'கஜினி' படத்தினை தொடர்ந்து சூர்யா - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து இருக்கும் படம் 'ஏழாம் அறிவு'. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மன் என்ற துறவிக்கு சீனாவில் கோவில் கட்டி சாமியாக வணங்கி வருகிறார்கள். அவரது வாழ்க்கையை தற்காலத்தில் நடக்கும் ஒரு கதையுடன் இணைந்து கூறி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
சூர்யா போதிதர்மன் என்ற துறவி, சர்க்கஸ் கலைஞர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து இருந்தாலும் தமிழில் நாயகியாக கமல் மகள் ஸ்ருதிஹாசன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
படத்தில் வில்லனாக Johnny Tri Nguyen என்பவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இவர் SPIDER MAN படத்தில் நாயகனுக்கு டூப் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி.கே.சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரையுலகின் பல்வேறு பிரமுகர்கள் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் " படத்தின் முதல் 15 நிமிடங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒவ்வொரு கோடி செலவழித்து இருக்கிறோம். உதயநிதி ஸ்டாலினின் RED GIANT நிறுவனத்திற்கு முதல் மெகா ஹிட்டாக அமைய இருக்கிறது. இது மாதிரி ஒரு படத்தை இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு சூர்யாவும் செய்ய முடியாது. என்னாலும் செய்ய முடியாது. " என்று கூறினார்.
'WHO IS BODHIDHARMAN?' என்று ஆரம்பிக்கும் இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியான போது சூர்யாவின் நடிப்பும், JOHNNY TRI NGUYENவின் வில்லத்தனமான பார்வையும் பலரைக் கவர்ந்தது. படத்தின் டிரெய்லர் வெளியான உடன் WIKIPEDIA இணையத்தில் இருக்கும் போதிதர்மன் தகவல்கள் அடங்கிய பக்கத்தை பலர் பார்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7ம் அறிவு பட டிரெய்லர்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "ஒ.. ரிங்கா","யம்மா யம்மா","எலேலேயம்மா" போன்ற பாடல்கள் வரவேற்பை பெற்று இருக்கிறது. தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்த முதல் படம் என்பதால் தற்போது அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் இது. 1100 திரையரங்களுக்கு மேல் இப்படம் வெளியாக இருக்கிறது.
தீபாவளி வெளியீடுகளில் டிக்கெட் புக்கிங் முதலில் ஆரம்பிக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு தான். டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சுமார் ஒரு மணி நேரத்தில் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. இதனால் தீபாவளிக்கு முந்தின நாள் மாலையே சென்னையில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
அந்த ப்ரீமியர் ஷோவுக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ருதிஹாசன், ஹாரிஸ் ஜெயராஜ், ரவி.கே.சந்திரன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பலமான கூட்டணியில் இப்படம் வெளிவர இருப்பது இப்படத்திற்கு மிகப் பெரிய பலம்.
உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் படத்தினை முழுநேரமும் விளம்பரப்படுத்தி வருகிறார்.
தீபாவளி தினமான அக்டோபர் 26ம் தேதி தமிழ் திரையுலகம் போதிதர்மன் யார் என்று தெரிந்து கொள்வதில் பெரும் ஆர்வமாக இருக்கிறது
நன்றி -விகடன்
No comments:
Post a Comment