வேலாயுதம் பட அனுபவம் குறித்து நேற்று நிருபர்களிடம் ராஜா கூறுகையில், "வேலாயுதம் எனக்கு 7வது படம். ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக அமைஞ்சிருக்கு. 6 படங்களை ரீமேக் செய்தேன். ஆனால் வேலாயுதம் படத்தை ஆசாத் என்ற படத்தின் மூலக்கதையை வச்சி என் சொந்த திரைக்கதையில் படமாக்கி இருக்கேன்.
என் தம்பி ஜெயம் ரவியை வைத்து மட்டும் 5 படங்களை எடுத்தேன். இப்போது பெரிய ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து பண்ணி இருக்கேன். வேலாயுதம் என் திரையுலக வாழ்வில் முக்கிய படமா இருக்கும். இது எனது ஒன்றரை வருட கனவு படம் என்றாலும் மிகையல்ல.
ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கப் போனா அங்க கேட்கிறான், சார் இந்த வருஷம் எந்த படத்தை டப்பிங் பண்ண போறீங்கன்னு. டப்பிங்குக்கும் ரீமேக்குக்கும் வித்தியாசம் தெரியாதவங்க கூட லேசா கிண்டல் பண்ணுற அளவுக்கு நான் பண்ணிய எல்லா படங்களும் ரீமேக்தான். ஆனால் வேலாயுதம் என்னோட கற்பனையில் உருவான படம். ஆசாத் என்ற தெலுங்கு படத்திலிருந்து ஒரு சின்ன லைன் மட்டும் எடுத்திருக்கேன். அதுக்கு எனக்கு உரிமை உண்டு. ஏன்னா இந்த படத்தை இயக்கிய திருப்பதிசாமியும் நானும் திக் பிரண்ட்ஸ். இந்த கதையை உருவாக்கும்போதே நான் அவரோட பல நாள் டிஸ்கஷன்ல இருந்திருக்கேன் என்றார்.
விஜய் என்னை அழைத்து படம் பண்ணலாம் என்றதும் இந்த கதையை உருவாக்கினேன். கமர்சியல் படங்களுக்கான வீரியத்தோடு புது பரிமாணத்தில் இப்படம் இருக்கும்.
இதுவரை நான் எடுத்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து இருக்கின்றன. அதில் எனக்கு சந்தோஷம். எங்க வீட்டு பிள்ளை, பாட்ஷா, அந்நியன் போன்றவை நான் ரசித்த படங்கள். தனித்தனி பார்முலாக்களை அதில் பார்க்கலாம்.
விஜய் படங்கள் வரிசையாக பிளாப் ஆகிட்டு இருக்கு. இந்த படமாவது அவருக்கு ஹிட் கொடுக்குமா என்றொரு கேள்வி நிருபர்களிடமிருந்து. அதற்கு ராஜா சொன்ன பதில் அப்சலூட்லி கரெக்ட்! அது என்ன?
விஜய் மார்க் போடுகிற ஸ்டேஜையெல்லாம் கடந்துவிட்டார். இன்றைக்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ. படம் வெளியாகிற நாளில் தியேட்டருக்கு திரண்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். நீங்கள் சொல்வது போல தோல்வி என்பதையெல்லாம் தாண்டிய மாஸ் ஹீரோ அவர். வேலாயுதம் விஜய் படங்களிலேயே தி பெஸ்ட் படமாக இருக்கும். ரா ஒன் என்ன, ரா நூறு கூட வரட்டுமே, ஆயிரம் அறிவு கூட வந்து மோதட்டுமே? வேலாயுதம் பெரிய வெற்றியடையும். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
இப்போது வேலாயுதம் படத்தில் வேறொரு பார்முலாவைப் பார்க்கலாம். விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். டான்ஸ், வசனம் எல்லாவற்றிலும் அசத்தி உள்ளார். நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும். அந்த கதைக்காகத்தான் மெனக்கெடுகிறேன். வேலாயுதம், நல்ல கதை, அருமையான பொழுதுபோக்கு நிறைந்த படம்.
தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் கனவு. அதற்காக இன்னும் உழைப்பேன். விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாக வேலாயுதம் இருக்கும். அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை. வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்," என்றார்.
No comments:
Post a Comment