சற்று லேட்டாகதான் வெளியிட்டிருக்கிறோம் இந்த செய்தியை! ஏனென்றால் அவராகவே உணர்ந்து அந்த போஸ்டர்களை கிழித்திருப்பார் என்று நம்பியதால் வந்த தாமதம் இது. பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன்தான் நடிகர் ஷக்தி. சமீபத்தில் இவரது தாத்தாவும் மிகப்பெரிய சாதனையாளருமான பீதாம்பரம் அமரர் ஆனார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மற்றும் ஆந்திராவின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார் என்டி.ராமராவ் இருவரது மேக்கப் மேனாக பல வருடங்கள் பணியாற்றியவர் இவர்.
இவரது வாரிசுகளாக கலையுலகில் நுழைந்தவர்கள்தான் டைரக்டர் பி.வாசுவும், நடிகர் ஷக்தியும். கடந்த 21 ந் தேதி இறந்த பீதாம்பரத்தின் கண்ணீர் போஸ்டர்கள் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் பக்கத்திலேயே ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது ஷக்தியின் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்!
கள்ளச்சிரிப்பழகா... என்று ரசிகர்கள் ஆசையோடு அவரை வர்ணித்திருந்தார்கள் அந்த போஸ்டரில். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தலைப்பும் அதுதான். 23 ந் தேதி இவரது பிறந்த நாளாம். அதற்காக முன்பே அடித்து வைத்திருந்த போஸ்டர்களைதான் ஒட்டி மகிழ்ந்திருக்கிறார் ஷக்தி. (இது என் வேலையல்ல, ரசிகர்களின் வேலை என்று அவர் சொன்னாலும் சினிமாவில் புழங்குகிறவர்களுக்கு தெரியும்... நிஜம் என்னவென்று!)
ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா தவிர ஒருவருக்கும் ரசிகர்கள் போஸ்டர் அடிப்பதில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களே ரசிகர் மன்றம் என்ற பெயரில் அடித்துக் கொள்பவைதான் அவையெல்லாம். தாத்தா இறந்த துக்கம் மறைவதற்குள் பிறந்த நாள் கொண்டாடுகிற இவரைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம்!
No comments:
Post a Comment