தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மதிய சத்துணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
தற்போது நாடெங்கும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை சுடச்சுட உணவு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உணவு அமைச்சகம் இதற்கான பரிந்துரையை செய்துள்ளது.
எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக, இந்த திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்கவும், கல்வி கற்றலில் இடைநிற்றல் குறையை நிவர்த்தி செய்யவும் கலை உணவுத் திட்டம் உதவும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
பாராளுமன்றத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் காலை உணவு திட்டத்தை சேர்க்க திட்டமிட்டிருந்தனர். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியதிருப்பதால், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இந்த திட்டத்தை அமல்படுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 6.5 கோடி டன் உணவு தானியங்கள் காலை உணவுத் தயாரிப்புக்கு தேவைப்படும். இந்த தேவையை சமாளித்து விடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு சுடச்சுட காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment