இந்திய கிரிக்கெட் அணிக்கு 2005 முதல் 2007 வரை பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் சேப்பல். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் பயிற்சியாளராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகள் இருந்தது. கேப்டன் கங்குலி அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உலககோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைய சேப்பலின் தவறான வியூகங்களே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சேப்பல் ‘பியர்ஸ் போகஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அதில், சச்சின் குறித்து பரபரப்பு கருத்தை கூறியுள்ளார். இந்த புத்தகத்தில் மலேசியாவில் 2006ல் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது சச்சின் சரியாக ஆடவில்லை. இதையடுத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக என்னுடன் அவர் உரையாடினார். அன்றைய ஆட்டத்தில் தனது செயல்பாடு குறித்தும், காயங்கள் குறித்தும் மனமுடைந்து என்னிடம் பேசினார். இதிலிருந்து விடுபடுவதற்கு ஆலோசனைகளையும் கேட்டார். கோடிக்கணக்கான மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளதால் அதன் காரணமாக சச்சின் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். பிராட்மேனிடம் இருந்துகூட ஆஸி. ரசிகர்கள் அந்த அளவு எதிர்பார்க்க மாட்டார்கள். சச்சினுக்கு ஓய்வு என்பதே இல்லை என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment