அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. மங்காத்தா படத்தில் ஒரு குத்தாட்டம் பாடல் ஒன்று இருக்கிறது. இதில் அஜீத்துடன் இணைந்து பாலிவுட் நடிகை கைநாட் அரோரா நடனமாகிறார்.
க்ளவுடு நயன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இதில் அஜீத்துடன் திரிஷா ஜோடிபோடுகிறார். இவர்களுடன் அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு இப்படத்தை இயக்குகிறார். படத்தில் ஒரு குத்தாட்ட பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இதற்காக பாலிவுட்டில் இருந்து கைநாட் அரோரா என்ற நடிகை இறங்குமதியாகியுள்ளார். இவர் பாலிவுட்டில் வெளியான கட்டா மிட்ட படத்தில் அயிலா ரி அயிலா என்ற பாடலில் நடனமாடி பிரபலமானவர்.
இந்நிலையில் மங்காத்தா படத்திற்காக, கடந்த நான்கு நாட்களாக அஜீத்துடன் இணைந்து ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார் கைநாட் அரோரா. அஜீத்துடன் இணைந்து நடித்தது குறித்த கைநாட் அரோராவிடம் கேட்டபோது, அஜீத் சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதரும் கூட என்று பாராட்டியுள்ளார்.
இதனிடையே கைநாட் அரோராவிற்காக கோழி சூப், சிக்கன், தோசை என்று விதவிதமான உணவுகளை சமைத்து கொடுத்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அஜீத்.
எதுஎப்படியோ கைநாட் அரோராவிற்கு, அஜீத் படைத்த விருந்தை காட்டிலும், மங்காத்தா படத்தில் இவர்கள் ஆடிய குத்தாட்டம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்குமா? என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment