அங்காடித் தெரு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு டைரக்டர் வசந்தபாலன் இயக்கும் படம் அரவான். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாதரண மக்களுடைய வாழ்க்கையை படமாக இயக்கியிருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு வரை வந்திருக்கும் இப்படத்திற்கு தற்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்ததும் படத்தை டிசம்பர் மாதம் ரீலிஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பார் டி.சிவா.
அரவான் படம் குறித்து தயாரிப்பாளர் சிவா அளித்துள்ள பேட்டியில், "நான் இதுவரை பதினெட்டு படங்கள் தயாரித்திருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இன்றுதான் பெருமையாக இறுக்கிறது. அரவான் போன்ற படத்தை எடுத்ததால்தான் இந்த பெருமை. இது ஒரு படம் அல்ல. மறைந்த ஒரு சமூகத்தைப் பற்றிய, தமிழகத்தின் வரலாற்றை சொல்லும் படம். இப்படிப்பட்ட படத்தை தயாரித்திருப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது." என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment