என் பெயர் குமாரசாமி என்ற படத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு பாடலை பாடி அசத்தியிருக்கிறார். திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் என் பெயர் குமாரசாமி. இந்த படத்தில் புதுமுகம் ராம் கதாநாயகனாக நடிக்க, பிரபல மும்பை நடிகை அந்த்ரா பிஸ்வாஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவா, பப்லு, ரிஷா, யோகி தேவராஜ், பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பைஜு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரதன் சந்திரசேகர். இப்படத்தில் இடம் பெறும் ஏழு பாடல்களுக்கு வீ.தஷி இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி, நெல்லை பாரதி, தாணு கார்த்திக், தொல்காப்பியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
படத்தில் இயக்குனர் ரதன் சந்திரசேகர் எழுதிய "வனப்புடை மகளிர் சொல்லும்ஞ்...." எனத் தொடங்கி தொடரும் பாடலை நடிகர் பார்த்திபன் பாடியிருக்கிறார். இதுபற்றி டைரக்டர் ரதன் சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், "காதலில் ஏமாற்றமடையும் நாயகன் மனம் குமுறி, தெருப் பாடகர்களுடன் இணைந்து பாடுவதாக அமையும் இந்தப் பாடல் முற்றிலும் வழக்கமான பாடலாக அல்லாமல் அமைந்தது. இப்பாடலை நடிகர் பார்த்திபன் பாடினால் மிகச் சிறப்பாக அமையும் என்று மனதில் பட்டதும், உடனே நேரடியாக சென்று அவரைச் சந்தித்தேன். பாடல் வரிகளைக் கேட்ட மாத்திரத்தில் பாடுவதற்கு ஒப்புக் கொண்டார். மிகவும் ஒத்துழைப்பு தந்து, சிறப்பாக பாடலை பாடிக் கொடுத்துள்ளார், என்று கூறியிருக்கிறார். இப்பாடலை ஜீவ சாண்டில்யன் ஒளிப்பதிவில் கொடைக்கானலில் படமாக்க உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

No comments:
Post a Comment