கேரள மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் மலையாள சினிமா நடிகர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், அரசு ஊழியர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இதற்காக அந்தந்த மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள், மேலே வசிப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வறுமைகோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டு மாதம் 25 கிலோ அரிசி, ரூ.25க்கு வழங்கப்படுகிறது. மற்ற கார்டுதாரர்களுக்கு கிலோ அரிசி ரூ.2 விலையில் ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியல் போலியாக பல பெயர்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பட்டியலை சரிபார்க்கும் பணி சமீபத்தில் நடந்தது.
போலியான பெயர் நீக்கம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள உணவு துறை அமைச்சர் சிபு பேபி ஜான், வறுமைகோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சினிமா நடிகர்கள் பெயர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது என தெரிவித்தார். அவர்களது பெயரை பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாகவும் தெரிவித்தார். 23 ஆயிரம் அரசு ஊழியர்கள் பெயரும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. பட்டியலில் இடம் பெற்றிருந்த நடிகர்கள் பெயரை வெளியிட அமைச்சர் மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment