திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இதுவரை திருச்சி மேற்கு தொகுயில் வென்றவர்கள் குறித்த ஒரு பார்வை...
திருச்சி மேற்கு தொகுதியில் 98,233 ஆண்கள், 1,0,713 பெண்கள் என மொத்தம் 1,98,950 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதற்கு முன்பு இங்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்:
1. எம். கல்யாணசுந்தரம் - 1952- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2. எம். கல்யாணசுந்தரம் - 1957- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3. எம். கல்யாணசுந்தரம் - 1962- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4. நாகசுந்தரம் - 1967- திமுக
5. அன்பில் தர்மலிங்கம் - 1971 - அதிமுக
6. சௌந்தராஜன் - 1977 - அதிமுக
7. சௌந்தராஜன் - 1980 - அதிமுக
8. நல்லுசாமி - 1984 - அதிமுக
9. அன்பில் பொய்யாமொழி - 1989 - திமுக
10. அன்பில் பொய்யாமொழி - 1996 - திமுக
11. அன்பில் பெரியசாமி - 2001 - திமுக
12. கே. என். நேரு - 2006 - திமுக
13. மு.பரஞ்சோதி – 2011 - அதிமுக
1952ம் ஆண்டில் இருந்து கடந்த 2006ம் ஆண்டு வரை நடந்த 12 தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும் வென்றுள்ளது.
தற்போது அதிமுக வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், திமுகவும், அதிமுகவும் சம நிலையை அடையும் சூழல் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment