தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கு துவங்கும் ஓட்டு பதிவு மாலை 5 வரை நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள 200 வார்டுகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை வீடியோ எடுக்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 பேர் வாக்களிக்க உள்ளனர்.
சென்னை: சென்னையில் சில இடங்களில் ஓட்டுச் சாவடிகளில் வெப் காமரா பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஓட்டுப்திவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
விருதுநகர்: விருதுநகர்மாவட்டம் ஆமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 3,4-வது வார்டுக்கு உட்பட் 75-வது வாக்குச்சாவடியில் இன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சீட்டுகள் வராததால் வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த படப்பகுறிச்சி, திருவெண்ணநாதபுரம் ஆகியபகுதிகளில் மின்னனு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வாக்குபதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம்: திருப்புல்லாணி, கீழக்கரை ராமேஸ்வரம், உச்சிப்புளி சேதுபதிதொடக்கப்பள்ளி உட்பட ஏழு இடங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் வாக்குபதிவில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப் பதிவு செய்து வருகின்றனர்.
நீலகிரியில் அமைதியான ஓட்டுப்பதிவு எவ்வித பிரச்னையும் இல்லாமல் துவங்கியது.
No comments:
Post a Comment