தனுஷின் ஆஸ்தான டைரக்டர் என்று பலராலும் நம்பப்பட்ட வெற்றி மாறன், தனுஷை விட்டு விட்டு சிம்புவை வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை முதலில் துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இவர்கள் இயக்கிய படத்தையே இன்னொருவரிடம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவி வந்ததால் படத்தொழிலை கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டப் போகிறார்கள் என்ற தகவலை பரப்பினார்கள் கோடம்பாக்கத்தில்.
ஆனால், மீண்டும் படம் எடுக்க வந்திருக்கிறது க்ளவுட் நைன் நிறுவனம். வெற்றி மாறனின் வடசென்னை படத்தை கைவிடுவதில்லை என்ற முடிவுக்கு தீர்மானமாக வந்துவிட்டார்களாம். இதில் சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்பதில் ஒரே போட்டா போட்டி.
செல்வராகவன்- தனுஷ் நட்பை விட்டு விலகிய நாளில் இருந்தே இருவரையும் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆன்ட்ரியா, தனுஷின் நேரடி எனிமியான சிம்பு படத்தில் நடிக்க விரும்பினாராம். அவரே முன் வந்து வெற்றி மாறனிடம் பேசியதாக கூறப்படுகிறது. பழம் நழுவி பாக்கெட்டில் விழுந்தால் யாருக்குதான் பிடிக்காது? ஆன்ட்ரியாவின் விருப்பத்தை நிறைவேற்றப் போகிறாராம் வெற்றிமாறன்.
இதற்கிடையில் இந்த படத்தில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது சிம்புவுக்கு. அதில் நடிக்க அமலா பாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். அவரும் ஒ.கே சொல்லிவிட்டால் ஆன்ட்ரியா, அமலா என்று பரபரப்புக்கு பஞ்சமே வைக்க மாட்டார் சிம்பு.
No comments:
Post a Comment