கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியானதால் என் இமேஜ் எல்லாம் போயிருச்சே... என்று நடிகை ஆண்ட்ரியா கவலைப்பட்டுள்ளார். மங்காத்தாவின் அர்ஜூன் ஜோடியாக நடித்த ஆண்ட்ரியா தற்போது திருப்பங்கள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவர் புடவை கட்டிக் கொண்டிருப்பது போல சில ஸ்டில்களை எடுத்திருந்தார்கள். கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்குமே என்று பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.
நெட்டில் வெளியான அடுத்த நிமிஷமே டைரக்டரை அழைத்து ஏக வசனத்தில் திட்டித் தீர்த்து விட்டாராம் ஆன்ட்ரியா. என் இமேஜே போயிருச்சு என்று கவலைப்பட்ட அவர், முதல்ல அந்த படத்தை இன்டர்நெட்டுகளில் வராம தடுக்கணும் என்று உத்தரவே போட்டுவிட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத டைரக்டர், கெஞ்சிக் கூத்தாடி வலைதள படத்தையெல்லாம் வடிகட்டி அழித்துக் கொண்டிருக்கிறாராம்.
No comments:
Post a Comment