பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் தொழிலதிபராக உள்ளார். இவருக்கு டிசம்பர் 22-ந்தேதி திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துல்கர் சல்மானை மலையாள படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால் அதற்கு மம்முட்டி சம்மதிக்கவில்லை. இதனால் துல்கர்சல்மான் தொடர்ந்து தனது தொழிலில் கவனம் செலுத்தினார்.
இதற்கிடையே மலையாள பட இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கும் “செக்கன்ஷோ” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானை நடிக்க வைக்க நினைத்தார். இதற்காக நடிகர் மம்முட்டியை அணுகினார். அவரிடம் கதை யையும் கூறினார். ஆனால் மம்முட்டி முழு கவனத்துடன் கதை கேட்கவில்லை. தனது மகனிடமே நேரில் கூறி சம்மதம் வாங்கி கொள்ளவும் என்று கூறி விட்டார்.
இதையடுத்து ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறிய கதை பிடித்து போக துல்கர் சல்மான் தற்போது செக்கன்ஷோ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோழிக்கோடு திருவனந்தபுரம் பகுதியை சுற்றி நடக்கிறது. குறுகிய காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
தனது மகன் துல்கர் சல்மானை முதலில் தமிழ் படம் ஒன்றில் தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று மம்முட்டி விரும்பினார். ஆனால் அதற்கு மாறாக மலையாள படத்தில் அவர் நடிக்க தொடங்கி விட்டார்.
No comments:
Post a Comment