மகள் கனிமொழி நாளை ஜாமீன் மனு தாக்கல் செய்யவுள்ளதால், எப்படியும் இந்த முறை ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி, தனது துணைவியார் ராஜாத்தியம்மாளுடன் டெல்லியிலேயே தொடர்ந்து முகாமிட்டுள்ளார்.
டெல்லி சென்ற கருணாநிதி திகார் சிறையில் அடைபட்டுள்ள தனது மகள் கனிமொழியை மூன்றாவது முறையாக சந்தித்துப் பேசினார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார். சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் தற்போது கருணாநிதி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளனர். நாளை கனிமொழி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்தமுறை எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளனர்.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவரையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்ப கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
வெள்ளிக்கிழமையன்று கருணாநிதியும், ராஜாத்தி அம்மாளும் டெல்லி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment