜினி.

    மும்பையில் இருந்து தீபிகா படுகோனேவை இறக்குமதி செய்தார் தனது ராணா படத்திற்கு. இருபத்தி சொச்சம் வயதுடைய தீபிகாவை ரஜினி ஜோடியாக்கிக் கொண்டதும், அதே மும்பை... அதே இருபத்தி சொச்சம் என்று ஆசைப்பட்டாராம் கமல். சட்டென்று அவர் நினைவுக்கு வந்தது சோனாக்ஷி முகம்தான். தமிழில் அறிமுகமானாலும் இந்திதான் நமது டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சரியான இடம் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் சோனாக்ஷி. இருந்தாலும் கமலுடன் நடிக்க அவர் சம்மதித்ததே கைநிறைய கொடுக்கப்பட்ட சம்பளம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

    மகள் வயசு பொண்ணுடன் நடிக்கப் போகிறார் கமல். அதற்காக இருவரும் பக்கத்தில் நின்றால் ஒரே வயசு போல தோன்றுகிற அளவுக்கு தன்னை மாற்றிக் கொள்வார் கமல் என்று சத்ருஹன் சின்ஹாவே கருத்து தெரிவிக்கிற அளவுக்கு இந்த காம்பினேஷன் காபியும் டிகாஷனுமாக கொண்டாடப்படுகிறது மும்பையில் கூட! (பார்றா...)


    Posted by விழியே பேசு... at 3:56 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    சிங்களன் வீட்டுபிள்ளை அசின் படம் இலங்கையில் திரையிட அனுமதி


    அசின் படத்தை இலங்கையில் திரையிட சிங்கள அரசு அனுமதி அளித்துள்ளது.விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் நடிகர்களை இலங்கை அரசு பட்டியலிட்டு வைத்துள்ளது. அவர்கள் படங்களை இலங்கையில் திரையிட அனுமதி அளிப்பது இல்லை.

    அந்த வகையில் விஜய் படத்துக்கும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாகையில் இலங்கை அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கடுமையாக கண்டித்தார்.

    மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் இங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் இலங்கை காணாமல் போய் விடும் எனறும் ஆவேசமாக பேசினார். இந்த பேச்சுக்கள் சிங்களர்களை ஆத்திரமூட்டியது. விஜய் படங்களை இலங்கையில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று எதிர்த்தனர்.

    இந்த நிலையில் விஜய், அசின் ஜோடியாக நடித்த “காவலன்” படம் இலங்கையில் திரையிட அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர்.

    இறுதியில் அசின் இப்படத்தில் நடித்து இருப்பதால் அவருக்காக படத்தை இலங்கையில் திரையிட அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகினர் தடையை மீறி சில மாதங்களுக்கு முன் அசின் இலங்கை சென்றார். அங்கு நடந்த இந்தி படப்பிடிப்பில் பங்கேற்றார்.

    பிற நடிகர்கள் இலங்கை பயணத்தை தவிர்த்த நிலையில் அசின் துணிச்சலாக வந்தது சிங்கள அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு விசேஷ வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. அவருக்காகவே “காவலன்” படத்தை திரையிட சம்மதித்து உள்ளனர்.


    Posted by விழியே பேசு... at 1:00 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    பில்லா 2`இயக்குனர் அறிவிப்பு



    அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.

    கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர். தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. 


    இதையும் படியுங்களேன்..... 
    (இந்த தொடரில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே!)


    ஆட்டோ சங்கர் 12(தொடர்)




    Posted by விழியே பேசு... at 9:24 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    ஆட்டோ சங்கர் 12(தொடர்)


    கடை வாசல்ல நின்னு நாடார் (அவர் பேரு தெரியாததால தான் இப்படி சொல்ல வேண்டியதா போச்சு தவறாக நினைக்க வேண்டாம்)சிகரெட் புடிசுகிட்டிருந்தார். சங்கரை பார்த்ததும் கேலியாக சிரித்தார். 'என்னடா அடி எப்படி இருக்கு?"ன்னு கேட்கிற மாதிரியான சிரிப்பு அது. சிகரெட் புகை மொத்தத்தையும் (தேவைக்கு அதிகமாகவே) அம்பு மாதிரி சங்கர் முகத்துக்கு நேரா அனுப்பினார்.
    அநேகமா, 'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம் அதுதான்னு நினைக்கிறேன்....!
    சங்கர் நின்று திரும்பிப் பார்த்தான்.அவர் முகத்தில் கேலி சிரிப்பு. சங்கரை செல்லாத நயாபைசாவைப் பார்க்கிற மாதிரி அருவெறுப்ப பார்த்தார். சங்கர் ரத்தம் கொதித்தது. உள்ளுக்குள்ளே புஸ் புஸ்ஸூன்னு புகைந்தது.
      அவரை நெருங்கி போனான் அப்போது சங்கருக்கு மெட்ராஸ் பாஷை தெரியாது. புழக்கத்தில் இருந்த கெட்ட வார்த்தைகள் எதுவுமே தெரியாது. டீசண்டா தான் பேசுவான்! 
    "நாடாரே நான் திமுக கட்சிக்காரன். ஆனா, எம்.ஜி.ஆர் ரசிகன். நான் எந்த தப்பும் பண்ணாம அடி வாங்க வச்சியே....இப்போ வட்டியும் முதலுமா வாங்கிக்கோ."
    அந்த ஆளை கொத்தா சட்டையை ரெண்டு கையாலேயும் புடிச்சு வெளியே இழுத்தான். அந்த ஆளை வெறி தீருமட்டும் அவனை அடிச்சு உதச்சு நடுரோட்டில் மழை நீரில், சேற்றில் படுக்க வைத்தான். நெஞ்சிலும் முகத்திலும் எட்டி எட்டி உதைத்தான். மூஞ்சி முகரையெல்லாம் அந்த கடைகாரருக்கு ரத்தம். சங்கருக்கு பசியும் அவன் பட்ட அடியின் வலியும் அவனை ஒரு வெறி பிடித்த வேங்கையாக மாற்றி விட்டது. 
    சகதியிலே படுத்துகிட்டே சங்கரை கையெடுத்துக் கும்பிட்டார்.
    "அண்ணே...என்னை அடிச்சே கொன்னுடாதீங்க அண்ணே." என்றார். ஆனாலும் சங்கருக்கு ஆத்திரம் தீரவில்லை.
    கடை பெஞ்ச் மேலே இருந்த காய்கறித் தட்டுக்களை எடுத்து ரோட்டிலே வீசினான். பிஸ்கெட் பாக்கெட், மிட்டாய் பாட்டில் அத்தனையும் பிய்ச்சு எறிந்தான். கடையே அலங்கோலமாச்சு.
    அங்கே குடிசையில் குழந்தை கீதா துண்டு பிஸ்கெட் கிடைக்கமா பசிலே  துடிக்குது. ஆனா, இங்கே அந்த குழந்தையின் தந்தையே பிஸ்கெட் பாக்கெட்டை எல்லாம் வீதியில் வீசுறான். இது தான் கோபம் வந்தால் தன்னிலையை மறந்திடுவாங்க என்பதா...?
    'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்'பாங்க.
    அன்னிக்கு ஒரு நாடார் கடையே பறந்து போக சங்கருக்கு வந்த பசி தான் காரணமா? பாதிப்பு வந்தது தான் காரணம்னு நான் நினைக்கிறேன்.
    அந்த கடைக்காரரை அவ்வளவு தூரம் புரட்டி எடுத்தும் தடுக்க யாருமே வரல்ல.பக்கத்து கடைக்காரங்களெல்லாம் வேடிக்கைத் தான் பார்த்துக்கிட்டிருந்தாங்க!
    ஒரு தடவை சர்ச்சில் கிட்ட அவரோட நண்பர், 'நீங்க பேசுற கூட்டங்களுக்கெல்லாம் நிறைய கூட்டம் வருதே'ன்னு பாராட்டினாராம். அதற்கு சர்ச்சில்,' நாளைக்கு என்னை பொது இடத்திலே தூக்கில் போடட்டும். அதை பார்க்க இதைவிட அதிகமாக கூட்டம் வரும்'ன்னு சொன்னாராம்!
    ஜனங்க தனக்கு ஆபத்து வராத வரையில் சரின்னு இப்படி வேடிக்கை பார்க்க பார்க்க, வன்முறைகளும், ரௌடிகளும் தோன்றிகிட்டே தான் இருப்பாங்க.
    நாடார் அடி வாங்கும் போது மட்டுமில்லை சங்கர் அடிவாங்கும் போதும் தலையிட்டு போலீஸ்காரர்கிட்ட 'எதற்காக இப்படி ஒரு அப்பாவியை  நடுரோட்டுல போட்டு அடிக்கிறீங்க? உங்களுக்கு யார் அந்த அதிகாரம் தந்தது'ன்னு கேட்பதற்கென்ன பயம்!
    நியாயத்தை கேட்கவே பயப்படுகிற போது வேடிக்கை என்ன வேண்டிக் கிடக்குது?
    இன்னைக்கு நீங்க பார்த்து ரசிக்கிற வேடிக்கை நாளைக்கே உங்க வாழ்க்கைலே நடந்தா ....? அப்போ அது வேடிக்கையா ...? அல்லது உங்கள் வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களா....?
    கடையை சூறையாடத் தொடங்கினதும். நாடார் சங்கரின் காலை பிடிசுகிட்டு கெஞ்ச ஆரம்பிச்சார்.
    சட்டுன்னு அமைதியானான் சங்கர். கடையிலேயிருந்து பேப்பரை எடுத்தான். தோராயமா ஒரு கிலோ அரிசியை பொட்டலமா கட்டி எடுத்தான்.
    "இது எவ்வளவு அரிசிடா இருக்கும்" கடைகாரர் மென்று முழுங்கினாறு.
    "ஒ ...ஒரு கிலோ இருக்கும்."
    "இதை நான் கடனா கேட்டதுக்கு போலீஸை விட்டு அடிசேல்லே? இப்ப அரிசியை சும்மாவே எடுத்துட்டுப் போறேன்.! இப்ப போலீஸ்ல போய் ரிப்போர்ட் குடுடா! என் பேரு சங்கர். பொம்மைக்காரர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலதான் இருக்கேன். என் அட்ரசையும் சொல்லுடா நாயே"-சங்கர்.
    மறுப்படி அவர் நெஞ்சிலே ஒரு மிதி! வலியிலே சுருண்டுட்டாரு.
    பொட்டலமாக கட்டிய அரிசியோடு சங்கர் வீட்டுக்கு நடந்தான். வழியிலே தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் முகம், கை , காலெல்லாம் கழுவினான்.  வீடு நெருங்க நெருங்க சங்கருக்கு பயம் எடுத்தது. ஜெகதீஸ்வரியிடம் என்ன சொல்ல போகிறேன். ஒரு வேளை கடைக்காரர் போலீஸை கூட்டி வந்திட்டா என் ஜெகதீஸ்வரியும் குழந்தைகளும் என்ன பண்ணுவாங்க' என்று பயந்த படி நடந்தான் வீடு நோக்கி ....

    ஆட்டோ சங்கர் முன்னால் ...


    நூறாவது நாள் : ஆட்டோ சங்கர் (தொடர்)



    ஆட்டோ சங்கர் 2(தொடர் )

    ஆட்டோ சங்கர் 3 (தொடர் )


    ஆட்டோ சங்கர் 4 (தொடர்)


    ஆட்டோ சங்கர் 5 (தொடர்)


    ஆட்டோ சங்கர் 6 (தொடர்)


    ஆட்டோ சங்கர் 7(தொடர் )


    ஆட்டோ சங்கர் 8 (தொடர் )

    ஆட்டோ சங்கர் 9 (தொடர்)



    • ஆட்டோ சங்கர் 10 (தொடர்)


    • ஆட்டோ சங்கர் 11(தொடர்)




    Posted by விழியே பேசு... at 8:58 AM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தொடர்
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.