உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்தது.
இந்நிலையில் இன்று அதிமுகவினர் கும்பகோணம் நகராட்சியில் வீடு வீடாக நூதன முறையில் பண பட்டுவாடா செய்தனர்.
பரஸ்பர சகாய நிதி லிமிடெட்( கேஎம்சிஎப் ) வங்கி மூலம் அதிமுகவினர் பண பட்டுவாடா செய்தனர். இந்த வங்கியின் 10 பேர் கொண்ட குழு ஒவ்வொரு வார்டாக சென்று பண பட்டுவாடா செய்தனர்.
எதிர்கட்சியினர் கேட்டதற்கு, வங்கியின் கடன் வசூலிக்கிறோம் என்று கூறினர். சந்தேகம் அடைந்த எதிர்க்கட்சியினர் பின் தொடர்ந்தனர்.
7வது வார்டில் பாஸ்கர் என்ற கேஎம்சிஎப் அதிகாரி பணம் கொடுத்துக்கொண்டிருந்த போது பிடித்துவிட்டனர். அவரது சூட்கேஷில் 500 ரூபாய் கட்டுகளாக இருந்தன.
பாஸ்கர் பிடிபட்டதை கேள்விப்பட்டதும், வங்கியின் மீதம் 9 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் பாஸ்கர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment