ரஜினிக்கும் கமலுக்கும் இருக்கிற நட்பு குறித்து ஒரு புராணமே எழுதலாம். ஆனால் போட்டியென்று வந்துவிட்டால் சுற்றிவிட்ட பம்பரம் மாதிரிதான் ஆகிறார்கள் இருவருமே! இந்த போட்டியின் உச்சம்தான் சோனாக்ஷி சின்ஹாவை தமிழ் பேச வைத்திருக்கிறது. (டப்பிங் உதவியோடுதான்)
கமல் அடுத்து நடிக்கும் படத்தில் பிரபல இந்தி நடிகை சோனாக்ஷியைதான் ஹீரோயினாக புக் பண்ணியிருக்கிறார்கள். இதில் எங்கேயிருந்தது வந்தது ரஜினி-கமல் போட்டி? கொஞ்சம் பழசை கிளறினால் பளிச்சென்று புரியும். கமல் படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவிடம்தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவருக்கும் கமலுடன் நடிப்பதில் அலாதி ஆசை இருந்தது. வெண்ணெய் திரண்டு வருகிற நேரத்தில், பானையை உடைத்தார் ரஜினி.
மும்பையில் இருந்து தீபிகா படுகோனேவை இறக்குமதி செய்தார் தனது ராணா படத்திற்கு. இருபத்தி சொச்சம் வயதுடைய தீபிகாவை ரஜினி ஜோடியாக்கிக் கொண்டதும், அதே மும்பை... அதே இருபத்தி சொச்சம் என்று ஆசைப்பட்டாராம் கமல். சட்டென்று அவர் நினைவுக்கு வந்தது சோனாக்ஷி முகம்தான். தமிழில் அறிமுகமானாலும் இந்திதான் நமது டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சரியான இடம் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் சோனாக்ஷி. இருந்தாலும் கமலுடன் நடிக்க அவர் சம்மதித்ததே கைநிறைய கொடுக்கப்பட்ட சம்பளம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
மகள் வயசு பொண்ணுடன் நடிக்கப் போகிறார் கமல். அதற்காக இருவரும் பக்கத்தில் நின்றால் ஒரே வயசு போல தோன்றுகிற அளவுக்கு தன்னை மாற்றிக் கொள்வார் கமல் என்று சத்ருஹன் சின்ஹாவே கருத்து தெரிவிக்கிற அளவுக்கு இந்த காம்பினேஷன் காபியும் டிகாஷனுமாக கொண்டாடப்படுகிறது மும்பையில் கூட! (பார்றா...)
No comments:
Post a Comment