அமைச்சர் சிவி சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோரை விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திண்டிவனத்தில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் உறவினர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு குற்றப் பத்திரிகையில் இவர்கள் பெயர் நீக்கப்பட்டது.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment