கேரளாவில் தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள 280 தியேட்டர்களில் விஜய் நடித்த வேலாயுதம், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு மற்றும் சாருக்கானின் ரா-1 ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்த படங்களை மலையாள படவினியோகஸ்தர்கள் வாங்கி வெளியிட்டனர்.
இப்படங்கள் மூலம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.35 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது. மலையாள படங்களின் வினியோக உரிமைக்கு ரூ.3 1/2 கோடி வரை செலவாகும். ஆனால் புதிய தமிழ் படங்களுக்கு ரூ.2 1/2 கோடிதான் செலவாகிறது. கையையும் சுட்டு விடாமல் வருமானத்தை கடந்த சில ஆண்டுகளாக தமிழ்படங்கள் கொடுப்பதால் மலையாள படவினியோகிஸ்தர்கள் பலரும் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
தற்போது தீபாவளிக்கு வெளியான புதிய தமிழ்படங்கள் வசூலை குவித்து கொண்டிருப்பது மலையாள நடிகர்களை கலக்கத்துக்குள்ளாக்கி உள்ளது. ஆனால் படவினியோகஸ்தர்களை குஷிபடுத்தியுள்ளது.
No comments:
Post a Comment