கடந்த சில தேர்தல்களாக 2 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாங்கி வந்த பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் அதிலிருந்து சரிந்து விட்டது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்றிருந்தது. 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என அனைத்திலும் பாஜக சொல்லிக் கொள்ளும்படியாக பிரிநிதிகளைப் பெற்றிருந்தது.
அதிமுக, தி்முக என தலா ஒருமுறை கூட்டணி அமைத்து தமிழகத்திலும் பாஜக பிரபலமானது. ஆனால் அதன் பின்னர் இரு திராவிடக் கட்சிகளும் பாஜகவை தூரத்தில் வைத்து விட்டன. இதனால் தொடர்ந்து அது தனியாகவே போட்டியிட்டு வருகிறது.
தனியாக போட்டியிட்டாலும் தலா 2 சதவீத வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் அது பெறத் தவறியதில்லை. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் தனக்குள்ள செல்வாக்கை அது தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 2.02 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, 2009 லோக்பா தேர்தலில் 2.34 சதவீத வாக்குகளைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 1.35 சதவீத வாக்குகளையே அது பெற்றுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது பெற்ற வாக்குகளை இந்த முறையும் வாங்கியிருந்தால் இன்னும் கூடுதலான உள்ளாட்சிப் பதவியிடங்களைஅது கைப்பற்ற முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைப் பொறுத்தவரை எது வந்தாலும் அதற்கு லாபம்தான். காரணம், யாரும்தான் அவர்களை கூட்டணிக்குக் கூப்பிடப் போவதில்லையே...!
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete