தனுஷ் எழுதி பாடிய கொலை வெறி டி பாடல் உலகமெங்கும் பிரபலமாகி உள்ளது. ஆங்கிலம் கலந்து இதை எழுதி இருப்பதால் அனைத்து மொழி ரசிகர்களும் பாடுகிறார்கள்.
பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்பாடலுக்காக தனுசை அழைத்து ஜப்பான் பிரதமருடன் விருந்தில் பங்கேற்க செய்துள்ளார். நேற்று இரவு பிரதமர் இல்லத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது.
மும்பை, கல்கத்தா, ஐதராபாத், நகரங்களில் கொலைவெறி டி பாடல் முக்கிய நிகழ்ச்சிகளில் பாடப்படுகின்றன. தற்போது ஜப்பானிலும் இப்பாடல் பிரபலமாகி உள்ளது. அங்குள்ள நைட் கிளப்பிலும், டிஸ்கோக்களிலும் கொலை வெறி டி பாடலை பாடி ஜப்பானியர்கள் ஆட்டம் போடுகின்றனர்.
அவர்கள் ஓய்திஸ் கொலை வெறி டி ஒய்ட் ஸ்கின்னு கேர்ள்ளு கேர்ள்ளு... கேர்ள்ளு ஹார்ட்டு பிளாக்.. ஜஸ்சு ஜஸ்சு மீட்டு மை பியூச்சர் பிளாக்கு ஹோண்ட்ல கிளாஸ்சு கிளாஸ்ல ஸ்காட்ச்சு ஜஸ்வ்புல்லா டியரு எப்படி லைப்பு கேர்ள் கம்மு லைப்பு ரிவர்சு கியரு என்றெல்லாம் வரிகளை புரிந்து பாடி நடனம் ஆடுகிறார்கள்.
பாகிஸ்தானிலும் இப்பாடலை பாடுகின்றனர். தனுஷ் கூறும்போது கொலை வெறி டி பாடல் இந்தியில் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. அதற்கான வரிகள் தயாராகிவிட்டன. விரைவில் வெளியாகும் என்றார்.
No comments:
Post a Comment