கணித மேதை ராமானுஜமின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க இருக்கிறார் பிரபல ஹாலிவுட் டைரக்டர் ரோஜர் ஸ்பாட்டிஸ்வுட். இதில் ராமானுஜமாக "பாய்ஸ்" சி்த்தார்த் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன. இதில் "டுமாரோ நெவர் டைஸ்" என்ற படத்தை இயக்கிய டைரக்டர் ரோஜர் ஸ்பாட்டிஸ்வுட் இப்போது இந்தியா வந்துள்ளார். இவர் தற்போது மும்பையில் நடந்து வரும் உலக பட விழாவில் நடுவராக இருக்கிறார்.
அப்போது பேசிய ஸ்பாட்டிஸ்வுட், அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் ராமானுஜம் பற்றிய நாடகத்தை 10 ஆண்டுகளாக எழுதி வந்தார். அவர், அதன் பிரதியை என்னிடம் காட்டினார். அப்போது முதல் ராமானுஜமின் வாழ்க்கையை படமாக்குவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ராமானுஜமின் வாழ்க்கை முழுவதையும் படமாக இயக்கப்போவதில்லை. அவரது வாழ்க்கையில் அவருக்கும், கேம்பிரிட்ஜில் அவரது திறமையை முதன்முதலில் கண்டறிந்த ஜி.எச்.ஹார்டிக்கும் இடையே இருந்த நட்பை தான் கதையாக இயக்குகிறேன்.
இதில் ராமானுஜமாக "பாய்ஸ்" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த சி்த்தார்த் நடிக்கிறார். சித்தார்த்தை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. எனது நண்பர் ஒருவர் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார். படத்தின் கதை பற்றி சித்தார்த்திடம் சொன்னவுடன் உடன் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்திற்கு "தி பர்ஸ்ட் கிளாஸ் மேன்" என்று பெயரிட்டுள்ளேன். படத்திற்கான தயாரிப்பாளரை தேடி வருகிறேன். இந்தியாவில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளேன். விரைவில் படத்தை பற்றி முழு அறிவிப்பை வெளியிடுவேன் என்றார்.
No comments:
Post a Comment