ஓட்டுப் போட்டு விட்டு வாக்குச் சாவடிக்கு வெளியே கும்பலாக நின்ற பொதுமக்களை, அதிரடிப் படை போலீஸார் சரமாரியாக தடியடி நடத்திக் கலைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், ஒரு வாக்கு் சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு வந்த அதிரடிப் படை போலீஸார், அந்த வாக்காளர்களை சரமாரியாக தடியடி நடத்திக்கலைத்து விரட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் தடியடியால் நிலை குலைந்த வாக்காளர்கள் சிதறி ஓடினர். தடியடியில் 6 பேர் படுகாயமடைந்ததால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது. வாக்குச்சாவடிக்குள் யாரும் கூட்டமாக நிற்கக் கூடாது, 200 மீட்டர் தள்ளிப் போய்த்தான் நிற்க வேண்டும் என்பது விதியாகும்.இதனால்தான் தடியடி நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதுக்காக இப்படியா...?
No comments:
Post a Comment