வாக்களிக்க விரும்பாவிட்டால், வாக்குச்சீட்டினை திரும்ப அளிக்கலாம். அந்த வாக்குச்சீட்டை திரும்ப பெறப்பட்டது என எழுதி ரத்து செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கான விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்களிக்க விரும்பாத ஒருவர், அதற்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள 49ஓ பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும் ஊரக உள்ளாட்சிகளில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு தனி பதிவேடு இருக்காது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
’’வாக்காளர் ஒருவர் வாக்குசீட்டை பெற்றுவிட்டு, வாக்களிக்க விரும்பவில்லை என்றால், அந்த வாக்குச்சீட்டை வாக்குச்சாவடி தலைமை அதிகாரியிடம் திரும்ப வழங்கலாம்.
இந்த வாக்குச்சீட்டை திரும்ப பெறப்பட்டது; ரத்து செய்யப்பட்டது என எழுத வேண்டும்.
தகுதியுடைய வாக்காளர்களை எந்த நிலையிலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
ஒரு வாக்காளர், அவருக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டை பயன்படுத்த முடியாத அளவுக்கு கவனக்குறைவாக கையாண்டு, பாழ்படுத்திவிட்டால் அதை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் திருப்பிக்கொடுக்கவேண்டும்.
வேண்டுமென்றே சேதப்படுத்தப்படவில்லை என அலுவலர் திருப்தி அடைந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு வேறொரு வாக்குச்சீட்டை அளிக்க வேண்டும். திரும்பப்பெற்ற வாக்குச்சீட்டின் பின்புறம் ‘சேதமடைந்தது, ரத்து செய்யப்பட்டது‘ என எழுதி அதற்கான தனி உறையில் வைக்கவேண்டும்.
'
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிப் பின் ரகசியத்தை முழுமை யாக கடைப்பிடிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வாக்குப்பதிவு நடை முறையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் எச்சரித்த பிறகும், வாக்குப்பதிவு நடை முறையை வாக்காளர் கடைபிடிக்கவில்லை என் றால், அவரை வாக்காளிப்பதற்கு அனுமதிக்க தேவையில்லை.
மேலும் அந்த வாக்காளருக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டை திரும்ப பெற்று, அதன் மீது விதிமுறை மீறல்&ரத்து செய்யப்பட்டது என வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் பதிவு செய்யப்பட வேண்டும்.
ரத்து செய்யப்பட்ட இத்தகைய வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் வாக்குப்பெட்டியினுள் போடாமல், அதற்காக கொடுக்கப்பட்டுள்ள உறையில் வைக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட வாக்குச்சீட்டு குறித்து படிவம் 20 பகுதி 1ல் தவறா மல் குறிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment