கடை வாசல்ல நின்னு நாடார் (அவர் பேரு தெரியாததால தான் இப்படி சொல்ல வேண்டியதா போச்சு தவறாக நினைக்க வேண்டாம்)சிகரெட் புடிசுகிட்டிருந்தார். சங்கரை பார்த்ததும் கேலியாக சிரித்தார். 'என்னடா அடி எப்படி இருக்கு?"ன்னு கேட்கிற மாதிரியான சிரிப்பு அது. சிகரெட் புகை மொத்தத்தையும் (தேவைக்கு அதிகமாகவே) அம்பு மாதிரி சங்கர் முகத்துக்கு நேரா அனுப்பினார்.
அநேகமா, 'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம் அதுதான்னு நினைக்கிறேன்....!
சங்கர் நின்று திரும்பிப் பார்த்தான்.அவர் முகத்தில் கேலி சிரிப்பு. சங்கரை செல்லாத நயாபைசாவைப் பார்க்கிற மாதிரி அருவெறுப்ப பார்த்தார். சங்கர் ரத்தம் கொதித்தது. உள்ளுக்குள்ளே புஸ் புஸ்ஸூன்னு புகைந்தது.
அவரை நெருங்கி போனான் அப்போது சங்கருக்கு மெட்ராஸ் பாஷை தெரியாது. புழக்கத்தில் இருந்த கெட்ட வார்த்தைகள் எதுவுமே தெரியாது. டீசண்டா தான் பேசுவான்!
"நாடாரே நான் திமுக கட்சிக்காரன். ஆனா, எம்.ஜி.ஆர் ரசிகன். நான் எந்த தப்பும் பண்ணாம அடி வாங்க வச்சியே....இப்போ வட்டியும் முதலுமா வாங்கிக்கோ."
அந்த ஆளை கொத்தா சட்டையை ரெண்டு கையாலேயும் புடிச்சு வெளியே இழுத்தான். அந்த ஆளை வெறி தீருமட்டும் அவனை அடிச்சு உதச்சு நடுரோட்டில் மழை நீரில், சேற்றில் படுக்க வைத்தான். நெஞ்சிலும் முகத்திலும் எட்டி எட்டி உதைத்தான். மூஞ்சி முகரையெல்லாம் அந்த கடைகாரருக்கு ரத்தம். சங்கருக்கு பசியும் அவன் பட்ட அடியின் வலியும் அவனை ஒரு வெறி பிடித்த வேங்கையாக மாற்றி விட்டது.
சகதியிலே படுத்துகிட்டே சங்கரை கையெடுத்துக் கும்பிட்டார்.
"அண்ணே...என்னை அடிச்சே கொன்னுடாதீங்க அண்ணே." என்றார். ஆனாலும் சங்கருக்கு ஆத்திரம் தீரவில்லை.
கடை பெஞ்ச் மேலே இருந்த காய்கறித் தட்டுக்களை எடுத்து ரோட்டிலே வீசினான். பிஸ்கெட் பாக்கெட், மிட்டாய் பாட்டில் அத்தனையும் பிய்ச்சு எறிந்தான். கடையே அலங்கோலமாச்சு.
அங்கே குடிசையில் குழந்தை கீதா துண்டு பிஸ்கெட் கிடைக்கமா பசிலே துடிக்குது. ஆனா, இங்கே அந்த குழந்தையின் தந்தையே பிஸ்கெட் பாக்கெட்டை எல்லாம் வீதியில் வீசுறான். இது தான் கோபம் வந்தால் தன்னிலையை மறந்திடுவாங்க என்பதா...?
'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்'பாங்க.
அன்னிக்கு ஒரு நாடார் கடையே பறந்து போக சங்கருக்கு வந்த பசி தான் காரணமா? பாதிப்பு வந்தது தான் காரணம்னு நான் நினைக்கிறேன்.
அந்த கடைக்காரரை அவ்வளவு தூரம் புரட்டி எடுத்தும் தடுக்க யாருமே வரல்ல.பக்கத்து கடைக்காரங்களெல்லாம் வேடிக்கைத் தான் பார்த்துக்கிட்டிருந்தாங்க!
ஒரு தடவை சர்ச்சில் கிட்ட அவரோட நண்பர், 'நீங்க பேசுற கூட்டங்களுக்கெல்லாம் நிறைய கூட்டம் வருதே'ன்னு பாராட்டினாராம். அதற்கு சர்ச்சில்,' நாளைக்கு என்னை பொது இடத்திலே தூக்கில் போடட்டும். அதை பார்க்க இதைவிட அதிகமாக கூட்டம் வரும்'ன்னு சொன்னாராம்!
ஜனங்க தனக்கு ஆபத்து வராத வரையில் சரின்னு இப்படி வேடிக்கை பார்க்க பார்க்க, வன்முறைகளும், ரௌடிகளும் தோன்றிகிட்டே தான் இருப்பாங்க.
நாடார் அடி வாங்கும் போது மட்டுமில்லை சங்கர் அடிவாங்கும் போதும் தலையிட்டு போலீஸ்காரர்கிட்ட 'எதற்காக இப்படி ஒரு அப்பாவியை நடுரோட்டுல போட்டு அடிக்கிறீங்க? உங்களுக்கு யார் அந்த அதிகாரம் தந்தது'ன்னு கேட்பதற்கென்ன பயம்!
நியாயத்தை கேட்கவே பயப்படுகிற போது வேடிக்கை என்ன வேண்டிக் கிடக்குது?
இன்னைக்கு நீங்க பார்த்து ரசிக்கிற வேடிக்கை நாளைக்கே உங்க வாழ்க்கைலே நடந்தா ....? அப்போ அது வேடிக்கையா ...? அல்லது உங்கள் வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களா....?
கடையை சூறையாடத் தொடங்கினதும். நாடார் சங்கரின் காலை பிடிசுகிட்டு கெஞ்ச ஆரம்பிச்சார்.
சட்டுன்னு அமைதியானான் சங்கர். கடையிலேயிருந்து பேப்பரை எடுத்தான். தோராயமா ஒரு கிலோ அரிசியை பொட்டலமா கட்டி எடுத்தான்.
"இது எவ்வளவு அரிசிடா இருக்கும்" கடைகாரர் மென்று முழுங்கினாறு.
"ஒ ...ஒரு கிலோ இருக்கும்."
"இதை நான் கடனா கேட்டதுக்கு போலீஸை விட்டு அடிசேல்லே? இப்ப அரிசியை சும்மாவே எடுத்துட்டுப் போறேன்.! இப்ப போலீஸ்ல போய் ரிப்போர்ட் குடுடா! என் பேரு சங்கர். பொம்மைக்காரர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலதான் இருக்கேன். என் அட்ரசையும் சொல்லுடா நாயே"-சங்கர்.
மறுப்படி அவர் நெஞ்சிலே ஒரு மிதி! வலியிலே சுருண்டுட்டாரு.
பொட்டலமாக கட்டிய அரிசியோடு சங்கர் வீட்டுக்கு நடந்தான். வழியிலே தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் முகம், கை , காலெல்லாம் கழுவினான். வீடு நெருங்க நெருங்க சங்கருக்கு பயம் எடுத்தது. ஜெகதீஸ்வரியிடம் என்ன சொல்ல போகிறேன். ஒரு வேளை கடைக்காரர் போலீஸை கூட்டி வந்திட்டா என் ஜெகதீஸ்வரியும் குழந்தைகளும் என்ன பண்ணுவாங்க' என்று பயந்த படி நடந்தான் வீடு நோக்கி ....
ஆட்டோ சங்கர் முன்னால் ...
ஆட்டோ சங்கர் 2(தொடர் )
நூறாவது நாள் : ஆட்டோ சங்கர் (தொடர்)
ஆட்டோ சங்கர் 2(தொடர் )
No comments:
Post a Comment