சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 9 மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை மேயர் வேட்பாளர்கள்
மொத்தம் 32 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் சைதை துரைசாமி (அ.தி.மு.க.), மா.சுப்பிரமணியன் (தி.மு.க.), சைதை ரவி (காங்கிரஸ்), வேல்முருகன் (தே.மு.தி.க.), ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.), மனோகரன் (ம.தி.மு.க.), பரமேஸ்பாபு (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகியோரைத் தவிர மற்ற 25 பேரும் சுயேச்சைகள்.
மதுரை மேயர் வேட்பாளர்கள்
மதுரையில் மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ராஜன் செல்லப்பா (அதிமுக), பாக்கியநாதன் (திமுக), சிலுவை (காங்.), கவியரசு (தேமுதிக), டாக்டர் ராஜேந்திரன் (பாஜக), பாஸ்கர சேதுபதி (மதிமுக), அன்பரசன் (புதிய தமிழகம்), ஈஸ்வரி (இந்திய ஜனநாயகக் கட்சி), தவமணி (பகுஜன் சமாஜ்),
பா.தவமணி (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி), பசும்பொன் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோரைத் தவிர மற்ற 17 பேரும் சுயேச்சைகள்.
கோவை மேயர் வேட்பாளர்கள்
கோவையில் மொத்தம் 27 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் அதிமுகவின் செ.ம.வேலுசாமி, தி.மு.கவின் நா.கார்த்திக், காங்கிரஸின் ஏ.ஆர்.சின்னையன், சிபிஎம்மின் சிவபுண்ணியம், பாமகவின் ராஜேந்திரன், பாஜகவின் ஜி.கே.எஸ்.செல்வகுமார், மதிமுகவின் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், அனைத்து கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் மைக்கேல்ராஜ் ஆகியோரைத் தவிர மற்ற 19 பேரும் சுயேச்சைகள்.
திருப்பூர் மேயர் வேட்பாளர்கள்
திருப்பூரில் மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் விசாலாட்சி, திமுக சார்பில் செல்வராஜ், காங்கிரஸ் சார்பில் சித்திக், பாமக சார்பில் வடிவேல் கவுண்டர், தேமுதிக சார்பில் தினேஷ் குமார், பாஜக சார்பில் சின்னச்சாமி போட்டியிடுகின்றனர். 12 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
நெல்லை மேயர் வேட்பாளர்கள்
மொத்தம் 14 பேர் போட்டிக் களத்தில் உள்ளனர். இதில் அதிமுக சார்பில் விஜிலா சத்யானந்த், திமுக சார்பில் அமுதா, தேமுதிக சார்பில் கண்ணம்மாள், காங்கிரஸ் சார்பில் ஜூலியட் பிரேமலதா, பாமக சார்பில் எஸ்தர் என்கிற சண்முகப் பிரியா, பாஜக சார்பி்ல கிருஷ்ணமணி, மதிமுக சார்பில் மகேஸ்வரி, பகுஜன் சமாஜ் சார்பில் பாலசுந்தரி, புதிய தமிழகம் சார்பில் தனலட்சுமி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அமுதா மதியழகன் போட்டியிடுகின்றனர். 2 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
சேலம் மேயர் வேட்பாளர்கள்
சேலம் மேயர் வேட்பாளர்களாக அதிமுக சார்பில் சவுண்டப்பன், திமுக சார்பில் கலையமுதன், தேமுதிக சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் விஜயவர்மன், பாமக சார்பில் இரா. அருள், மதிமுக சார்பில் ராமச்சந்திரன், பாஜக சார்பில் ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஜெயசீலன் உள்பட 24 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 13 பேர் சுயேச்சைகள்.
தூத்துக்குடி மேயர் வேட்பாளர்கள்
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா, திமுக சார்பில் இனிதா, காங்கிரஸ் சிந்தியா வயலட் லில்லி, தேமுதிக ராஜேஸ்வரி, பாமக குரு ஷோபனா, மதிமுக பாத்திமா, பகுஜன் சமாஜ் தங்கம், விடுதலைச் சிறுத்தைகள் சித்ரா, புதிய தமிழகம் ராஜலட்சுமி உள்பட 12 பேர் களம் கண்டுள்ளனர்.
வேலூர் மேயர் வேட்பாளர்கள்
வேலூரில் மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் - அதிமுக கார்த்தியாயினி, திமுக ராஜேஸ்வரி, பாமக வெண்ணிலா, மதிமுக ஈஸ்வரி, சிபிஎம் லதா, காங்கிரஸ் தேவி, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி பூங்காவனம், விடுதலைச் சிறுத்தைகள் பூவழகி, இந்தியக் குடியரசுக் கட்சியின் சுகந்தி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சுசிலா.
No comments:
Post a Comment