அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை சிவாஜியின் நவராத்திரி திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நாயகன் ஒரு படத்தில் எக்கசக்க வேடத்தில் நடித்தால் அது எதி்ர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் போய்விடுகிறது. கமலின் தசாவதாரம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆனால் வரவேற்பு அவ்வளவாக இல்லை. கந்தசாமி கதையும் அப்படி தான். அதே போல் தான் சீயான் விக்ரம் நடித்த ராஜபாட்டை படமும். அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்தப்படம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நிலைமை என்னவோ இப்படியாக இருக்க ராஜபாட்டை பிரஸ் மீட்டில் பேசிய சீயான் நடிகரோ : ராஜபாட்டை படம் மிகப் பெரிய சக்சஸ் என்று சொன்னதோடு நிறுத்தாமல், இதே மாதிரி திரைப்படங்களில் நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என என் மனைவி எனக்கு அட்வைஸ் செய்துள்ளார் என்றார்.
அவ்வளவு தான் அங்கிருந்த நிருபர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் "சீயான் வீட்டில் என்ன பிரச்னையோ, அவர் மனைவிக்கு இவர் மீது என்ன கோபமோ தெரியவில்லையே... "தொடர்ந்து பிளாப் படங்களில் நடிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் என பேசிக்கொள்ள.. சிரிப்பு அலைகள் எழும்பியது! வீட்டுக்கு வீடு வாசப்படி...!
No comments:
Post a Comment