சர்வதேச தாதாவும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படுபவருமான தாபூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும் என மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஹக்கானி இயக்கம் உள்பட பல தீவிரவாத இயக்கங்களுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக இந்தியா தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறது. இதை தாமதமாக அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக நாம் திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம். ஆனால் இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும்.
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானிடம் இதைக் கூறும்போதெல்லாம் அந்நாடு மறுத்து வருகிறது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் பாகிஸ்தானின் பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்டுவோம்," என்றார்.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத்தை, 2003-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
ஏம்ப்பா அவன் இந்த மாசம் உனக்கு மாமூல் கொடுக்கலியா.....புண்ணாக்கு....மிகப்பெரிய ஒரு நாட்டோட உள்துறை அமைச்சரா இருந்துகிட்டு இத சொல்லுறத்துக்கு உனக்கு வெக்கமா இல்ல....????
ReplyDelete