கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் கடந்த 9-ந்தேதி முதல் 2-வது கட்டமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மீனவர்கள் பங்கேற்றுள்ள இந்த போராட்டத்தில் 106 பேர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு கூட்டம் இன்று மதியம் நடந்தது. அதில் உள்ளாட்சி தேர்தலையொட்டி இடிந்தகரையில் நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் 18-ம் தேதி போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment