தானே புயல், கனமழைக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு.
கடலூரில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மோசமடைந்ததால் நிவாரணப் பணிகள் தாமதம்.
கடலூரில் 5 ஆயிரத்துக்கும் மேலான மீனவர் வீடுகள் சேதம் என கலெக்டர் அமுதவள்ளி தகவல்.
கடலூர் - சிதம்பரம் சாலையில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.
*
வானிலை ஆய்வு மையத் தகவல்:
கடலூருக்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலை கொண்ட 'தானே' புயல், பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலைக்குள் தாழ்வுப் பகுதியாக மாறி வலுவிழந்துவிடும்.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்.
*
தானே புயலால் கடலூரைப் போலவே புதுச்சேரியில் மிகுந்த பாதிப்பும் சேதமும் ஏற்பட்டது. கனமழையால் புதுச்சேரியே தண்ணீரில் மிதக்கிறது.
*
புதுச்சேரியில் மழைக்கு இருவர் பலியாகினர். சூறைக் காற்று மிகப் பலமாக இருந்ததால், ராஜ உடையார் தோட்டம் என்ற இடத்தில் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து, அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில், ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.
*
புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் வெகுவாக பாதித்தன. கடல் அலைகள் மிகக் கடுமையாக உள்ளன. புமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
*
புதுச்சேரியில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியது. புயலைத் தொடர்ந்து அங்கு இதுவரை 15 செமீ மழை பெய்துள்ளது.
*
கன மழை மற்றும் சூறைக் காற்று காரணமாக சென்னை புதுவை - கடலூர் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து கிடக்கின்றன. நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
**
புயல், கனமழை நிவாரண நடவடிக்கைகள்: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை*
*
நிவாரண பணிகளுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு: முதல்வர்
*
அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
*
தமிழகம் மற்றும் புதுவையில் தானே புயலுக்கு 9 பேர் பலி
*
கடலூரில் மூன்று பேர் பலி
*
கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம்
*
புயலால் முடங்கியது புதுச்சேரி; மூவர் பலி; ஒருவர் காயம்
*
மீட்பு பணிகளை துவக்கியது சென்னை மாநகராட்சி
*
கடலூரில் செல்போன் சேவை பாதிப்பு
*
தமிழகத்தில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
புயல், மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
*
புயல், கனமழை நிவாரணம் : முதல் கட்டமாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்தார், முதல்வர் ஜெயலலிதா.
*
புயல், கனமழை நிவாரண நடவடிக்கைகள்: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை
*
சென்னை நிலவரம்:
சென்னையில் இரவு தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. தற்போது, காற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளது. எனினும், மழை நீடிக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பாதிப்பு, சேதம் தொடர்பாக, சென்னை மாநகராட்சியைத் தொடர்புகொள்ள 1913 மற்றும் 25619237 எண்களை டயல் செய்க.
*
சென்னையில் நேற்று இரவு தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. தற்போது, காற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளது. எனினும், மழை நீடிக்கிறது.
சுறைக்காற்றால் இதுவரை 60-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இவற்றில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னை கடலோரப் பகுதிகளில் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த மக்களைத் தங்கவைப்பதற்கு 2 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், சுமார் 3,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு 10,000 உணவுப் பொட்டலங்கள், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை 88 பம்ப்புகள் கொண்டு அகற்றப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாலைகளில் பயணம் மேற்கொள்வோர் கவனத்துடனும், நிதானத்துடனும் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
*
சென்னையில் ஒருவர் பலி
*
வீராணம் ஏரி நிரம்புகிறது: அதிகாரிகள் கண்காணிப்பு
*
கனமழை: சீர்காழி துண்டிப்பு
*
கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு
*
சென்னையில் கடற்கரையோர சாலை மூடல்
*
புயலால் முடங்கியது புதுச்சேரி; ஒருவர் பலி; ஒருவர் காயம்
*
கனமழை காரணமாக புழல் ஏரி திறப்பு
*
விழுப்புரத்தில் புயலுக்கு இருவர் பலி
*
கடலில் தத்தளித்த 100 மீனவர்கள் மீட்பு
*
சிதம்பரம்- கடலூரில் மரங்கள் விழுந்தன
*
நாகையில் இரவு முதல் லேசான மழை
*
பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிகரிப்பு
*
விழுப்புரம் மாவட்டத்தில் மரம் விழுந்து ஒருவர் பலி
*
புதுச்சேரியில் இருந்து அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து நிறுத்தம். புதுச்சேரி மாநிலமே முற்றிலும் முடங்கியது. புதுச்சேரி மற்றும் கிராமப்புறங்களுக்கு உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
*
புயல் வேகம் இன்னும் குறையவில்லை என்கிறது வானிலை ஆய்வு மையம். 120 கி.மீ. முதல் 140 கி.மீ வரை சூறைக்காற்று வீசி வருகிறது.
*
சென்னை மெரினா கடற்கரைச் சாலை மூடப்பட்டது. காவல்துறை தீவிர கண்காணிப்பு.
*
சென்னைக்கு குடிநீர் வழங்கு புழல் ஏரி நிரம்பியதால், அதில் இருந்து உபர் நீர் திறந்துவிடப்பட்டது. வீராணம் ஏரியும் வேகமாக நிரம்புகிறது.
*
நாகை மாவட்டத்தின் சீர்காழியில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
*
கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தம்!
+
தமிழக கடலோரா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் வெட்டு!
*
சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
*
'தானே' புயல் இன்று காலை 7 மணியளவில் கடலூர், புதுச்சேரியில் கரையைத் தொட்டது.
*
புதுச்சேரியில் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
*
தமிழகத்தில் புயல் தொடர்பான அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்க.
*
புதுச்சேரி மற்றும் கடலூரில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
*
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
*
சென்னை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*
சென்னையில் மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிப்பு.
*
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு
*
ரயில்வே சிறப்புத் தகவல் மையங்கள் மூலம் ரயில் வரும், புறப்படும் நேரங்களை அறிய..
சென்னை சென்ட்ரல் - 044-2535 7398, 044-2533 0710
சென்னை எழும்பூர் - 044-2819 0216
புயல் பாதிப்பு பற்றிய தகவல் கொடுப்பதற்கான அவசர உதவி எண் - 1077
No comments:
Post a Comment