தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய கவுன்சிலருக்கான 13வது வார்டில் திமுக, அதிமுக மற்றும் சிபிஐ’ சேர்ந்த பெண் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் அதிமுக வேட்பாளர் அமுதா செந்தில்(செந்தில் - அதிமுக ஒன்றிய செயலாளர்) வேட்புமனுவைத்தவிர திமுக உமா, அவரது மாற்று வேட்பாளர் கவிதா, சிபிஐ வேட்பாளர் குஞ்சம்மாள் , ஆகிய மூவரும் வேட்புமனுக்களும் பரிசீலனையின்போது, கிழிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் திருத்தப்பட்டும் தேவையற்ற பேப்பர்கள் இணைக்கப்பட்டும் இருந்ததாக கூறி பிடிஓ மாதவன் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.
ஆனால் இவர்கள் வேட்புமனு செய்தபோது கூடுதல் பக்கங்களோ, அடித்தல் திருத்தல்களோ, வேட்புமனு கிழிக்கப்பட்டோ தாக்கல் செய்யவில்லை என்றும்,
இதில் அதிமுகவினர் சதி செய்து இந்த மனுக்களை அதிகாரிகள் உதவியுடன் தள்ளுபடி செய்துவிட்டனர் என்று குற்றம் சாட்டி, திமுக, தேமுதிக, கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து நாளை காலை 8 மணி முதல் மதுக்கூர் கடைவீதியில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment