சென்னை ஃபாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்திகள் என்றால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்ற நிலைதான் இருந்து வந்தது. ஆனால் இந்த நிலையை 7-ஆம் அறிவு புரட்டிப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள் சென்னை ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்! கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் தசாவதாரம், எந்திரன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியைத் தாண்டி வசூல் செய்திருந்த நிலையை மாற்றிக்காட்டி விட்டதாம் 7-ஆம் அறிவு. முதல் நான்கு வார முடிவில் சென்னையில் மட்டும் 10.5 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இதன்மூலம் சென்னையில் ரஜினி, கமல், விஜய் என்றிருந்த ராஜாங்கம், தற்போது ரஜினி, கமல், சூர்யா என்று மாறி, விஜய் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.
சரி, மங்காத்தா சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சே என்றால், முதல் நான்கு வார முடிவில் மங்காத்தா சென்னையில் வசூல் செய்தது வெறும் 3.8 கோடி மட்டும்தானாம். ஆனால், அஜீத் பட ரெக்கார்டுகளில் இதுதான் அதிகம் என்கிறார்கள். அதுவே விஜயின் வேலாயுதம் முதல் நான்கு வார முடிவில் சென்னையில் 4.1 கோடியை மட்டுமே ஈட்டியதாக சொல்கிறார்கள். மொத்தத்தில் சூர்யா தற்போது நடித்துவரும் மாற்றான் படத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட உரிமையை இப்போதே 7 கோடிக்கு துணிச்சலாக விலை பேசி வருகிறார்களாம்!
No comments:
Post a Comment