தமிழ்ப் படங்களின் வசூலையே மிஞ்சும் அளவுக்கு ஆங்கிலப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்துகொண்டு வருகிறது. அதன் விளைவாக ஜுராஸிக் பார் என தொடங்கி அவதார் என்று அத்தனை ஆங்கிலப்படங்களும் தமிழ்ப் பேசுகின்றன. இந்த நிலையை மாற்றி ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை நாம் அவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜேஷ் கண்ணா.
டீலா நோ டீலா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா, இயக்கும் முதல் படம் 'பெருமான்'. இந்த படத்தின் துணை தலைப்பாக தி ரஜினிகாந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்திற்கும் ரஜினிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம். சொல்லப்போனால் ரஜினிதான் இந்த படத்தின் ஹீரோவாம். இதை ரஜினியிடம் கூறி அவருடைய பெயரை பயன்படுத்த அவரிடம் அனுமதியிம் பெற்ற பின்புதான் இந்த வார்த்தையை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். அது சரி, ரஜினிக்கும் இந்த படத்திற்கும் என்ன தொடர்பு என்றால், அதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். என்று மற்ற இயக்குநர்களைப் போலவே பதிலளித்தார் ராஜேஷ்.
தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இப்படத்தை வெளியிடப்போகிறார்கள். ஆங்கிலத்தில் 'சிக்ஸ் மில்லியன் டாலர்' என்ற தலைப்பில் பல நாடுகளில் இப்படம் வெளியாகப்போகிறது. எதற்கு இந்த முயற்சி என்று இயக்குநரிடம் கேட்டால், "எத்தனை நாள் தான் தமிழ்ப் பேசும் ஆங்கிலப் படங்களை நாம் பார்த்துகொண்டிருப்பது. ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை அவர்களுக்கு காட்டுவோம் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சி. இது ஆங்கிலப் படம் என்பதற்காக, கிராமருடன் கூடிய ஆங்கிலத்தில் யாரும் பேச மாட்டார்கள். தமிழ்நாட்டில் இளைஞர்கள் எப்படி ஆங்கிலம் பேசுவார்களோ அதே முறையில் தான் இருக்கும். மேலும் இதில் ஐந்து ஆறு காட்சிகளில் தமிழிலும் பேசுவார்கள். பொதுவாக ஆட்டோ டிரைவர், தெருவில் இட்லி விற்கும் பாட்டி போன்றோர்கள் தமிழில்தான் பேசுவார்கள் அதை அப்படியே ஆங்கிலப் படத்திலும் இணைத்திருக்கிறோம். அவர்களுக்கும், நமக்கும் இடையே கம்யூனிகேசனை வலுப்படுத்த இது உதவும்.
தமிழகத்தில் உருவான ஆங்கிலப் படமாக இருந்தாலும், ஆங்கிலப் படங்களில் உள்ள விறுவிறுப்பு இப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இருக்கும். அதே சமயம் கமர்ஷியல் ஃபார்மூலாவில் ஒரு தரமான படமாகவும் ரசிகர்களை திருப்தி படுத்தும்." என்று கூறுகிறார்.
இப்படத்திற்காக 'பிம்பிளிக்கா பிளாப்பி' என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு புரோமோசன் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் அந்த பாடலை படமாக்கியிருக்கும் இயக்குநர் படத்தையும் அப்படித்தான் இயக்கியிருப்பார் என்று நம்பலாம்.
No comments:
Post a Comment