"அனுஷ்காவும், தமன்னாவும் என்னைப் பற்றி திட்டம் போட்டு வதந்திகளை பரப்பி, என் மார்க்கெட்டை கெடுக்கப் பார்க்கிறார்கள் என்று நடிகை இலியானா பரபரப்பு புகார் கூறியுள்ளார். தெலுங்கு பட உலகில், நம்பர் ஒன் கதாநாயகியாக இருப்பவர் இலியானா. இப்போது, ஷங்கர் டைரக்ஷனில் விஜய் ஜோடியாக "நண்பன்" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் பரவியுள்ளன.
இதுபற்றி இலியானா அளித்துள்ள பேட்டியில், "தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களில் நான் நடித்து வருகிறேன். அது சில நடிகைகள் மனதில் பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது. எனக்கு எதிராக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். குறிப்பாக இரண்டு நடிகைகள் என்னைப் பற்றி அதிக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஒருவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு போனவர். இன்னொருவர் தமிழில் இருந்து தெலுங்குக்கு வந்தவர். நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக முதலில் வதந்தி பரப்பினார்கள். இப்போது, தெலுங்கு பட உலகில் எனக்கு `மார்க்கெட் போய் விட்டதாகவும், அதனால் தமிழ் பட உலகில் கவனம் செலுத்துவதாகவும் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். என் `மார்க்கெட்டை கெடுக்க திட்டம் போட்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
தமிழில், விஜய் ஜோடியாக `நண்பன் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. எனக்கு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சந்தர்ப்பம் எப்படி அமைகிறதோ, அதன்படி தமிழ் படங்களை ஒப்புக்கொள்வேன், என்று கூறியுள்ளார்.
நடிகை அனுஷ்காதான் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் என்றும், நடிகை தமன்னா தமிழில் இருந்து தெலுங்குக்கு போனவர் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
No comments:
Post a Comment