மைனா படத்தை அடுத்து பிரபு சாலமன் டைரக்ட் செய்யும் படம் கும்கி. இந்த படத்தில், நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.யுடிவி திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ரோணிஸ்குருவாலா என்.சுபாஷ்சந்திரபோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். கும்கி படத்தை பற்றி டைரக்டர் பிரபு சாலமன் கூறும் போது, காட்டுக்குள் இருந்து ஊர் பக்கம் வருகிற யானைகளை விரட்டி அடிக்க, மனிதனால் பழக்கபட்ட யானைக்கு கும்கி என்று பெயர். அந்த யானைகளின் வாழ்வியல் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறேன். இது ஒரு பிரமாண்டமான காதல் படமாக இருக்கும்.வனத்தையும், மனதையும் ஒரு சேர தூண்டில் போட்டு தூக்கும். யானைகள் பொதுவாக 11 அடி உயரம் இருக்கும். தந்தம் ஐந்தரை அடி இருக்கும். அதற்கு பக்கத்தில் நின்றால், ஒருவர் கம்பீரமாக தெரியவேண்டும்.அப்படி தெரிகிறார் விக்ரம். அவர்தான் யானையை குளிப்பாட்டுகிறார்.அது தின்பதற்கு மட்டை போடுகிறார். செல்லம் கொஞ்சுகிறார்.அவரை, யானை தும்பிக்கையில் தூக்கிக்கொண்டு போகிறது.படப்பிடிப்பு முடிந்தால், அந்த யானையை அன்பாக அதட்டி லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கிற வரை எல்லாமே விக்ரம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றார்.

No comments:
Post a Comment