சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரூ. 30 லட்சம் செலவானதாக பெங்களூர் நகர கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். கர்நாடக போலீசார் 1500 பேரும், சென்னையில் இருந்து சென்ற 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இரணடு நாட்களில் பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் ரூ. 30 லட்சம் செலவானதாக பெங்களூர் நகர கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கு விசாரணைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருக்கு கடந்த 20, 21 ஆகிய 2 நாட்கள் வந்தார்.
பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சென்றார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பெங்களூரு போலீசார் 1000 பேரும், தமிழகத்தில் இருந்து வந்த 400 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்காக வந்த போலீசாருக்கு சாப்பாடு, சிறப்பு சம்பளம், போக்குவரத்து என கர்நாடக போலீசாருக்கு மட்டும் ரூ. 30 லட்சம் செலவானது என்றார்.
இது கர்நாடக காவல்துறையின் கணக்கு. முதல்வர் ஜெயலலிதா வாடகைக்கு எடுத்த விமானத்துக்கான செல்வு என்ன என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment