திருச்சி மேற்குத் தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்றதை விட இந்த முறை அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுகவும் சரி, திமுகவும் சரி கடந்த தேர்தலை விட இந்த முறை குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளன.
இதில் அதிமுகவை விட திமுகவுக்குத்தான் அதிகஅளவிலான வாக்குகள் குறைந்துள்ளன.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரியம் பிச்சை 77,890 வாக்குகள் பெற்றார். திமுகவின் கே.என்.நேரு 70,711 வாக்குகள் பெற்றார். வெற்றி வித்தியாசம் 7179 ஆகும்.
இந்த முறை அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 69,029 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து வந்த கே.என்.நேரு 54,345 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் இரு கட்சிகளுமே கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிமுகவின் வெற்றி வித்தியாசம் அதிகரித்துள்ளது. அதாவது இரட்டிப்பாகியுள்ளது.
கடந்த தேர்தலை விட இந்தத்தேர்தலில் அதிமுகவுக்கு 8961 வாக்குகளும், திமுகவுக்கு 16,366 வாக்குகளும் குறைவாக கிடைத்துள்ளன.
வெற்றி வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் கூட வாங்கிய ஓட்டுக்கள் குறைந்திருப்பது அதிமுகவை கவலையுறச் செய்துள்ளது.
No comments:
Post a Comment