பாடலாசிரியர் வைரமுத்துவின் மகனான கார்க்கி, 'எந்திரன்' படத்தில் 'இரும்பிலே ஓர் இருதயம்' என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். தற்போது ஐம்பது பாடல்களை எழுதி தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.
எந்திரன் படத்தைத் தொடர்ந்து, கோ, எங்கேயும் காதல், நூற்றெண்பது உள்ளிட்ட படங்களில் பல பிரலபலமான பாடல்களை எழுதியிருக்கும் கார்க்கி, சமீபத்தில் தன் ட்விட்டர் தளத்தில் தன் 50வது பாடலை இயற்றிய செய்தியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
சித்தார்த், அமலா பால் நடிப்பில், தமன் இசையில் இயக்குநர் பாலாஜி இயக்கி ஒய் நாட் நிறுவனம் தயாரிக்கும் 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தில் தனது 50வது பாடலை கார்க்கி எழுதியிருக்கிறார்.
ஏழாம் அறிவு படத்திற்காக சீன மொழி பாடல் ஒன்றையும், நூற்றெண்பது படத்திற்காக போர்த்துகீஸிய மொழிப் பாடல் ஒன்றையும் கார்க்கி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நண்பன், மாற்றான், முகமூடி, வல்லினம், நான் ஈ, தடையற தாக்க, பொன்மாலைப் பொழுது, மெளன குரு, ரெட்டைச் சூரியன் ஒற்றைத் தாமரை போன்ற பல படங்களில் கார்க்கி தற்போது பாடல் எழுதிகொண்டிருக்கிறார்.
தன் முயற்சிகளுக்கு சுதந்திரம் கொடுத்த அனைத்து இயக்குநர்களுக்கும் கார்க்கி தன் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment